உறவினர்களைவிட நண்பர்கள்தான் அடிக்கடி ஞாபகத்திற்கு வருகிறார்கள். உறவினர்களைவிட நண்பர்களுடன்தான் அதிகமாகப் பழகியிருக்கிறேன் என்கிறார் ஆசிரியர் வண்ணநிலவன் அவர்கள்.

ராமச்சந்திரன் என்ற பெயரிலிருந்து எப்படி வண்ணநிலவன் என்ற பெயர் மாற்றம் வந்தது, இதற்கு முற்று முழுதாக யார் காரணகர்த்தாவாக இருந்தார் என்ற ஆரம்பத்துடன் தனது இக் கட்டுரைகளை ஆரம்பிக்கிறார் ஆசிரியர் வண்ணநிலவன் அவர்கள்.

தனது அனுபவங்களையும், தான் சந்தித்த படைப்பாளிகளையும், நண்பர்களையும், அவர் சென்று வந்த, மற்றும் பத்திரிகைத் துறையில் வேலை செய்த அனுபவங்களையும் இங்கே எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் வண்ணநிலவன்.

இதில் 18 வேறுபட்ட எழுத்தாளர்களை நினைவு கூர்கிறார்.
* வல்லிக்கண்ணன்
* விக்ரமாதித்யன்
* பா. ஜெயப்பிரகாசம்
* கலாப்ரியா
* கி. ராஜநாராயணன்
* திருலோக சீதாராம்
* வெ. கிருஷ்ணமூர்த்தி
* தி. க. சிவசங்கரன்
* ஜி. எம். எல். பிரகாஷ்
* சுந்தர ராமசாமி
* பிரபஞ்சன்
* அம்பை
* அசோகமித்திரன்
* நா. பார்த்தசாரதி
* கா. நா. சுப்பிரமணியம்
* தி. ஜானகிராமன்
* கண்ணதாசன்
* சோ
ஆசிரியர் இங்கே தனது 60/70/80 பதுகளில் தான் கண்ட, பேசிய, உணர்ந்த எழுத்தாளரர்களையும், பத்திரிகையாளர்களையும், மறக்கமுடியாத தனது நண்பர்களையும், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை யும் வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகின்றது. அதன் மூலமாக அடுத்த படைப்பாளிகளையும் நாம் அறிந்து கொள்ள நல்ல வாய்பு என்றே சொல்லலாம்.

இதேபோல், பவா செல்லத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், பா. ராகவன் போன்றோர், எப்படி எல்லாம் மற்ற படைப்பாளிகளை அறிமுகம் செய்கிறார்களோ அதேபோல், இன்னும் வளர்ந்து வரும் அடுத்த படைப்பாளிகளையும் வாசிப்போராகிய எங்களுக்கு அறிமுகம். செய்து வருவது மிகவும் பாராட்டத்தக்க விடையம். அதில் நாம் அக்கறையுடையவர்களாக இருந்தால், எல்லோரும் நம் பக்கத்தில் இருப்பதாக உணரலாம்.

இன்றைய கால கட்டத்தில் தொடர்பு சாதனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம். அதை வேளையில், இதையிட்டுப் பல சிக்கல்களையும் (இடியாப்பச் சிக்கலைக் கூட மிகவும் பொறுமையாக இருந்து எடுத்தால் கூட எடுத்து விடலாம்) எதிர் கொண்டு வருகிறோம். ஜிங் ஜாங்  என்பது போல் இதில் (பாசிட்டிவ், நெக்கடிவ்) இரண்டு பக்கங்களுக்கும் நாம் முகம் காட்டத்தான் வேண்டும். தவிர்கமுடியாததொன்று எனலாம். மாற்றங்களை நாம் திணித்தாலும், திணிக்காவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆசிரியர் வண்ணநிலவன் இங்கே, தனது ஆரம்பகால, படிக்கும் காலம், படித்து முடிந்து வேலை தேடித்திரியும் காலம், இவற்றுடன் தொடர்புடைய கடிதப் போக்குவரத்து எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது, அத்துடன் பிரயாணங்களில் ஏற்பட்ட இடர்பாடுகள், வறுமை, எதிர்பார்ப்புக்கள் போன்றவற்றை உணர்பூர்வமாகப் பதிவு செய்கிறார்.

குறிப்பாக, அன்பு, அரவணைப்பு, உண்ண உணவு, உறங்குவதற்கான இடம் இதுபோன்ற மிக உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தார்கள் என்பதனை வெளிப்படையாகப் பல இடங்களில் பதிவு செய்கிறார் வண்ணநிலவன் அவர்கள். தான் பட்ட கஷ்டங்களில் யார்யார் தனக்காக உறுதுணையாக இருந்து, தன்னை இவ்வளவு தூரம் உயர்த்தி விட்டவர்களை அன்போடு நினைப்பதை இந் நூல்மூலம் வாசிக்க முடிகிறது நண்பர்களே.

அத்துடன், ஆசிரியர் அவர்கள், தான் நேரில் சந்திக்க முடியாத, இன்னொருவரால் தனக்கு வந்த உதவிகளையும், அவர்களுடனான தொடர்புபளையும் மறக்கமுடியாத தருணம். என்பதைச் சுட்டிக்காட்டுவது, அவரது மிக உயர்ந்த பண்பை எடுத்துக் காட்டு வதைக் காணலாம்.

அன்றைய சூழ்நிலையில் ஒரு படைப்பாளியையோ அல்லது ஒரு வெளியீட்டு நிறுவனத்தையோ அன்றைய இளம் எழுத்தாளர்கள் நெருங்குவதாய் இருந்தால் எவ்வளவு ஆதங்கங்கள் , சிரமங்கள், தொடர்புகள், இவற்றுக்காக ஏங்கித் தவித்த நீண்ட பயணங்களாக இருந்தது. ஆனால் இன்றைய அதிவேக தொடர்பு சாதனங்களால் மேற்குறிக்கப்பட்ட விடயங்களை ஒரு நொடியில் (வாட்ஸ்அப், முகப்புத்தகம், இன்ரகிராம், கூகிள் இவைபோன்ற) பெறக்கூடியதாக இருப்பதை உணருகின்றோம்.

இந்தப் படைப்பாளி தான் உயர்ந்தவர், மற்றவர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் என்ற வேறபாடற்று, எல்லோரையும் ஒரே கூரைக்குள் கொண்டுவருவது, அவரது மற்றுமொரு உச்சம் என்றே கூறலாம்.. நண்பர்களே, இவரது இப் படைப்பான மறக்கமுடியாத மனிதர்களை ஆசிரியர் வண்ணநிலவன் அவர்கள் ஒரே கூரைக்குள் என்னதான் அடக்கியுள்ளார் என்பதனை உங்கள் கதவு வழியாகச் சென்று உற்று நோக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.. என்ன ஆயத்தமா வாசிப்பு நண்பர்களே..
நன்றிகள்

பொன் விஜி -சுவிஸ்.

நூல் : மறக்கமுடியாத மனிதர்கள் 
ஆசிரியர் : வண்ணநிலவன் 
விலை : ரூ.₹200/-
பக்கம் : 167

வெளியீடு : காலச் சுவடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *