யாருமற்ற சிலுவையில் : கவிதைகள்- ஜலீலா முஸம்மில் yaarumatra-siluvail-kavithaigal-jaleela-musammil

யாருமற்ற சிலுவையில் : கவிதைகள்- ஜலீலா முஸம்மில்


யாருமற்ற சிலுவையில்

அறையப்பட்டிருக்கின்றன
சில நேசத்தின் ஏமாற்றங்கள்

யாருமற்ற சிலுவையில்
மெதுவாகத் தூங்குகிறது
உயித்தெழ முடியாத ஆசைகள்

யாருமற்ற சிலுவை
அடியிலே தீர்வின்றி
மீளாத்துயர்கள்

யாருமற்ற சிலுவையில்
இரும்பாணிகள் கொண்டு
இறுக்கப்பட்டு
இல்லாமல் போன பிரியங்கள்

ஆரவாரம் துறந்து
ஆளரவமற்ற
சிலுவைச் சாளரத்தின்
வழியே விடை கொடுத்து
வழியனுப்புகிறது
வாழ்வின் நிசப்தம்.

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்-இலங்கை