கவிதை: படைப்பு – ஆ.கிருஷ்ணதாஸ்படைப்பு: 

நாவல் பழம்
சுவைக்குந் தருவாயில்
விதை விழுங்கப்பட்டால்
நண்பன் சொல்லுவான்

போச்சி! போச்சி!
வயித்துக்குள்ள மரம்
மொளச்சு, காது வழியா
வரப்போவுது பாரென்று

ஆனால் இன்னும் அம்மரம்
முளைக்கவேயில்லை
அந்த ஞாபகமே
அடிக்கடி முளைக்கின்றது.

— ஆ.கிருஷ்ணதாஸ்