கார்த்திகா கவிதைஉங்களின் முள்கிரீடங்களைச் சூட்டுங்கள்.,
தயாராகவே இருக்கின்றன
அவர்களின் தலைகள்…

உங்களின்
பாவமூட்டைகளையும்
சுமத்துங்கள்
தயாராக இருக்கின்றன அவர்களின் முதுகுகள்…

தன்னை அறையப் போகும் சிலுவை
எனத் தெரிந்தேதான்
அதனைச்
சுமக்கத் துணிகிறார்கள் அவர்கள் …

இதோ
கை,கால்கள்
மட்டுமல்ல ,
அவர்களின் உடலெங்கும்
அறையுங்கள்
உங்கள் ஆதிக்க
ஆணிகளைக் கொண்டு…

இப்போது உங்கள்
நினைப்பெல்லாம்
மூன்று நாட்கள்
கழித்து விழித்தெழ
விரும்புவார்கள் அவர்களென…

ஒருபோதுமில்லை.,
அவர்கள் விருப்பமெல்லாம்
ஒவ்வொருநாளும்
உங்களை
உயிர்ப்பித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே.

– கார்த்திகா.
[email protected]