நூல் அறிமுகம்: புரட்சி பாதையில் மாணவர், வாலிபர் இயக்கம் – ச.ஆனந்த குமார் (இந்திய மாணவர் சங்கம்)

 

1974 ஜனவரி 2 முதல் 6 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் 2வது அகில இந்திய மாநாட்டைத் துவக்கி வைத்து தோழர் சுந்தரய்யா ஆற்றிய உரையே இச்சிறு நூல்.

இந்திய விடுதலை போராட்டத்தை பல்வேறு தலைவர்கள் முன்னெடுத்து நடத்தினார். இளம் வயதிலேயே விடுதலை போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு தங்களது இன்னுயிரை இழந்தவர்கள் பலர். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் முசாபர் அகமது, சதீஸ் பக்வாஷி போன்றோர் தாங்கள் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டுச் சிறு வயதிலே தங்களது அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார்.

இவர்களை போன்ற தோழர்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் எவ்வித சோர்வுமின்றி சமூக மாற்றத்திற்காகப் போராடினர்.

காலனிய பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராட விடுதலையடைந்தோம். இது அரசியல் விடுதலை மட்டுமே. முழுமையான சமூக பொருளாதார விடுதலையை உள்ளடக்கிய சோஷலிசமே நம் இலக்கென்று தீர்மானித்து, தொடர்ந்து நம் தோழர்கள் போராடினர். இன்னும் எத்தனைக் காலம் போராடுவது என்று அவர்கள் சோர்ந்துவிடவில்லை. ஏனெனில் இலக்கை நோக்கிய பயணத்தில் புரட்சிகர அமைப்பு எப்போதும் சோர்வடைவதில்லை. இலக்கை எட்டாமல் அது நிற்பதில்லை.

1962-63 எல்லை பிரச்சனை நடந்தன இதனை நாம் நட்பு ரீதியாகப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வுக்கான முடியும் என்று கோரியதற்காக இந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்களை ஆட்சியாளர்கள் அவதூறு பரப்பி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையும் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்கொண்டு செயலாற்றியது.

சிறந்த கல்விமுறை

புரட்சியில் மாணவர் வாலிபர் இயக்கம் ...

தோழர் சுந்தரய்யா விசாகப்பட்டினத்திற்கு ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தபோது, ஒரு லாரியில் பொறியியல் மாணவர்கள் பயணித்துள்ளனர். அப்போது அங்கிருந்த மாணவிகள் விடுதிக்கு மாணவிகள் செல்கிறார்கள். அந்த பொறியியல் மாணவர்கள் அம்மாணவிகளை பார்த்து அசிங்கமாகக் கூச்சலிடத்தை சுந்தரையா கவனித்துள்ளார்.

“இது போன்ற செயல்களை ஆளும் வர்க்கங்களும், அதன் மோசமான சமூக அமைப்பும் ஆதரிக்கும்.

இதையெல்லாம் மாற்றுவதற்கு முதலாளித்துவ அமைப்புமுறையின் கல்வி உதவாது.

நமது கல்விமுறை நம்மைச் சிறந்த மனிதர்களாகத் திருத்தி அமைப்பதாக இருக்க வேண்டும்.

சோஷலிசமே மாற்று

புரட்சியில் பாதையில் மாணவர் ...

வேலையின்மையை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் அரசிடம் இருந்தால் அரசு என்ன செய்ய வேண்டும்? கிராமப்புறங்களில் கோடிக்கணக்கில் வேலையற்றோர் இருக்கிறார்கள்.

நிலப்பிரபுக்களிடம் உள்ள நிலைகளைக் கைப்பற்றி ஆண்டுக்குச் சராசரியாக 180 நாட்கள் கூட வேலை கிடைக்காத விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் அதைக் கொடுங்கள்.

படித்த வேலையற்றோராக இருக்கும் இளைஞர்களுக்கு

அவர்கள் சுயவேலைகளை ஏற்படுத்திக் கொள்ள கோடிக்கணக்கில் உதவி செய்வதாக அரசு சொல்கிறது.

இப்படி ஒரு முட்டாள்தனமான கோஷத்தை எந்த அரசும் முன் வைத்ததில்லை.

சீனாவைப் பாருங்கள் லட்சக்கணக்கில் மக்கள் இரவு பகலாக ப்ரொஜெக்ட்கள் நிர்மாணத்தில் பற்றுடன் உழைக்கிறார்கள்.

இது மகத்தான விஷயம் இல்லையா?

மக்கள் உற்சாகமாக உழைக்கிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன?

சீனா அரசு நிலம் கொடுத்தார்கள்.

அது அவர்களுக்கு சொந்த நிலமாயிற்று.” இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளே உண்மையில் வேலையின்மையைப் போக்கும் என்று சுந்தரய்யா குறிப்பிடுகிறார்.

இன்று உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கத்தினால் மக்கள் பெருமளவு துயரத்தில் இருக்கிறார்கள்.

சீனாவிலிருந்து திட்டமிட்டு இந்த நோய் பரப்பப்பட்டது என்று வலதுசாரிகள் அவதூறு பரப்புவருகின்றனர். ஆனால் சீனா அரசு நோயைக் கட்டுப்படுத்திவிட்டது. அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் நோயைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளன. உயிரிழப்பும் அதிகமாகவுள்ளது.

சோஷலிச புரட்சி

“இந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்தினை வீழ்த்தி சோஷலித்திற்கான புரட்சி எப்போது வருமென்று கேட்கிறார்கள்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவையாகும்?

உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் காலம் (அகநிலையும் புறநிலையும்) கூடும்போது புரட்சி வரும்.”

நாம் அமைப்புரீதியாக வலுவாகத் திரளும் போதே சோஷலிச புரட்சி என்கிற நமது லட்சியத்தைச் சாத்தியப்படுத்துமுடியும். சோர்வில்லாமல் இலக்கை நோக்கிய உத்வேகத்தோடு முன்னேற நம் தோழர்களின் வரலாறு நமக்கு வழிகாட்டுகிறது. அவர்களின் அர்ப்பணிப்பும், தியாகமும் நமக்கு உத்வேகம் அளிக்கும். நம்முடைய கருத்தியல் போராட்டத்தை வலுவாக மாணவர், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய நமது கடமையை அது எடுத்துக்காட்டும். என்பதையும் சுந்தரய்யாவின் பேச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

“எத்தனை இன்னல்கள் வேண்டுமானாலும் எதிர் வரட்டும் எத்தனை ஏமாற்றங்கள் அடைந்தாலும் அதிலிருந்து படிப்பினைகளை பெற்று இறுதி வரை மார்க்ஸ், லெனினிய கோட்பாடுகளிலிருந்து விலகாமல், நம் கொள்கைக்கு கட்டுப்பட்டு இருப்போம்.” என்கிற தோழர் சுந்தரய்யாவின் முழக்கமே நம்பிக்கையின் மொழியாக எழுச்சியோடு மக்கள் ஊழியர்களுக்கு வழிகாட்டுகிறது.

இலக்கு ஒன்றே

இறுதி வெற்றி

 

நூல் – புரட்சி பாதையில் மாணவர் வாலிபர் இயக்கம்.

ஆசிரியர் – பி.சுந்தரய்யா

பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் –64

விலை -35