குறிப்பு : இப் புத்தகம் பற்றிய எனது பார்வையும் அதையொட்டி உருவான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது

“முதல் ஆசிரியர்” என்ற இந்நாவல் சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் சிங்கிஸ் ஜத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல். இதில் தனது குக்கிராம மக்கள் எழுத்தறிவு பெற எப்படிப் போராட வேண்டி இருந்தது. அந்த கிராமத்தின் முதல் பள்ளி ஆசிரியர் தூய்ஷனை மாபெரும்  மனிதனை,கல்வியின் தந்தையாய்,சேவையின் சின்னமாய்ச் சித்தரிப்பதும் அல்டினாய் என்ற பெண்ணின் பாத்திரப் படைப்பு மெய் அன்பைக் குருதியுடன் அடித்தளம் அமைந்திருப்பதும் ஆசிரியர் தூய்ஷன் மீது அல்டினாய் கொண்ட அன்பைத் தூய்மையானதாய் இளமையின் நினைவுச் சின்னமாய் மிளிரச்செய்து இக் கதையில் இழையோடு வைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

சோவியத் நாட்டைச்சேர்ந்த ஒரு குக்கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி திறப்பு விழவிற்கு அந்த ஊரைச் சேர்ந்த முதல் பெண் விஞ்ஞானியை அழைக்கின்றனர். ஊர்க்குடி சிகப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்கிறது. அதனைத் தொடர்ந்த பள்ளியின் திருப்பு விழாவில் அவரை பாராட்டியபடி தலைவரிடம் உள்ளூர் இளஞ்சன் ஒருவன் உள்ளே வந்து தந்தியைக் கொடுத்தார். அது அந்த பள்ளியின் முன்னால் மாணவர்கள் எழுதிய வாழ்த்து மடல். அதை எடுத்துவந்தவர் தூய்ஷன். இதை அறிந்த அல்தினாய் சுலைமானவ்னா அங்கிருந்து புறப்படுகிறார்.பின் அவர் ஒரு கடிதத்தை ஊர்த் தலைவருக்கு அனுப்புகிறார். அதில் அவரின் கல்வி படிப்பைப்பற்றிய வலி கலந்த அன்பைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

1924ஆம் ஆண்டில் கிராமத்தின் கூட்டுப்பண்ணை உள்ள இடத்தில் நாடோடிகளுக்குப் படிப்பு சொல்லித் தர தூய்ஷன் என்பவர் வருகிறார். கிராம மக்களுக்குக் கல்வி என்ற வார்த்தை மிகவும் புதிதாக இருந்தது. தூய்ஷன் சென்று ஊர் மக்களிடம் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள் என்கிறார். அந்த கிராமத்தில் பெற்றோர்யின்றி எனது ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில் வளர்ந்தேன்.

மலைக் குன்றின் மீது உள்ள ஒரு கொட்டகையில் பள்ளியை கடும் இடர்பாடுகளுக்கிடையில் பள்ளியைத் திறந்தார். பள்ளியின் முதல் நாள் வைக்கோல் படுக்கை மீது  கிழிந்த பாவாடையுடன் கைகளைக் கொண்டு மறைத்தபடி ஆசிரியரை நோக்கினேன். அந்த கொட்டகையில் நான்கு சுவற்றில் ஒரு திசையில் ருஷ்யாரின் படத்தைச் சுட்டிக் காட்டி “இவர் தான் லெனின்”. பின்னர் ஏனோ அம்மாதிரியான படம் என் கண்களில் படவேயில்லை, எனக்கு நானே ‘தூய்ஷன் படம்’ என்று பெயரிட்டுக் கொண்டேன்.

அந்தப் படத்தை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கவேயில்லை.  அந்த படத்தில் லெனின்  தொளதொளவென்ற இராணுவ ஆடையில், மெலிந்து, நன்கு வளர்ந்த தாடியுடன் காணப்பட்டார். அவருடைய காயம்பட்ட கை கட்டில் தொங்கியது. அந்த படத்தில் அவரது பார்வை ‘குழந்தைகளே, எவ்வளவு அற்புதமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது தெரியுமா…” என்று  எங்களை நோக்கிக் கூறுவதைப் போலிருந்தது. அந்த நிசதப்தமான நிமிடத்தில் அவர் உண்மையிலே என் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதைப் போல் எனக்குப் பட்டது. அன்று தூய்ஷன் எங்களுக்கு லெனின் போன்றே தெரிந்தார்.

அவர் தனக்குத் தெரிந்த அனைத்தும் சொல்லி தருவதாகச் சொன்னார். அவர் அவருக்கு உரித்தான தனித்தன்மையுடன் எங்களுக்கு எழுதுகோல் பிடிப்பதிலிருந்து அனைத்தும் கற்றுக் கொடுத்தார். நாங்கள் ஒருவராக எழுத்துகளைப் படித்து நாங்கள் ‘அம்மா’ ,’அப்பா’ என்ற எழுத கற்றுக்கொள்ளும் முன்னரே, ‘லெனின்’ என்று காகிதத்தில் எழுதினோம். எங்களுடைய அரசியல் அகராதியில் ‘நிலப்பிரபு’, ‘கொத்தடிமை’, ‘சோவியத்துகள்’ போன்ற வார்த்தைகள் அடங்கியிருந்தன ஒரு வருடம் கழித்து ‘புரட்சி’ என்ற சொல்லை எழுதச் சொல்லி தருவதாக துய்ஷேன் வாக்களித்தார்.அவர்  பணியின் நிமித்தமாக மாஸ்கோ சென்று இருந்தார்.

அவர் இல்லாதது எதோ ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தியது.  அது ஒரு குளிர்காலம் வெண்பனி விழும் வரை நாங்கள், குன்றின் கீழ் கொண்டிருந்த ஆற்றைக் குறுக்காக நடந்து கடந்தோம். பின்னர் கடப்பது இயலாததாகியது – சில்லிட்டுப் போன நீர்க் கால்களை உறையச் செய்தது. சின்னஞ் சிறு குழந்தைகள் பெரிதும் கஷ்டப்பட்டனர். அவர்களின் கண்களில் கண்ணீர் கூட வந்தது. அப்போது தூய்ஷன் அவர்களைத் தன் கரங்களால் தூக்கச் சென்றார். ஒருவரை முதுகில்  ஏற்றிக்கொண்டு,இப்படியாக எல்லோரையும் ஆற்றைக் கடந்து அழைத்துச் சென்றார்.

அதைக் கண்ட ஊர் மக்கள் எள்ளி நகையாடினர். ஒரு நாள் ஆற்றைக் கடந்து போது திடீரென்று காலில் வலியால்  நான் துடித்தேன். வாய்திறந்து கத்தவோ , நிமிரவோ என்னால் முடியவில்லை. என்னைக் கண்டதும் என் அருகில் வந்து, கைகளால் தூக்கிக்கொண்டு கரைக்கு ஓடி,அங்கே தன் மேற்கோட்டை விரித்து அதன் மீது அமரச் செய்தார்.நீலம் பரிந்து உறைந்து போது என் கால்களைப் பிடித்து அழுத்தி வாயருகே எடுத்துச்சென்று மூச்சுக் காற்றால் சூடேற்றினார்.

அப்போது என்னைப் பார்த்து “என் இனிய சிறு பெண்ணே” என்னை அன்போடு பார்த்தப்படிய அவர் கூறினார். ‘ உனக்கு நல்ல திறமை இருக்கிறது… என்னால் மட்டும் உன்னை நகரத்திற்கு அனுப்ப முடிந்தால் எப்படியிருக்கும் தெரியுமா! உனக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் அமையும் தெரியுமா!” அவரின் வார்த்தைகள் ஆசிரியர், மட்டும் என் கூடப் பிறந்த சகோதரா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.என்னால் மட்டும் அவருடைய கழுத்தைச் சுற்றி வளைத்து, இறுகக் கட்டிப்பிடித்து, கண்களைச் சுருக்கிக்கொண்டு உலகிலேயே மிக அற்புதமான வார்த்தைகளை அவருடைய காதுகளில் சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ஓ,கடவுளே, இவரை என் சகோதரனாக மாற்றேன்”.

நாங்கள் அனைவரும் எங்களுடைய ஆசிரியரை அவருடைய மனிதாபிமானத்திற்காக, நல்ல எண்ணங்களுக்காக, எங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய கனவுகளுக்காக நேசித்தோம். திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் சோர்ந்த  முகத்துடன் எங்களைப் பள்ளியில்  குழந்தைகளே “எழுந்து நில்லுங்கள்“, தொப்பிகளைக் கழட்டுங்கள்” என்றார். நாங்கள் உடனே கழட்டினோம். அவை எல்லாம் எதற்கு என்று எங்களுக்குப் புரியவில்லை. அப்போது ஆசிரியர் தடிமல் பிடித்த குரலில் விட்டுவிட்டு “லெனின் இறந்து விட்டார்” அப்போது உலகம் முழுக்க மக்கள் துக்கம் அனுசரிக்கின்றனர்.

நீங்களும் அந்தந்த இடத்திலேயே நின்று தங்களின் அஞ்சலியைச் செலுத்துங்கள் என்றார். உலகம் முழுவதும் துக்கத்தில் மூழ்கிய அந்தச் சமயத்தில், -மக்கள் என்னும் மாகடலின் துளிகளாகிய நாங்களும் எங்களுடைய ஆசிரியருடன் சேர்ந்து, பள்ளி என்று அழைக்கப்பட்ட, யாருக்குமே தெரியாத, உறைந்து போன கொட்டகையில் மௌன அஞ்சலி செலுத்தினோம். நாங்கள் தான் அவருக்கு நெருகியர்வர்கள், அவருடைய இழப்பு எங்களைத்தான் மிகவும் சோகமயமானது என்று மனதிற்குள் எண்ணி அவர்க்குப் பிரியா விடை தந்தோம்.எங்களுடைய லெனினோ தனது சற்றே தொளதொளவென்ற இராணுவ மேலாடையில், கை கட்டுப்போட்ட நிலையில் சுவரிலிருந்து எங்களைப் பார்த்து “ குழந்தைகளே, எவ்வளவு அற்புதமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது தெரியுமா!” என்று கேட்பது போல் பட்டது. பிறகு ஆசிரியர் கண்களைத் துடைத்துக்கொண்டு கூறினார். “ நான் மாவட்ட தலை நகருக்குச் செல்கிறேன். நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப் போகிறேன். மூன்று நாட்கள் கழித்துத் திருப்புவேன்”….

அந்த மூன்று நாள்கள்தான் நான் கழித்த குளிர்கால நாள்களிலேயே மிகக் கடுமையான நாட்கள். மூன்றாம் நாள் இரவு அவரை தேடிய கண்கள் அங்கும் இங்கும் பயணித்தது. ஏனோ, அவருக்கு எதுவும் ஆகக் கூடாது என்ற எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது. உறைபனி, கடும்குளிர் ,ஓநாய்களிடமிருந்து தப்பி ஊரை வந்தடைந்தார். குளிரில் அவர்க்குக் காய்ச்சலில் கூட எங்களைப் பற்றி சிந்தனைகள் “நான் இன்றைக்கு  வருவதாக வாக்கு அளித்தேன். நாளை முதல் படங்களை ஆரம்பிக்கவேண்டும் என்றார்.அவரை பார்த்ததும் கண்கள் ஆறரைப் போன்று  கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. என்னை அழைத்து ஏன் அழுகிறாய் நீ பெரியவாளச்சே…. எங்கே, என்ன பாரு பாக்கலாம்….”

நான் அவரை இறுக்கக் கட்டிப்பிடித்து, அவருடைய தோளில் என் ஈரமான, சூடான முகத்தைப் புதைத்து, அடக்க முடியாமல் தேம்பி அழுதேன், என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பனிக்காலம் மறைந்து கொண்டிருந்து. வசந்தம் நீலநிற  வானத்தைத் தூது அனுப்பியது. அது தான் என் இளம் பருவத்தின் முதல் வசந்தகாலம். அதை விட எங்களுடைய பள்ளிக்கூடம்.இருந்த குன்றிலிருந்து அற்புதமாகத் தெரிந்தது. வசந்தம் பிறந்ததையடுத்து எங்கள் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. என் மகிழ்ச்சி என் சித்திக்குப் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் என்னைத் திட்டினாள்.

ஒரு நாள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு ஓடி வந்த போது, முற்றத்தில் எதோ இரண்டு குதிரைகள் நின்றன. வாசலில் நுழையும் பொழுதே சித்தியின் செயற்கையான சிரிப்பு என் காதில் நாரசமாகப் பாய்ந்தது: அன்று அவளின் பாசமும் எனக்கு புதிதாக இருந்தது. சுமார் இரண்டு மணி நேரம் கடந்து அவர்கள் புறப்பட்டனர். பின்னர் அவளின் வழக்கமான வசவு ஆரம்பமாயின. மறு நாள் பள்ளியில் தூய்ஷனின் முகம்  இரண்டிருப்பதையும், அவர் ஏதோ கவலையில் இருப்பதாய் புரிந்து கொண்டேன். அவர் ஏனோ என் பக்கமே திரும்பாதையும் கவனித்தேன். பாடம் முடித்தும் என்னை அழைத்து நீ வீட்டிற்கு போக வேண்டாம். அப்போது தான் அவள் என்னை யாருடனோ  மணம் முடிக்க விருக்கிறார் என்பதை உணர்தேன்.

நான் அச்சத்தால் உறைந்து போனேன்.அப்போது கூறியது அல்தினாய், நீ பயப்படாதே!”  அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். “ நான் உன்னோடன் இருக்கும் போது நீ யாரைக் கண்டும் அஞ்ச வேண்டாம். வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு வா,படி, வேறெதைப் பத்தியும் யோசிக்காதே….. என்றார். அன்று இரவு பயம் என்னை ஆட்கொண்டது. மறுநாள் பள்ளியில் என் கவனத்தைத் திருப்புவதற்காக இரண்டு மரக் கன்றுகளைக் கொண்டு வந்து நடுவோம் என்றார். நீ பெரியவள் ஆனதும் இந்த பாப்ளார் மரம் வளர்ந்து குன்றின் அழகை மேலும் மேம்படுத்தும். நாளை மறுநாள் நான் மாவட்ட தலைநகருக்கு போறேன். அங்கு உன்னைப் பற்றி பேசுறேன். ஒருவேளை உன்ன நகரத்துக்கு அனுப்ப ஏற்பாடு செஞ்சாலும் செய்வேன். நீ போறீயா? நீங்கள் சொல்றபடி செய்வேன் என்றேன் நான்.

மறுநாள் நகரத்து வாழ்க்கைபற்றி சிந்தனையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருந்த பொழுது, எங்களுடைய இடிந்த பள்ளிச் சுவருக்கு அப்பாலிருந்து திடீரென்று காதில் விழுந்த குதிரைகளின் குளம்படிச் சத்தம்  என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அச்சத்தம் பள்ளியின் சுவரில் இடியாய் விழுந்தது. என் சித்தியும் என்னை மணம் முடிக்க வந்த ஆளுடன் துய்ஷேனாய் நோக்கி அவளின் கால்கள் சென்றது. பின் துய்ஷேன் ‘உங்களுக்கு என்ன வேண்டும்?” அதற்கு அவள் உனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. என்னோட பொண்ண கல்யாணம் செஞ்சு தரப் போகிறேன். சித்தி என்னை நோக்கி வர, துய்ஷேன் அவள் பாதையில் குறுக்கிட்டார். இங்க பள்ளிக்கூடச் சிறுமிகள் தான் இருக்காங்க, யாருக்கும் கல்யாண வயசு வரலே!” உறுதியோடு, அமைதியாகச் சொன்னார். இதைக் கண்டுகொள்ளாமல் சித்தி அந்த தொப்பி கரனை அழைத்து என்னை இழுத்து வரும்படி சொன்னால். அவனுக்குப் பின் கனமான கம்புகளைக் கையிலேந்தியபடி இன்னும் அறுவர் குதிரைகளிலிருந்து இறங்கி வந்தார்.ஆசிரியர் இடத்தை விட்டு அசையவில்லை. “ அட கேடு கேட்ட நாயே, நீ என்ன மத்த பொண்ணுகள பொண்டாட்டியாட்டம் நடத்துறே? எங்கே, இடத்தவிட்டு நகரு.”

அந்த தொப்பிக்காரன் கரடியைப் போலச் சவுக்கை ஆட்டியபடியே ஆசிரியர்  மீது பாய்ந்தான். மற்ற குழந்தைகள் அலறியபடியே என்னிடம் ஓடி வந்தனர்.அடி தாளாமல் கதவில் பிளவுகள் ஏற்பட்டன. என்னுடன் ஒட்டிக்கொண்ட சிறு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, சண்டைபோட்டுக் கொண்டிருந்தார்களிடம் பாய்தேன்.

ஆசிரியரை விடுங்க ! அடிக்காதீங்க! இதோ நான் இருக்கேன், என்ன கூட்டிவிட்டு போங்க, ஆசிரியரை மட்டும் அடிக்காதிங்க!”அவர் உடல் முழுவதும் ரத்தம். தரையில் கிடந்த பலகையை எடுத்து ஆட்டியபடியே கத்தினார்.குழந்தைகளே, கிராமத்துக்கு ஒடுங்க ! அல்தினாய் ஓடு! கத்தலில் அவருக்குப் புரையேறியது. அவர் கையை அடித்து உடைத்தனர்.  என் இரு கைகளில் கட்டிப்போட்டு குதிரையில் ஏற்றினான்.

அந்த நேரத்தில் குதிரையின் பின்னால் அல்தினாய் என்று கத்தியபடி ஓடிவந்தார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எப்படி என்னைக் கொண்டுவந்தார்கள் என்பது நினைவில் இல்லை. ஒரு கூடாரத்தில் நான் கண் விழித்தேன். கூடாரத்தின் நடுவிலிருந்து ஓட்டை வழியே பார்த்த போது அமைதியான, கவலையுற்ற முன்னிரவு நட்சத்திரங்கள் தெரிந்தன.அருகே எங்கோ ஆறு ஓடும் சத்தம் கேட்டது. ஆட்டு மந்தைகளைக் காவல்காக்கும் இரவு நேர இடையர்களின் பேசுக் குரல்கள் காதில் விழுந்தன. அணைந்து போன நெருப்பின் ஒரு முதிய பெண்ணொருத்தி உட்கார்ந்திருந்தாள். அந்த தொப்பிக்காரன் அப்பெண்ணை அதட்டியபடி அவள சமாதானப்படுத்து,அவளுக்கு புரிய வை. இல்லாவிட்டால்,எப்படி இருந்தாலும் அவளுக்குப் புரிய வை. இல்லாவிட்டால், எப்படியிருந்தாலும் அவளோட அதிகம் பேச்சு கிடையாது.

அப்பெண்மணி என்னிடம் எதுவும் பேசவில்லை.  ஒருவேளை அவள் ஊமையா? குளிர்ந்து போன சாம்பலைப் போன்ற மங்கிய அவள் விழிகள் உயிரற்ற  கண்களைப் பார்த்த பொழுது நான் வாழவில்லை. எதோ கல்லறையில் இருக்கின்றேன் என்ற உணர்வு ஏற்பட்டது. ஏ சித்தியே, நீயும் உன் இருண்ட மனதும் ஒழிஞ்சு போங்க! என் கண்ணீரும் ரத்தமும் உன்னை மூச்சுத் திணற வைக்கட்டும்!… அன்றிரவு, எனது பதினைந்தாவது வயதில் கற்பைப் பறிகொடுத்தேன்….. அந்தப் பாதகனின் குழந்தைகளை விட நான் சிறியவளாயிருந்தேன்…மறுநாள் என்ன நடந்தாலும் சரி தப்பியோடுவதென்று முடிவு செய்தேன். நான் வழியில் தொலைந்து போனாலும், என்னைத் துரத்திவந்து பிடித்தாலும், என்னவனாலும் சரி, ஆனால்  துய்ஷேனைப் போல் நான் கடைசி மூச்சு உள்ள வரை போராடப் போகிறேன்.

நான் சத்தமின்றி வாசல் நோக்கிச் சென்றேன். கதவு கயிற்றில் கட்டப்பட்டது. எவ்வளவு முயன்றும் கயிற்றை அவிழ்க்க முடியவில்லை. வெறுப்பில், கூடாரத்தின் தரையைத் தோண்ட ஆரம்பித்தேன். என் செயல் முட்டாள்தனமானது என்று தெரிந்தது. –இங்கிருந்து தப்பியோட வேண்டும் அல்லது செத்துமடிய வேண்டும்.அவனுடைய போதைக் குறட்டை மட்டும் காதில் விழக் கூடாது, இங்குத் தங்க மட்டும் கூடாது, செத்தால் – சுதந்திரத்தில் சண்டையிட்டுச் சாக வென்றும். அடங்கி மட்டும் போகக் கூடாது.

தக்கோல்- இரண்டாம் தாரம். இந்த சொல்லை நான் எவ்வளவு வெறுக்கின்றேன்! எந்த ஒரு மோசமான காலத்தில் யார் தான் இச்சொல்லைக் கண்டுபிடித்தார்களோ! உடலாலும், உள்ளதாலும் அடிமையிருக்கும் வலுக்கட்டாயமாக இரண்டாம் தாரத்தின் நிலையை விட இழிகரமான வேறொன்றும் இருக்க முடியாது. இப்படியாக அன்று திட்டியபடி தரையைத் தோண்டி விரல்களில் ரத்தம் வந்தது. பின் யாரோ ஒருவர் கூடாரத்தை நோக்கி ஒருவர் இழுத்து கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்களாயினர். கூடாரத்தின் வெளிப்பகுதியிலிருந்து கெட்டிப் போர்வையைக் கழட்ட ஆரம்பித்தார்.

மௌனமான அந்த முதிய பெண்மணி. கூடாரம் முழுவதுமாக அவிழ்க்கப்பட்டது. நான் ஏதோ கூண்டில் உட்கார்ந்திருப்பதைப் போல் அதனுள் அமர்ந்திருந்தேன். ஆற்றிற்கு அப்பால் சற்று துரத்தில் எருதுகள், குதிரைகளின் மீது ஆட்கள் சுமைகளை ஏற்றிக் கொண்டுடிருந்தனார். பின்னர் என்குகிருந்தோ குதிரை மீது மூவர் அவர்களை அணுகி, எதோ கேட்டுவிட்டு, எங்கள் பக்கமாக வருவதை நான் கவனித்தேன். அவர்கள் எல்லாரையும் கிளப்பி அழைத்துச் செல்வதற்காக வருகின்றனர் என்று முதலில் நினைத்தேன். பிறகு உற்றுப்பார்த்ததும் திடுக்கிட்டேன். அவர்களில் ஒருவர் துய்ஷேன் ,மற்ற இருவரும் மிலீஷியா தொப்பிகளை அணித்திருந்தனார். அவர்களுடைய மேற்கோட்டுகளில்  சிகப்பு அடையாள கோடுகள் இருந்தன அவர்கள் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் என்று புரிந்தது..நான் மகிழ்ச்சியில் மூழ்கினேன்- என் ஆசிரியர் உயிரோடு இருக்கின்றார்.

அதே நேரம் என் மனதை வெறுமை கவ்வியது: நான் சாகடிக்கப்பட்டவள், இழிவுபடுத்தப்பட்டவள். துய்ஷேன் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தவர் அந்த தொப்பிக்காரனின் போர்வையைப் பிடுங்கினார்.அவன் தலையைத் தூக்கி , கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு கோபத்துடன்  பார்த்தான். ஆனால் மலீஷியா கைத்துப்பாக்கிகள் தன்னை நோக்கிக் குறிபார்ப்பதைக் கவனித்தும் அடங்கிப் போனான்.அவனின் கைகளைக்கட்டி குதிரை மீது ஏற்றினார். ஆசிரியர் என்னைக் குதிரையில் ஏற்றி அதன் பின் நடந்து வந்தார்.ஏதோ ஒரு பயங்கர கனவு முடிந்தைப் பூல் என் தலை வலித்தது.வெகு தூரம் சென்றதும் துய்ஷேன் குதிரையை நிறுத்தி, களைப்படைந்த கண்களால் முதல் முறையாக என்னைப் பார்த்தார்.

 

“அல்தினாய் என்னால் உன்னைக் காப்பாற்ற முடியவில்லை, என்ன மன்னிச்சிடு” என்றார் அவர். பின் என் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டார். நீ என்ன மன்னிச்சா கூட என்ன நான் என்றைக்குமே மன்னிக்க மாட்டேன்…”. நான் தேம்பியபடியே குதிரையின் பிடரியில் சாய்ந்துகொண்டேன். துய்ஷேன் அருகில் நின்று மௌனமாக என் தலையைக் கோதி விட்டார். நான் அழுது முடியும் வாய் காத்திருந்தார்.

போதும் அழுகையை நிப்பாட்டு. நான் மாவட்ட தலைநகரில் உன்னைப்பற்றிப் பேசி இருக்கிறேன். நீ அங்குப் போய் படிக்கத் தொடர போறே. என்ன, நான் சொல்றது கேட்டுச்சா?”

சலசல வென்று ஓடிக் கொண்டிருந்த ஒரு தெளிந்த சிற்றாற்றின் அருகே நாங்கள் நின்றதும் அல்தினாய், போய் முகம் கழுவிக்கொள்” பையிலிருந்து சோப்புக் கட்டியை எடுத்துத் தந்தார். இந்தா, அல்தினாய் , தாராளமா போட்டுக்க. நான் அந்த பக்கமா போய் குதிரையைப் புல் மேய விடுகிறேன். தெளிந்த நீரில் உடல் நனைத்தும் முதல் முறையாக என்னை அறியாமல் சிரித்தேன். “ ஏ தண்ணீரே, இந்த நாள்களின் அசுத்தத்தையும் மாசையும் அடித்தச்செல்! நீ எப்படித் தூய்மையாக இருக்கின்றாயோ , அதே போல் என்னையும் தூய்மையானவனாக ஆக்கு.  துய்ஷேனும் நானும் மலைகளிருந்து திரும்பினோமோ அப்பாதையை மட்டும் என்னால் இப்போது கண்டுபிடிக்க முடிந்தால் , நான் தரையில் முழங்காலிட்டு, ஆசிரியரின் காலடிச் சுவடுகளுக்கு முத்தமிடுவேன். அந்தப் பாதை என்னைப் பொறுத்தமட்டில் வாழ்க்கை பாதை. இரண்டு நாள் கழித்து துய்ஷேன் என்னைப் புகைவண்டி நிலையத்திற்கு அழைத்துச்சென்றார். என் வாழக்கையை புதிய இடத்தில் தொடங்கப் போகிறேன். அன்று ஊரே சேர்ந்து வழி அனுப்பியது.

தாஷ்கண்ட் நகரிலிருந்து அனாதைக் குழந்தை இல்லத்திற்கு அனுப்பப்பட்ட இன்னும் சில குழந்தைகளோடு நான் சென்றேன். மலைகளின் ஊடே பாப்ளார் மரங்களின் நிழல் படர்ந்த இடத்திலுள்ள அந்தச் சிறிய புகைவண்டி நிலையத்தைக் கடந்து சென்றிருக்கிறேன். என்னுடைய இதயத்தில் பாதியை அந்த இடத்தில என்றைக்குத்தாக விட்டுச் சென்றதாகவே எனக்குப் பட்டது. அப்போது துய்ஷேன் தன் இதயம் எவ்வளவு வேதனைப்படுகிறது என்று கட்டிக்கொள்ளாமல் இருப்பதை நான் மட்டும் புரிந்துகொண்டேன்.” அல்தினாய் நீ ஒரு நாள் கூட என்னை விட்டு பிரியும்படி விட மாட்டேன்.” என்றார் அவர். “ஆனால் உனக்குக் குறுக்கே நிற்க எனக்கு உரிமையில்லை. நீ படிக்க வேண்டும் எனக்கொன்றும் அதிகம் படிப்பறிவு கிடையாது . நீ புறப்பட்டுப்போ, அதுதான் நல்லது……. நீ ஒருவேளை நல்ல ஆசிரியராகலாம், அப்போது நம் பள்ளியை நினைத்து நீ சிரிக்கலாம்.. அப்படியே நடக்கட்டும்.  என்னை இறுகக் கட்டிப் பிடித்து துய்ஷேன் என் நெற்றியில் முத்தமிட்டார்.

அவர் கண்கள் கலங்கியபடி போய் வாம்மா! போய் வா, என் கண்ணே!’ நானோ அவரிடமிருந்து பிரியா விடைபெற்றேன். ‘ போயிட்டு வரேன் டீச்சர்! போயிட்டு வரேன் என்னருமை ஆசிரியரே!’.

துய்ஷேன் ரயில் பெட்டியருகே ஓடி வந்தார், பின்னர் பின் தங்கிய அவர், திடீரென்று பாய்ந்து, கத்தினார். “அல்தினாய் எதோ முக்கியமானதைச் சொல்ல மறந்த பின் அதை நினைத்துக் கொண்டவரைப் போல், அதற்குக் காலம் கடந்து விட்டது என்று தெரிந்த போதிலும் அவர் கத்தினார்… இதயத்தின் உள்ளேயிருந்து,மனதின் அடியாழத்திலிருந்து வந்த  அக்கூக்குரல் இன்று வரை என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

புகை வண்டி சுரங்க வழியே என் புதிய வாழக்கையை நோக்கி அழைத்துச் சென்றது.ஆசிரியரே, என் முதல் பள்ளிக்கூடமே , நான் போய் வருகிறேன்,குழைந்ததைப் பருவமே, நான் யாருக்கும் வாய்விட்டுச் சொல்லாத முதற்காதலே விடை கொடுங்கள்… துய்ஷேன் கனவு கண்டாரே அந்தப் பெரிய நகரத்தில், பெரிய பெரிய சானல்களையுடைய எந்த  பள்ளியைப் பற்றி துய்ஷேன் சொன்னாரோ அந்தப் பள்ளிக்கூடத்தில் நான் படித்தேன்.  பின்னர் தொழிலாளர் துறையை முடித்தேன், என்னைக் கல்லூரியில் படிக்க மாஸ்கோவிற்கு அனுப்பினர். நான் படித்த காலத்தில் எவ்வளவு இடர்பாடுகளைச் சந்தித்து போதும் என் மனதில் என்னுடைய முதல் ஆசிரியரின் முதல் பதில் சொல்லுவேன் , ஒரு முறை கூட பின்வாங்க நான் துணிந்ததில்லை.

நான் படித்த போது, ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவரை நான் நேசிப்பதாகவும் அவருக்காகக் காத்திருப்பதாகவும். அதில் குறிப்பிட்டிருந்தேன்.அவர் பதில் எழுதவில்லை. அத்துடன் எங்கள் கடித தொடர்பு முறிந்தது. அவர் எனக்கும்,தனுக்கும் மறுப்பு தெரிவித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். ஒரு வேளை அவர் செய்தது சரியாயிருக்கலாம்…..அல்லது ஒரு வேளை வேறு காரணங்கள் இருத்தனவோ? மாஸ்கோவில் என் முதல் ஆய்வுரை சமர்ப்பித்தேன். இதற்கிடையில் போர் ஆரம்பமானது. ஆசிரியரைத் தேடி என் கால்கள் சொந்த ஊரை நோக்கி பயணித்து. ஆனால் அவர் ராணுவத்தில் சேர்ந்துவிட்டதாக தெரிந்தவுடன் ஊருக்குச் செல்லவில்லை. போர் முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திருப்பினர்.

துய்ஷேனுக்கு என்னவாயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. நகரத்திற்கு வந்த என் ஊர்காரர்கள் அவர் தொலைந்து போய்விட்டார் என்று கிராம சோவித்துக்குத் தகவல் வந்ததாகச்சொன்னார்கள். நாட்கள் நகர்ந்தது. 1946ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் இறுதி நாள்களில் தோம்ஸ்க் பல்கலைக் கழகத்திற்கு என் விஞ்ஞானப் பணி நிமித்தமாகச் செல்ல வேண்டி வந்தது. முதன் முதலாக சைபீரியாவழியே சென்றேன். என்னுடன் சக பயணி –முன்னால் போர்வீரர் போர்க்கள வாழ்க்கையிலிருந்து நகைச்சுவை ததும்பும் சம்பவங்களையும் சிரிப்பையும் எங்களுக்குச் சொல்லிச் சிரிக்க வைத்தார்.

நோவசிபீர்ஸ்க் நகரத்திற்கு அப்பால் எங்கோ ஓரிடத்தில் ஒரு கிளைபதையில் எங்கள் புகை வண்டி சற்று நின்றது. பின் வண்டி புறப்படும் நேரத்தில் சன்னல் அருகே வந்து சாய்ந்தே படி நின்றேன். அங்கே பார்த்தால் துய்ஷேன் நின்று கொண்டிருந்தார். என் உணர்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.”நிறுத்துங்கள்” என்ற சொன்னபடி கதவை நோக்கிப் பாய்ந்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.என் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தேன். ரயில் நின்றதில் குழந்தைகளும்,பெண்களும் கூச்சலிட்டனர். நானோ ‘துய்ஷேன் டீச்சர்” கத்திக் கொண்டே அவரை நோக்கிப் பாய்ந்தேன்.

அந்த பாயின்ட்ஸ்மேன் ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றார். அவர் துய்ஷேன் இல்லை என்று புரிந்துகொண்டேன். அங்கு அனைவரும் பாவம், அவர் அவளின் கணவனோ அல்லது சகோதரனோ என்று நினைத்து ஏமாந்துவிட்டாள்” மக்கள் நகர ஆரம்பித்தனர். ஆண்டுகள் உருண்டோடின. நான் திருமணம் செய்து கொண்டேன். அவர் நல்லவர், எங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனர், நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றோம். நான் இப்போது தத்துவஞானத்தில் டாக்டர் பட்டம் பெற்றவள்.அடிக்கடி பல இடங்களுக்குச் சென்று இருக்கிறேன்.கிராமத்திற்குப் போகவில்லை. அதற்கு நிறையக் காரணங்களிருந்தன, ஆனால் நான் என்னைநியாபடுத்தப் போவதில்லை.

மலைகளில் ஒரு மாதிரியான நீரோடைகள் உண்டு: புதிய பாதை தோன்றியதும் இவற்றுக்கு இட்டுச் செல்லும் பாதையை மறந்து விடுவார்கள். வாழ்க்கையிலும் சில சமயம் இப்படி நடப்பதுண்டு. ஒருவேளை அதனால் தான் அது வாழ்க்கையாக இருக்கிறதோ…….. பள்ளி விழாவிலிருந்து ஏன் திடீரென்று புறப்பட்டுச் சென்றேன் என்று அப்போது உங்களுக்குப் புரிந்திருக்காது. நான் குற்றவாளியாக உணர்ந்தற்கு காரணமும் இருந்தது. ஏனெனில் சகலவித மாரியதையும் எனக்குக் காட்டியிருக்கக் கூடாது. நம்முடைய முதல் ஆசிரியரும், நம் கிராமத்தின் முதல் கம்யூனிஸ்ட்டுமான வயது முதிர்ந்த துய்ஷேனுக்குத்தான் அந்த உரிமை எல்லோரையும் விட அதிகமாக உண்டு.

ஆனால் நடந்ததோ தலை கீழானதாயிருந்தது .நாம் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அந்த தங்கமான மனிதர் அவசர அவசரமாகத் தபால்களை வினியோகித்துக் கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டும் இப்படி நடக்கவில்லை . இதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். எனவே தான், லெனின் ஒரு சாதாரண மனிதனை மதித்து நடித்ததைப் பூல் உண்மையாக மதிக்கும் திறமையை நாம் எப்போது இழந்தோம் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஆசிரியர் துய்ஷேனைப் பற்றி நான் இளைஞர்களுக்குச் சொல்லிருக்க வேண்டும். என்னுடைய நிலையில் உள்ள ஒவ்வொரு வரும் இதைத் தான் செய்ய வேண்டும். ஆனால் நான் கிராமத்திற்குச் செல்லவில்லை, துய்ஷேனைப் பற்றி ஒன்றும் தெரிய வில்லை, காலப்போக்கில் அவருடைய உருவம் உள்ளத்தின் அடியாழத்தில் போற்றிக் காக்கப்படும் ஓர் அன்பான நினைவுச் சின்னமாகியது.

நான் கண்டிப்பாக என் ஆசிரியரைச் சந்தித்து, அவர் முன் பதில் சொல்வேன். அவரிடம் மன்னிப்பு கேட்பேன். மாஸ்கோவிலிருந்து திரும்பியதும் குர்கூரேவிற்குச் சென்று, புதிய பள்ளிக்கு ‘துய்ஷேன் பள்ளி’ என்று பெயர் வைக்குமாறு ஊர் மக்களுக்கு முன்மொழியப் போகிறேன். ஆம், அந்தச் சாதாரண கூட்டுப்பண்ணை உறுப்பினரும், இன்றைய  தாபல்காரருமான அந்த நபரின் பெயர் தான். நீங்கள் நம் ஊர்க்காரர் என்ற மேயில் இம்மொழியை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மாஸ்கோவில் இப்போது நள்ளிரவு இரண்டு மணி. நான் ஹோட்டலின்  பால்கனியில்  நின்று மாஸ்கோ நகர விளக்குகளைப் பார்த்தபடியே, எப்படி கிராமத்திற்கு வந்து, துய்ஷேனை சந்தித்து, அவருடைய நரைத்த தாடியில் முத்தமிடப் போகிறேன் என்று பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் எனது சித்திரம் முற்றுப் பெறாமலே போய்க்கொண்டு இருக்கிறது. ஒரு சித்திரைத் தீட்டி அதற்கு ‘முதல் ஆசிரியர்’ என்று பெயரிடு சிறு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு துய்ஷேன் ஆற்றைக் கடப்பதைப் போல் அந்தச் சித்திரம் இருக்கலாம் அல்லது அல்தினாய் ஆசிரியர் எப்படி வழி அனுப்பினர் அல்லது  துய்ஷேனின் அந்தக் கத்தல் இன்று வரை அல்தினாயின் காதில் ஒளிப்பதைப் போல், ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எதிரொளிக்கும் படியாக ஒரு படம்.

இப்படி எல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். நான் எனக்கு நானே நிறையச் சொல்லிக் கொள்வேன், ஆனால் ஏனோ எல்லாம் எப்போதும் சரிப்பட்டு வருவதில்லை. இன்னும் என்ன சித்திரத்தைத் தீட்டப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் தேடப்போகிறேன் என்பது மட்டும் எனக்கு நிச்சியமாகத் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *