பாசிச சித்தாந்தம் என்ன செய்யும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் ஜெர்மனியின் ஹிட்லர். ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்று இனத் தூய்மை பேசிய ஹிட்லர் யூத இன மக்களை எப்படி கொன்று குவித்தார் என்பதற்கு ஆதாரமாக பல விசயங்கள் இருந்தாலும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆனி பிராங்கின் டைரி குறிப்புகள் . எந்த ஒரு நாட்டில் பாசிச சித்தாந்தம் வளர்ந்து வருகிறதோ அது தன் சொந்த நாட்டு மக்களை எப்படி வழி நடத்தும் என்பதற்கு இரத்தமும் சதையுமாக வாழ்ந்து மறைந்த ஆனி ஃபிராங்கின் டைரி குறிப்புகள் சாட்சியாக இருக்கிறது. இரண்டாவது உலகப்போரின் போது நாஜி படைகள் நடத்திய கோரதக்குதல்களை நேருக்கு நேர் பார்த்த சிறுமி எழுதி வைத்துவிட்டுப் போன டைரி குறிப்புகள் உலகத்தில் 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

1942 ஜூன் 12 அன்று ஆனின் 13வது பிறந்த நாளில் பெற்றோர் அவளுக்கு பரிசாக டைரி ஒன்றை பரிசாக கொடுக்கின்றனர். அன்றிலிருந்து டைரி துவங்குகிறது. அந்த டைரிக்கு கிட்டி என்று பெயர் சூட்டுகிறாள். காகிதங்கள் மட்டுமே பொறுமையாக நாம் பேசுவதை கேட்கும் என்று தினந்தோறும் எழுத்த தொடங்குகிறாள். ஆனிக்கு அக்கா இருக்கிறாள் அவள் பெயர் மார்க்ரெட். அப்பா பெயர் ஒட்டோ பிராங்க் அம்மா எடித். ஜெர்மனியில் வாழ்ந்த இவர்கள் யூத இன மக்களை நாஜிக்கள்வேட்டையாட துவங்கியதும் எப்படியாவது ஜெர்மனியை விட்டு தப்பித்துச் செல்ல வேண்டும் என 9ஜூலை 1942 அன்று தங்களுக்கு தேவையான சில பொருட்களை எடுத்துக் கொண்டு கொட்டும் மழையில் நடந்து செல்கின்றனர். ஒரு வழியாக நெதர்லாந்துக்கு வந்து ஆம்ஸ்டர்டாம் க்கு வந்து ஒரு பாழடைந்த பங்களாவில் தங்குகின்றனர். ஆனால் இவர்கள் வந்த மூன்றே மாதத்தில் நெதர்லாந்தும் ஜெர்மன் வசம் வீழ்ந்தது. இதனால் அந்த வீட்டிலேயே புத்தக அலமாரிக்கு பின்னால் ஒரு இரகசிய அறையில் தங்குகின்றனர். அந்த அறையில் ஆனி குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் .மற்றும் பிராங்கின் நண்பரான வான்டன் தம்பதியினர் இவர்களின் புதல்வன் பீட்டர். ஆனி பீட்டரின் காதல் நினைவுகளையும் டைரியில் குறித்து வைத்துள்ளார்.

நூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் (ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்) - ச.ரதிகா - Bookday

டச்சு நாட்டைச் சேர்ந்த மையீப் கைஸ் ஆனி பிராங்கின் குடும்பத்தோடு தலைமறைவு வாழ்க்கையில் சேர்ந்தே வாழ்ந்தார். இவர்தான் இந்த நூல் வருவதற்கு மிக முக்கியமான காரணம்.1944 Aug 4ஆம் நாள் ஜெர்மன் இராணுவம் பிராங்கின் மறைவிடத்தை கண்டுபிடித்து அனைவரையும் வதை மூகாம்முக்கு கொண்டு சென்றனர். ஆனி பிராங்க், மார்க்ரெட் இருவரும் பெர்ஜன் – பெல்சன் நகரமுகாமில் அடைக்கப்பட்டு கொடுர சித்தரவதைக்கு பின் 1945ல் டைபஸ் நோய்க்கு இறந்து போகிறார்கள். ஒட்டோ பிராங்கும் அவரது நண்பர்களும் “ஒஷ் விட்ஸ்” வதை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு ஒட்டோ பிராங்க் தவிர அனைவரும் விசவாயு கொடுத்து கொல்லப்படுகிறார்கள். 1945 ஜனவரி 27 ல் சோவியத் செஞ்சேனை படை வதை மூகாமை கைப்பற்றி அங்கிருந்தவர்களை விடுவித்தது. ஓட்டோ பிராங்கின் குடும்பத்தில் அவர் மட்டுமே எஞ்சியிருந்தார். அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னர் மையூப் கைஸ் அவர்கள் மறைந்து வாழ்ந்த வீட்டை பார்வையிடும்போது ஆனி ஃபிராங்க் எழுதிய டைரி கிடைக்க வே அதனை பத்திரமாக வைத்து ஒட்டோ ஃபிராங்க்கிடம் ஒப்படைத்தார் மயூப் கைஸ். இதன் பின்னர் 1950ல் நூலாக வெளியிடப்பட்டது.

மறைவிடத்தில் வாழும் வாழ்க்கை எப்படிப் பட்ட துன்பத்தை கொடுக்கும் என்பதையும் மரணத்தை எதிர்நோக்கி ஒவ்வொரு நாளும் வாழும் வாழ்க்கை எவ்வளவு கொடியது என்பதைபுத்தகத்தை வாசிக்கும் போது உணர முடிகிறது. பாசிசம் எவ்வளவு கொடுமையானது என்பதை ஆனி ஃபிராங்க் என்ற சிறுமி இந்த உலகத்திற்கு விட்டுச் சென்ற தேவ செய்தியாகும்.பாசிசத்தை வேரறுக்க ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டிய அவசியத்தை இந்த புத்தகம் வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.

கு.காந்தி
இராமநாதபுரம்



ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
எதிர்வெளியீடு

விலை 400 .



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *