ஐ.நா.மன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆற்றிய உரையும் மற்றும் அவர் பேசுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையும், வெவ்வேறாக இருந்தது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும். மோடி, உலக அளவில் இந்தியாவின் சொந்த பங்கு குறித்த கவனம் செலுத்தி, ஐ.நா.-வை சீர்திருத்த வேண்டிய தேவை குறித்தும், இந்தியாவிற்குப் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய விதத்தில் பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்பட வேண்டியது குறித்தும் கவனம் செலுத்தினார். இம்ரான்கான், பாகிஸ்தான் குறித்துப் பேசியது மிகவும் குறைவு. மாறாக இந்தியாவிற்கு எதிராக அதிகமான அளவில் தாக்குதல் தொடுத்திருக்கிறார். மோடி, பாகிஸ்தான் குறித்து எதுவும் கூறவில்லை. அவர் பயங்கரவாதம் தொடர்பாக பரந்த சொற்களில் பேசினார். இம்ரான் கானின் பேச்சுக்கு, இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர்தான் பதிலடி அளித்துள்ளார். அவர், இம்ரான் கான் உரையை, “இடைவிடாது ஆத்திரத்துடன் (“incessant rant”) அமைந்திருந்தது என்றும், “பொய்கள், தவறான தகவல்கள் மற்றும் போர்க்குணம் கொண்டதாக இருதந்தன” என்றும் விவரித்தார்.

UN general assembly session: Imran Khan lashes out at Prime Minister  Narendra Modi over J&K

இம்ரான்கான் இந்தியாவைப்பற்றி, அவர் ஆற்றிய உரையில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக இருந்தது. அவர் தன்னுடைய உரையில் அவர் தன் முந்தைய உரைகளின்போது இழிவுபடுத்திக் கூறியவற்றை மீண்டும் கூறினார். மோடி அரசாங்கம், ஆர்எஸ்எஸ்-இன் “தீவிரவாத சித்தாந்தத்தை” (extremist ideology) ப்பின்பற்றி “இஸ்லாமியவிரோத அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக” (“state sponsorship of Islamophobia”)க் குற்றஞ்சாட்டினார். ஆர்எஸ்எஸ் இயக்கம் அத்தகைய தீவிரவாத சித்தாந்தத்தை, “இனத் தூய்மை மற்றும் மேலாதிக்கம்” (“racial purity and supremacy”) மற்றும் நாட்டில் சிறுபான்மையினரைத் “தூர்வாரும்” (“cleanse”) திட்டம் போன்ற நாஜிக்களின் கருத்தாக்கங்களால் “உத்வேகம் பெற்றதாகவும்”
அவர் குறிப்பிட்டார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும், நூரம்பர்க் சட்டங்களுக்கும் இடையே தீவிரமான ஒப்பீடுகளைச் செய்திட்டார். அதேபோன்று அஸ்ஸாமில் உள்ள அடைப்பு முகாம்கள், நாஜி ஜெர்மனியிலிருந்த “வதை முகாம்களை” (“concentration camps”) தீவிரமான முறையில் ஒப்பிட்டிருப்பதாகவும் கூறினார்.

அடுத்து அவர், ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு பேசும்போது, அநேகமாக அவர் சென்ற ஆண்டு ஆற்றிய உரையையே பிரதிபலித்ததுடன், அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை நீர்த்துப்போகச்செய்திட நடவடிக்கைகள் எடுத்திருப்பதும், அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்திருப்பதும் அரசே அங்குள்ள மக்களைப் “படுகொலைகள்” (“genocide”) புரிந்து, “இறுதித்தீர்வு” (“final solution”) காண்பதற்கு ஒத்திருக்கிறது என்றும் வசைமாரி பொழிந்தார். இவை அனைத்தும் ஐ.நா.சட்டங்களை மீறியசெயல்கள் என்றும் கூறினார்.

Kashmir crisis: Pakistan takes a diplomatic gamble with India | Asia| An  in-depth look at news from across the continent | DW | 08.08.2019

இந்தியாவில் “அரச பயங்கரவாதம்” (“state terrorism”) மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, அவர் தன்உரையை முடிக்கும்போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கருகே நிலவும் பதற்றநிலைமைகளைச் சுட்டிக்காட்டியதுடன், போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்படுவது அதிகரித்திருப்பதாகவும், “அணு சுடருறு வெப்பநிலை” (“nuclear flashpoint”)யாக காஷ்மீர் குறிப்பிடப்பட்டிருப்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் கூறி தன் உரையை நிறைவு செய்திருக்கிறார்.

(நன்றி: தி இந்து தலையங்கம், 29.09.2020)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *