வன்முறை – ராதிகா விஜய் பாபு

Rathika vijayababu Poetry Violence (வன்முறை) in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.வன்முறை
***********
வன்முறையைக் கொண்டு
மதம் இனம் மொழி என்று அடக்குமுறையை
நிறுத்தப் போவது எப்பொழுது!!

மதத்தைத் தாண்டி இனத்தைத் தாண்டி
மொழியைத் தாண்டி
மனிதனிடம் மனிதம் வெளிப்பட்டபோவது
எப்பொழுது!!

ஒவ்வொரு மதத்திலும்
ஆணிவேராக இருக்கும் அன்பை அறுத்துவிட்டு
உலகில் எதை செழிக்க வைக்க போராடுகிறீர்கள்!!

குழந்தைகளின் கதறலும்
பெண்களின் கண்ணீரும்
முதியவர்களின் வேதனையும்
அவர்கள் மனதை எட்டவில்லை!!

ஈழமக்களுக்காகவும்
பின் சிரியாவைச் சேர்ந்த மக்களுக்காகவும்
இன்று தாலிபான் மக்களுக்காகவும்
கண்ணீரையும் பிரார்த்தனையும் மட்டுமே
செய்து கொண்டிருந்தால்
யார்தான் காப்பாற்றுவது!!

ராதிகா விஜய் பாபு
பெங்களூர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.