நூல்: கேலிக்குரிய மனிதனின் கனவு
ஆசிரியர்: தஸ்தயேவ்ஸ்கி | தமிழில் வழிப்போக்கன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 60

பக்கங்கள்-79
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/kelikuriya-manithanin-kanavu/

மொத்தம் இரண்டு கதை. முதல் கதை கரம்சோவ் சகோதரர்களில் வரும் சிறு பகுதி. நாத்திகன் ஆத்திகனுக்கான உரையாடல். அதில் இவான் தான் எழுதிய கதையை விவரிக்கிறான். அதில் இயேசுவிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளை நிதர்சன சமூகம் எவ்வகையில் கட்டமைக்கும் என்கிற ரீதியில் எழுதப்பட்டுள்ளது.
அடுத்து வருகிற கேலிக்குரிய மனிதனின் கனவு கதை. எத்தனை நூற்றாண்டுகள் நிரம்பியது மனிதகுல வாழ்க்கை?. அதில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மனிதன் மேற்கொண்ட பிரயத்தனங்கள், தடித்த வால்காவில் இருந்து கங்கைவரை நூலில் படித்திருப்போம். ஆனால் முற்காலத்தில் இருந்து இன்றுவரை இருக்கும் வாழ்க்கையே ஒரேயொரு சிறுகதையில் சொல்லிவிட முடியுமா?
முடியும் என்று எழுதி கெத்து காட்டியுள்ளார் ..தஸ்தாயேவ்ஸ்கி.

இப்படியொரு உள்ளடக்கம் கொண்ட கதையை இதுவரை எந்தவொரு மொழியிலும் வாசித்ததில்லை. தற்கொலைக்குத் தூண்டும் எண்ணங்கள் என்னவாக இருக்கும். ஊருக்குள் சுற்றுகிற வெட்டி பிஸுகள் எழுப்பும் ரண கேள்வியாகக் கூட இருக்கலாம். அதனை நாம் எதிர்கொண்டபின் எதிர்ப்படும் உயிர்ப்பு நிறைந்த தருணங்கள் அத்தகைய மனோபாவத்தை மறக்கடிக்கும். பிறகு வெறுமை சூழும்போது நினப்பு வந்துவிடும். மனசு சொல்வதைக் கேட்டால் அவ்வளவுதான். அதுவும் படைப்பாளியின் மனநிலை. பெரும்பாலும் துயரங்களிலிருந்து விடுபடவே எழுதுகிறான். அதுவே பல சமயம் துயரங்களாகும் பட்சத்தில் சில்வியா பிளாத்தின் வாழ்க்கையின் முடிவுபோல நேர்ந்துவிடுகிறது.மேற்கண்டதை பிரித்தரிந்து எழுத்துப் பயணத்தை தொடர்வதும் ஆபூர்வமானதே.. சமூகத்தின் வெற்று பிம்பங்களுக்கு கண்ணாடி பார்க்காமல் கிளம்புவதே நமக்கான இடத்தை அடைய முடியும்.

இதோ உனக்கு நிறைய வலிகள் இருக்கின்றன.. ஆனாலும் ஆறுதலாக நான் இருக்கிறேன் என்று தலையில் எண்ணை வைத்து கோதிவிடும் வளர்ப்பு அம்மாவுக்கான பாச ஸ்பரிசமே இக்கதை.

பல கோணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

தனித்து வாழ சபிக்கப்பட்டவர்களுக்கான அன்புக்குழை இக்கதை.

நிறைய வரிகளை வாழ்வின் உன்னதமான உதாரணங்களாக எடுத்து பதிந்து கொள்ளலாம்.

அனைவரும் வாசித்தே ஆகவேண்டிய கதை.

புத்தக உபயம்:நண்பர் Kmkarthi Kn

-சே. தண்டபாணி தென்றல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *