20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா முதல் ஜப்பான் வரை பாமர மக்களைச் சிந்திக்கத் தூண்டிய எழுத்துக்களில் ஜெர்மன் மொழியில் 19ம் நூற்றாண்டின் (1840களில்) நடு கட்டத்தில் எழுதப்பட்ட இரண்டு குறிப்பிடத்தக்கதாகும். 21ம் நூற்றாண்டிலும் இன்றும் அந்த எழுத்துக்கள் பல மொழிகளில் வெளியாகி உலகெங்கும் பாமரர்கள் கையில் தவழுகின்றன. ஒன்று கம்யூனிஸ்ட் அறிக்கை மற்றது எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் ஆகும்..
லீக் ஆஃப் ஜெஸ்ட் என்ற ஐரோப்பியத் தொழிலாளர்களின் அமைப்பு உறுப்பினர்களுக்குக் கம்யூனிஸ்ட் அறிக்கையைப் படிக்கத் தூண்ட இந்த கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற கேள்வி பதிலை எங்கெல்ஸ் எழுதினார். . அன்றைய அடக்குமுறை நிலையில் இது ரகசியமாக உறுப்பினருக்குச் சுற்றுக்கு விடப்பட்டிருக்க வேண்டுமென தெரிகிறது . அன்றைய தேதியில் புரட்சியாளர்கள் ஆயுத புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையே மையமாகக் கருதினர் அரசியல் பொருளாதார கோட்பாட்டில் தெளிவற்றவர்களாக இருந்தனர். 30 வயதைத் தாண்டாத மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கம் பொருளாதார கோட்பாட்டில் தெளிவற்றவர்களாக இருக்கிறவரைப் புரட்சி நீடிக்காது என்பதை உணர்ந்தனர். அதன் விளைவாகப் புரட்சியின் இலக்கு முதலாளித்துவ சொத்துடமை வடிவை அகற்றுவது என்பதாக இருக்கவேண்டும் என்று கருதினர்.
Abeer Abdullah's review of The Principles of Communism
அது பற்றிய குழப்பத்தை அகற்றுவதற்கு முக்கியத்துவம். கொடுத்தே இருவரும் வாழ்ந்தனர். கருணையற்ற சொத்துடமை உழைப்பாளி மக்களைக் குழப்பக் கூடாது என்பதை மனதில் கொண்டே கம்யூனிச கோட்பாடு எங்கெல்சால் எழுதப்படுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையையும் எங்கெல்ஸ் எழுதியதையும் இனைத்துப் படிப்பவர்கள் இதனைத் தெளிவாக உணர்வர். பொருளாதார நெருக்கடி சுழற்சி என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயல்பே தவிரப் பகல் இரவு வருவது போல் இயற்கையின் விதி அல்ல என்பதையும் கண்டுகொள்வர். எங்கெல்சின் கம்யூனிச கோட்பாடு என்ற இந்த எழுத்தே முதலாளித்துவ பொருளாதார கோட்பாட்டின் கருணையற்ற தன்மையைப் பாட்டாளிகளுக்கு விளக்கியதோடு சொத்துடமை வடிவங்கள் மாறுவது பற்றிய பார்வையைத் தெளிவாக்குகிறது.. முதல் உலக யுத்தம் ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க்க யுத்த எதிர்ப்பு உணர்வு கம்யூனிச உணர்வாக மேன்மையுற்று மேலை நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின.
ரஷ்யாவில் ஆட்சியைப் பிடித்தது. அதற்கடுத்து ஜெர்மனியில் பாட்டாளி வர்க்க இயக்கம் பலமாக இருந்ததால் 1914ல் பெர்ன்ஸ்டீன் எங்கெல்ஸ் எழுதிய இதனைச் சிறு பிரசுரமாக வெளியிடுகிறார். 1925ம் ஆண்டிலே அமெரிக்கத் தொழிலாளர் கட்சியின் இதழான டெய்லி ஒர்க்கர் என்ற பத்திரிகை பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகளை மாக்ஸ் பெடாக்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டது. பின்னர் அமெரிக்க மார்க்சிய அறிஞர் பால் ஸ்வீசியும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதனை மு.சிவலிங்கம் பழகு தமிழில் இன்று தருகிறார்.
The Communist Manifesto: Summary & Analysis - Video & Lesson Transcript | Study.com
இந்த புத்தகத்தின் சிறப்பென்ன? ஒருவன் வாழ்கிற காலகட்டத்திய சமூக இயலைப் பாமரனும் புரியும்படி சொல்வதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தொலை நோக்கோடு எழுதப்பட்டதால் இன்றும் முதலாளித்துவத்தைத் துடைத்தெறியும் செயலுக்கு வழிகாட்டும் கோட்பாடுகளை உருவாக்கும் கருத்து பெட்டகமாக உள்ளது .அதனால் கம்யூனிச எதிர்ப்பு முகாமின் தாக்குதலுக்கு இதுதான் முதலில் உள்ளாகிறது.
Friedrich Engels' Irish muse | A Blast From The Past

     20 நூற்றாண்டில் இதைப் படிக்காமல் கம்யூனிஸ்ட் அறிக்கையைப் பாமரன் புரிவது சிரமம் என்பதால் இரண்டும் சேர்ந்தே பதிப்பிக்கப்பட்டன. இந்த எழுத்து எப்படி கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்ட தோழர் ஈ.வெ. ராவின் கண்ணில்படாமல்  போனது என்பது  தெரியவில்லை. இதனை வரலாற்றாய்வாளர்கள் கண்டுபிடிக்க கடமைப்பட்டவர்கள். ஒரு வேளை கண்ணில் பட்டிருந்தால் இதைத்தான்  முதலில் அவர் தமிழில் தந்திருப்பார். சொத்துடமை பற்றிய குழப்பத்தைப் போக்கும் போர்வீரனாக உயர்ந்திருப்பார்.

  நல்ல வேளையாக பாரதி புத்தகாலயம் இன்றையத் தமிழில் கொண்டுவந்தது பாராட்டிற்குரியது சமத்துவ பொருளாதார கட்டமைப்பிற்காகப் போராடுவோருக்கு  சித்தாந்த ஆயுதத்தை. கூர்மைப் படுத்த உதவுகிற பிரசுரமாகவும் உழைப்பாளிகளின் சிந்தனையைத் தூண்டுகிற கையேடாகவும் இது இருப்பதைப் படிப்பவர்கள் உணர்வர். 173 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும் இதை படிக்கிற வாசகர்  கொரானா காலத்தில் யாரோ எழுதியதாகவே கருதுவர்   இதில் வரும் 24 கேள்விகளும் அதற்கான பதில்களும்  இன்றைய கட்டத்திலும்  பொருந்துகின்றன..சில கேள்விகளை மட்டும் கீழே தரப்படுகிறது.

  கம்யூனிசம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது? பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?  பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்  தொழில் புரட்சியின் மேலான விளைவுகள் எவை? இந்தப் புரட்சி ஒரு நாட்டில் மட்டும் நடைபெறுவது சாத்தியமா? தற்போது நிலவும் மதங்களைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை என்ன ?

30 Fascinating And Interesting Facts About Friedrich Engels - Tons Of Facts

தனியார் சொத்துடைமை ஒழிப்பு பற்றி

தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாக இருக்கவில்லையா?  தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா?  தனியார் சொத்துடைமையை ஒரே அடியில் ஒழித்துக்கட்டுவது சாத்தியமா?  இதில் எந்த கேள்வியும் இன்றைய நிலைக்கு பொருந்தாது என்று கூறமுடியுமா?

 முதலாளித்துவ நிபுணர்கள் இந்த எழுத்தைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை அறிவது அவசியம் பிரிட்டீஷ“ என்சைக்கிளோ பிடியா கூறுகிறது

19ம் நூற்றாண்டிலே ஐரோப்பிய முதலாளித்துவம் “பசியை” அடிப்படையாகக் கொண்ட பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கிய கட்டத்திலிருந்த ஐரோப்பியச் சமூகத்தின் கருணையற்ற காலாவதியான கட்டத்தை உள்ளதை உள்ளபடி பாமரனும் புரிகிற மொழியில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணம். என்று பூசி மொழுகுகிறது.  அதாவது பசியில் தவிக்கும் பாட்டாளி வர்க்கத்தை உருவாக்காமலே முதலாளித்துவம் இன்று ஜீவிப்பதாக எழுதி மகிழ்கிறது. முதலாளித்துவம் கனிவோடு  இருப்பதாகத் தம்பட்டம் அடிக்கிறது. 19ம் நூற்றாண்டில்   ஐரோப்பிய முதலாளித்துவம் சொந்த நாட்டு மக்களைப் பசியில் தள்ளிச் சுரண்டியது அதனால் வர்க்க போராட்டம் தலைதூக்கியது.. அதை சமாளிக்க  ஆசிய ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக்கியது அதுவும் வர்க்க போராட்டத்தால் தாக்குதலுக்குள்ளான போது காலனி ஆதிக்கத்தால் தன்னை  நிலை நாட்டிக் கொண்டது  சோவியத் புரட்சிக்குப் பிறகு வர்க்க போராட்டம் காலனி ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டியது. இதே காலத்தில்

 முதலாளித்துவம் பல நாடுகளில் பரவியதால்  லேபர் மார்க்கெட்டை உண்டாக்கி உலகளவிலும் உள்நாட்டிலும் எமிகிரன்ட் லோபர்  புலம் பெயர் தொழிலாளர்கள் என்னும் பாட்டாளிவர்க்க பிரிவை பசியில் தள்ளுகிறது. இன்று கொரோனா தொற்று முதலாளித்துவத்தின் குணம் ஈவிரக்கமற்ற பணவடிவு சொத்து குவிப்பே தவிர மானுடத்தை ஆரோக்கியமாக வாழவைக்கும் ஆற்றலோ,கருணையோ அதற்கு கிடையாது என்பதைக் காட்டிவிட்டது.

 சொத்துடமை உணர்வைப்  பேண முதலாளித்துவம் பணவடிவில் யார் வேண்டுமானாலும் சொத்து சேர்க்கலாம் நிலையை உருவாக்கியுள்ளது.  நிறுவனப் பங்குகளாக. தங்கமாகச் சொத்தை வைத்திருப்பவர் பட்டியலை வெளியிட்டு முதலாளித்துவமே சிறப்பானது என்று தம்பட்டம் அடித்தது. 2008ம் ஆண்டு பூர்சுவா சொத்து அது ஒரு மாயை நீர் குமிழி என்பதைக் காட்டிவிட்டது. இன்றும் சொத்துடமை பற்றிய குழப்பம் மக்களிடையே நீடிப்பதால்  டிரம்ப்  சொத்துடமையை அகற்றும் கம்யூனிசம் பரவிவிடுமென்று பயமுறுத்தியே சீன எதிர்ப்பை கக்குகிறார்.

Socialism, Utopian and Scientific: A Reading Guide | Socialist Revolution

எங்கெல்சின் இந்த சிறிய பிரசுரத்தின் கேள்விகளும் பதில்களும் முதலாளித்துவ கட்டத்தை உலகம் தாண்டுகிறவரை பாட்டாளி வர்க்கத்தின் சிந்தனையைத் தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது.. பூர்சுவா மேதைகள் ( ஆன்மீக அடிமைகள்) உருவாக்கும் சொத்துடமை பிம்பங்களை நம்பி மோசம் போவதை தன் நம்பிக்கையோடு  தடுக்கும் கேடயமாகும்.  பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக அரசு நீடிக்கிற பொழுதுதான் ஜனநாயகம் நிலைக்கும் என்ற உண்மையை உணரவைக்கும் அறிவியலாகும்  எனவே  பாரதி புத்தகாலாயம் வெளியிட்ட

 கம்யூனிசத்தின் கோட்பாடுகள் -பிரெடெரிக் எங்கெல்ஸ் | தமிழில்: மு.சிவலிங்கம்

என்ற பிரசுரத்தை வாங்குங்க. படிங்க. கேள்விகளை உங்களுக்குள்ளே கேளுங்க  உங்களைச் சுற்றிநடப்பதைவைத்து பதிலை தேடுங்க நீங்களும் எங்கெல்சாக மாறுவீர்கள். இந்தியா சோசலிச நாடாக உயர அந்த மாற்றமே தேவை. (பாரதி புத்தகாலாயத்தையும் காப்பாற்றுங்க)

புத்தகம் வாங்க கிளிக் செய்க:  கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பிரெடெரிக் எங்கெல்ஸ் | தமிழில்: மு.சிவலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *