kavithai : samathalam - shanthi saravanan கவிதை : சமதளம் - சாந்தி சரவணன்
kavithai : samathalam - shanthi saravanan கவிதை : சமதளம் - சாந்தி சரவணன்

கவிதை : சமதளம் – சாந்தி சரவணன்

ஆண்
பெண்
திருநங்கை
திருநம்பி
மாற்றுதிறனாளி
இந்த பூமியில் தான்
பிறக்கிறார்கள்

பணக்காரன்
ஏழை
பிச்சைக்காரன்
இந்த பூமியில் தான்
வாழ்கிறார்கள்

நல்லவர்கள்
கெட்டவர்கள்
வஞ்சகர்கள்
திருடர்கள்
இந்த பூமியில் தான்
உலாவுகிறார்கள்

பண்டிதர்களும்
பாண்டாரங்களும்
இந்த பூமியில் தான்
வசிக்கிறார்கள்

வெற்றி பெற்றவர்கள்
தோல்வி அடைந்தவர்கள்
ஏதூம் செய்யாதவர்கள்
சோம்பேறிகள்
இந்த பூமியில் தான்
சுற்றி திரிகிறார்கள்!

புத்திசாலியும்
முட்டாளும்
இந்த பூமியில் தான்
வளம் வருகிறார்கள்

மனிதனாக
மிருகமாக
பூச்சியாக
பறவையாக
தாவரமாக
விலங்காக
…..இருந்தாலும்
இந்த பூமி தான் இருப்பிடம்

மண்ணில் புதையுண்டோ
நெருப்பில் சாம்பலாகியோ
இதே பூமியில் தான் தஞ்சம் அடைகிறார்கள்!

பின்னர் எதற்கு இந்த
பிரிவினை
அலப்பறை
அரைக்கூவல்
ஜாதி சண்டை
இனக் கொலை
வன்முறை

அனைவரும் ஒன்று தான்
என வேறு
எப்படி சொல்வது?
சொன்னால் மட்டும் புரியுமா
இது சமதளம் என!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *