பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 12: மே தினச் செங்கொடி | May Day Red Flag | சிங்காரவேலர் (Singaravelar) காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 12: மே தினச் செங்கொடி – ராமச்சந்திர வைத்தியநாத்

  மே தினச் செங்கொடி பழைய பஞ்சாங்கம் - 12 - ராமச்சந்திர வைத்தியநாத் 1923ம் ஆண்டு மதராஸ் பட்டணத்தில்தான் – ஏன் இந்தியாவிலும் கூட- முதன் முறையாக மே தினம் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. சிங்காரவேலர் இதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டார். அன்றைய…
கே.அர்ஜுனன் எழுதிய "கைத்தறி நெசவாளர்களின் விடிவெள்ளி தோழர் எஸ்.பெரியசாமி போராட்ட வாழ்க்கை" புத்தகம் ஓர் அறிமுகம் - | Tamilnadu Handloom Weavers Protest | www.bookday.in

“கைத்தறி நெசவாளர்களின் விடிவெள்ளி தோழர் எஸ்.பெரியசாமி போராட்ட வாழ்க்கை” – நூல் அறிமுகம்

கைத்தறி நெசவாளர்களின் விடிவெள்ளி தோழர் எஸ்.பெரியசாமி போராட்ட வாழ்க்கை "நாங்கள் எதுக்குய்யா சாகணும் உழைக்கப் பிறந்தவர்கள் நாங்கள்" பொது நன்மைக்காக பாடுபடுவதன் மூலம் தங்களை சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது காரல் மார்க்ஸ்.....…
நூறாண்டு தொழிற் சங்க உரிமை 3: மூலதனம் (Capital ) என்ன செய்யும்? கூலி உழைப்பு (Wage Labor) என்ன செய்யும்? - எஸ். கண்ணன்

மூலதனம் என்ன செய்யும்? கூலி உழைப்பு என்ன செய்யும்?

தொடர் 3: நூறாண்டு தொழிற் சங்க உரிமை  மூலதனம் என்ன செய்யும்? கூலி உழைப்பு என்ன செய்யும்? எஸ். கண்ணன் தொழிலாளர்களைச் சுரண்டாமல் மூலதனம் பெருகுவதில்லை. கூலியுழைப்புக்கு முன் தேவை மூலதனம் மூலதனத்திற்கு முன் தேவை கூலியுழைப்பு ஒன்று மன்றொன்றுக்கு முன்நிபந்தனையாக…
அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின்(US auto workers)வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங்(Samsung workers in India) தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் - https://bookday.in/

அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும்

தொடர் 2: நூறாண்டு தொழிற் சங்க உரிமை  அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும்!!!! எஸ். கண்ணன் அமெரிக்காவிற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர், மு.க. ஸ்டாலின், பயணம் மேற்கொண்டு, தொழில் முதலீடுகளை ஈர்த்து திரும்பி உள்ளார். அவர்…
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் (Samsung India Workers Strike) | Centre of Indian Trade Unions (CITU) | Samsung Labour Union

சாம்சங் போராட்டம்  – எஸ்.வி.வேணுகோபாலன் 

சாம்சங் போராட்டம்: வர்க்கப் போராட்ட வகுப்பறை தான், தொழிற்சங்கப் போராட்டக் களம்  எஸ்.வி.வேணுகோபாலன் அக்டோபர் 5ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சாம்சங் தொழிலாளர்களுக்கு (Samsung Labour Union) எதிரான காவல் துறை அடக்குமுறை, தமிழக அரசின் தவறான அணுகுமுறை,…
நூறு ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமை? - எஸ். கண்ணன் - A hundred years of union rights? - Labour Rights - bookday - CITU https://bookday.in/

நூறு ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமை? – எஸ். கண்ணன்

நூறு ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமை? - எஸ். கண்ணன் ஆசு எனைக் கண்டதும், அழகிய மில்லினை மோசம் செய்தது ஏன் மொழிகுவாய் என்றான் கொடிய பல செய்து கூலியாட்களை மடியும் விதத்தினில் வருத்தி வந்ததனால் வேலையை நிறுத்தினர்; வேண்டுவ கேட்டுளேன்; நாலு…
நூல் அறிமுகம் : ஜனநேசனின் ’ஏலோ… லம்’ நாவல் – பெ.விஜயகுமார்

நூல் அறிமுகம் : ஜனநேசனின் ’ஏலோ… லம்’ நாவல் – பெ.விஜயகுமார்




நூல் : ஏலோ… லம்
ஆசிரியர் : ஜனநேசன்
விலை :360
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018,
 
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும் : thamizhbook.com

பணி ஓய்வு பெற்ற அரசு கல்லூரி நூலகர் ஜனநேசனின் இயற்பெயர் இரா.வீரராகவன். நான்கு குறுநாவல்கள், ஏராளமான சிறுகதைகளை ஏற்கனவே எழுதியுள்ள ஜனநேசன்ஏலோ***லம்எனும் தன்னுடைய முதல் நாவலை தற்போது எழுதியுள்ளார். தான் மேற்கொண்ட கள அனுபவங்களின் அடிப்படையில் ரத்தத்தை உறிஞ்சுகின்ற அட்டைகள் நிறைந்த மலைப் பிரதேசத்தில் உள்ள ஏலத் தோட்டங்களில் உடலை வதைக்கும் குளிரில் குடிசை வீடுகளுக்குள் ஒதுங்கி உழைக்கின்ற விவசாயக் கூலிகள் படும்பாட்டை எழுதியுள்ளார்

பல நாவல்களிலும் மலைவாழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் துயரங்கள் பதிவாகி உள்ளதை அறிவோம்மலேசியாவிற்கு 1950களில் பஞ்சம் பிழைக்கப்போன தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் அனுபவித்த சொல்லொண்ணாத் துயரங்களைபால்மரக் காட்டினிலேஎன்ற நாவலில் அகிலன் சித்தரித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்ட மலைவாழ் மக்கள் படும் அவதிகளைமனிதர்கள் விழித்திடும் போதுஎனும் நாவலில் கோதாவரி பாருலேக்கர் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். கொல்லிமலைப் பகுதியில் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட அவலங்களை, அந்த மக்கள் சங்கமாகத் திரண்டு மீண்டெழுந்ததைப் பற்றி சங்கம்நாவலில் கு.சின்னப்ப பாரதி சித்தரித்துள்ளார். பஞ்சம் பிழைப்பதற்காக நெல்லை மாவட்டத்திலிருந்து வால்பாறை தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்றவர்கள் அனுபவித்த சோகங்களைஎரியும் பனிக்காடுநாவலில் பி.எச்.டேனியல் விவரித்துள்ளார்.

இந்த வரிசையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வட்டப்பாறை எனும் மலைப்பிரதேசத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு வேலை தேடிச் சென்று சீரழிந்த ஏழை மக்களின் துயரமிகு வாழ்வை ஜனநேசன் தன்னுடைய ‘ஏலோ…லம்’ நாவல் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார். இரண்டு பாகங்களாக விரிந்து செல்லும் இந்த நாவலின் முதல் பாகம் ரவி எனும் சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. தன்னுடைய கடின உழைப்பு, விடாமுயற்சியால் படித்து சப் கலெக்டர் ஆகி வாழ்வில் வெற்றி பெற்ற அதே ரவியின் பார்வையிலேயே நாவலின் இரண்டாம் பாகம் விரிகிறது. நாவல் வழியாக கம்பம் பள்ளத்தாக்கின் அறுபதாண்டு கால சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை ஜனநேசன் நேர்மையுடன் நேர்த்தியாகச் சித்தரித்திருக்கிறார்.         

ஏலத் தோட்டத்துக்கு எப்போதாவது மட்டும் வந்து போகும்  முதலாளி கிருஷ்ண ராஜா, போடி நகரத்திலிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வருகின்ற அதன் மேனேஜர் வைரம் செட்டியார், தோட்டத்திலேயே தங்கியிருந்து மேற்பார்வை செய்து வரும் சங்கிலி கிழவர், கணக்குப்பிள்ளை துரைச்சாமி இவர்களின் கீழ் வேலை செய்யும் பழனிச்சாமி கவுண்டர், பரமன், சின்னாத்தேவர், சீனி மாதாரி, இராமர் ஆகிய கங்காணிகள் என்ற அதிகார வரிசையின் கீழ் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பஞ்சம் பிழைக்க வந்த ஏழை மக்கள் அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். ஏலம் எனும் பணப் பயிர் விளைந்து பெருகுகிறது. அந்த முதலாளி மேலும் மேலும் நிலங்களை வாங்கிக் குவிக்கிறார். ஆயினும் பணப் பயிர் விளையப் பாடுபடுகின்ற விவசாயக் கூலிகளின் வாழ்வில் மட்டும் எந்தவொரு மாற்றமும்  நிகழவில்லை. மலைக்கு எப்படி வந்து சேர்ந்தனரோ அதே நிலையிலேயே அந்த மக்கள் நாவலின் முடிவில் தங்கள் இடத்திற்குத் திரும்புகின்றனர். “காடு விளைஞ்சென்ன மச்சான்? நமக்கு கையும், காலுந்தான மிச்சம்எனும் பட்டுக்கோட்டையின் வைர வரிகள் நினைவுக்கு வருகின்றன.

தங்கம் சாதிக்காததை சங்கம் சாதிக்கும் என்பதற்கிணங்க சிஐடியு சங்கம் இவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறது. கிருஷ்ணன் குட்டி, மாதவன் நாயர் என்ற இரண்டு தன்னலமற்ற தொழிற்சங்கத் தலைவர்களின் வழிகாட்டுதலில் தொழிலாளர்களின் நிலைமைகளில் நல்ல மாற்றங்கள் வருகின்றன. வட்டப்பாறை தோட்டத்தில் குரங்குகளின் தொல்லை அதிகம். குரங்குகளை விரட்டுவதற்கென்றே ரெங்கசாமி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் குரங்கால் தாக்கப்படுகின்ற  மாரியம்மாள் என்ற பெண் மலைச் சரிவில் விழுந்து பலத்த காயமடைகிறாள். மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்து விடுகிறாள். மாரியம்மாளின் இறப்பிற்கு நிர்வாகம் தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. தொழிலாளிகளை அடக்கி வைப்பதற்காக போலீஸ் தேடுகின்ற குற்றவாளியான பாண்டியன் தலைமையில்  ரௌடி கும்பல் ஒன்றை எஸ்டேட்டில் தங்க வைக்கிறார் முதலாளி. ரௌடிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. சிஐடியு சங்கத்தின் துணைகொண்டு ப்பிரச்சனையையும் முறியடித்து வெற்றி பெறுகிறார்கள்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று கோரிக்கைப் பட்டியலை அளிப்பது என்று முடிவாகிறது. தொழிற்சங்கத்தின் நெருக்கடி நாளுக்கு நாள் கூடுவதாக நிர்வாகம் நினைக்கிறது. தொழிலாளிகளின் பேரணியை ரௌடிகளை வைத்து தாக்குவது என்று இடுக்கி பகுதியிலிருந்த அனைத்து தோட்ட முதலாளிகளும் ஒன்றுகூடிப் பேசி முடிவெடுக்கின்றனர். முதலாளிகளின் கூலிப்படையினர் தாக்குதலில்  பெண் தொழிலாளி ஒருவர் இறந்து விடுகிறார். நிர்வாகத்தின் வன்முறை வெறியாட்டம் மாவட்ட நிர்வாகத்தைக் கோபமடையச் செய்கிறது. ஆட்சித் தலைவர் முன்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. நேர்மையான ஆட்சித் தலைவரின் நியாயமான தீர்ப்பில் தொழிலாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன. நிர்வாகம் பழிவாங்கிடத் துடிக்கிறது. முதலாளி திடீரென்று ஒரு நாள் இருநூறு ரூபாய் பணமும், நீண்ட விடுமுறையும் கொடுத்து ஊருக்கு அவர்களை அனுப்பி வைக்கிறார். முதலாளியின் சூழ்ச்சியை அறியாத தொழிலாளர்கள் வேலையிழந்து மீண்டும் பழைய வாழ்விற்கே திரும்புகின்றனர். வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. அனைவரும் மறுவாழ்வு பெறுகின்றனர். அவர்களில் சிறுவன் ரவி பெரும் வெற்றி அலாதியானது. சப் கலெக்டராகப் பணிபுரிந்த அவன் தான் பிறந்து வளர்ந்த கம்பம் பள்ளத்தாக்கிற்கே பணி ஓய்வுக்குப் பிறகு திரும்புகின்றான்.   

இரண்டாவதொரு நாவலைப் போலவே தனித்து விளங்குகின்ற நாவலின் இரண்டாவது பாகம் இந்திய அரசியலில் 2014க்குப் பின் நடந்துள்ள கொடூர மாற்றங்களைச் சித்தரிக்கிறது. குறிப்பாக மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எவ்வாறு சீரழித்தது என்பதை நாவல் நன்கு விளக்குகிறது. நாவலின் நாயகன் ரவி மௌன சாட்சியாய் இருந்திட மனமின்றி இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எதிர்வினை ஆற்றிடும் வகையில் அரசியல் இயக்கங்களில் கலந்து கொள்கிறார். ஏழை மக்களுக்கு குறிப்பாக தன்னுடைய பால்ய காலத்தில் வட்டப்பாறையில் உடன் உழைத்த மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்து ரவி காலத்தைக் கழிப்பதாக நாவல் முடிகிறது.   

நாவலின் வெற்றிக்கு ஜனநேசனின் கள அனுபவங்களே துணை நிற்கின்றன. சமீப காலங்களில் ’டாக்குமன்றி’ நாவல் என்று அழைக்கப்படும் நாவல்களில் ஒன்றாக ’ஏலோ…லம்’ நாவலை வகைப்படுத்த முடிகிறது. தமிழும், மலையாளமும் கலந்த இனிமையான மொழி தமிழ்நாடு-கேரளா எல்லையோரப் பகுதிகளில் வழக்கில் இருப்பதை அறிவோம். நாவலாசிரியர் ஜனநேசனுக்கு எளிதில்கைவந்துள்ளம்மொழியில் ஏலக்காய் விவசாயம் குறித்த பல நுட்பமான விஷயங்களை அவர் சொல்லிச் செல்கிறார்.  

நாவலில் காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி சங்கம் தான் வட்டப்பாறை எஸ்டேட் தொழிலாளிகளை முதலில் சங்கமாக ஒருங்கிணைக்கிறது. இவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லாத போது தங்கள் பதாகையின் கீழ் வந்தடைந்த தொழிலாளிகளை அவர்களே மனமுவந்து சிஐடியுவிடம் அனுப்பி வைப்பது தொழிற்சங்க வரலாற்றில் கண்டிராத அதிசயமாகும். மேலும் கங்காணிகள் பொதுவாக எஸ்டேட்டுகளில் நிர்வாகத்திற்குச் சாதகமாக இருந்து தொழிலாளிகளைக் கொடுமைப்படுத்துவார்கள். ஆனால் இந்நாவலில் வர்க்க அணி வரிசையில் தங்களின் இடம் தொழிலாளிகளின் பக்கம் என்பதை உணர்ந்தவர்களாக கங்காணிகள் இருப்பதும் ஓர் அதிசயமே. தோட்டத் தொழிலாளிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளையும் கங்காணிகள் வகித்து வருகிறார்கள். பெண்கள் சார்பாக சிவனம்மா, பொன்னுத்தாயி, வெள்ளைத்தாயி ஆகியோர் சங்கப் பொறுப்புகளில் இணைந்திருந்து மிகவும் திறமையுடன் செயல்படுகிறார்கள். தொழிற்சங்க நடவடிக்கைகளை அருகிலிருந்து பார்த்து வளரும் சிறுவன் ரவி இளமையிலேயே வர்க்க அரசியலின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறான். அதனாலேயே உயரதிகாரியாக ஆன பிறகும் இடதுசாரி அரசியலை அவனால் இறுகப் பற்றிக் கொள்ள முடிகிறது. தன்னுடைய நீண்ட தொழிற்சங்க அனுபவத்தில் இருந்து தொழிலாளிகளின் போராட்ட நடவடிக்கைகளை எழுதியுள்ள ஜனநேசன் மேலும் இதுபோன்ற காத்திரமான நாவல்களைப் படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

– பெ.விஜயகுமார்

Thousands Members arrested in protest against Modi government's anti-labor move மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் தொழிற்சங்கத்தினர் ஆவேசம் ஆயிரக்கணக்கானோர் கைது

மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் தொழிற்சங்கத்தினர் ஆவேசம் ஆயிரக்கணக்கானோர் கைது



Thousands arrested in protest against Modi government's anti-labor move மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையால் தொழிற்சங்கத்தினர் ஆவேசம் ஆயிரக்கணக்கானோர் கைது

மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் கோவையில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அரசு பேருந்துகள் 98 சதவிகிதம் இயங்கவில்லை. கோவை கோட்டத்தில் மொத்தமுள்ள 2208 பேருந்துகளில் 100க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டது.

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடுவது, எரிபொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தியது, மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் சிறு குறு தொழில்களை சீரழித்தது உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 28,29 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தது. திங்களன்று துவங்கிய இந்த போராட்டம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.

கோவை கோட்டத்தில்  அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை,  80 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதேபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களான அக்வாசப், டெக்ஸ்மோ போன்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முழுமையான வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.   தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்களும் முழுமையான ஆதரவை தெரிவித்தனர். அன்றாடம் ஏறிவரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசிற்கு தங்களின் எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தினர்.  பொது வேலை நிறுத்தம் கோவை மாவட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, சிஐடியு, எச்எம்எஸ், எஐடியுசி, ஏஐசிசிடியூ எல்பிஎப், எம்எல்எப் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத போக்கினை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும்  மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி. பத்மநாபன், எல்பி எஃப் ரத்தினவேல், ஏஐடியூசி ஆறுமுகம், ஐஎன்டியூசி செல்லகுட்டி, எஸ்எம்எஸ் வீராச்சாமி, எம்எல்எப் தியாகராஜன், ஏஐசிசிடியு தாமோதரன், எஸ்டிடி யு ரகுபு நிஷர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போன்ற தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, கைக்குழந்தைகளுடன் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். தனித்தனியாக அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், கோவை வடக்கு, குனியமுத்தூர், உள்ளிட்ட 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக  காலை முதல் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்தும், கேரளாவிற்கும் பேருந்துகள் இயக்கப்படாததால், உக்கடம் பேருந்து நிலையத்தின் கேரளா பேருந்து நிற்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கோவையில் உள்ள காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பேருந்துகளில் பயணித்தனர். போராட்டத்திற்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்ததால், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் கோவையில் பொதுப்போக்குவரத்து அடியோடு முடங்கியது. எல்ஐசி, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மத்திய தொழிற்சங்கங்களில் அறைகூவலை ஏற்று எல்ஐசி வங்கி மற்றும் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக எல்ஐசி ஊழியர்கள்.  12 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி  அகில இந்திய அளவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர். எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படுவது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பாதிப்பு என தெரிவித்தனர்.  இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

நன்றி: தீக்கதிர்

இப்போதுள்ள நிலைமையும், நவம்பர் 26 பொது வேலைநிறுத்தமும் – ஹேமலதா (தலைவர், சிஐடியு) | தமிழில்: ச. வீரமணி

இப்போதுள்ள நிலைமையும், நவம்பர் 26 பொது வேலைநிறுத்தமும் – ஹேமலதா (தலைவர், சிஐடியு) | தமிழில்: ச. வீரமணி

தொழிலாளர்களின் இப்போதைய நிலைமை என்பது வழக்கம்போலான ஒன்று அல்ல. நிச்சயமாக இது வழக்கத்திற்கு விரோதமான ஒன்றாகும். ஆனாலும், இது புதிதா? இது ‘புதிய இயல்பானதா’? அல்லது இது ‘அசாதாரணமானதா’? இன்றைய நிலைமை எந்த வகையிலானது? இப்போதைய நிலைமையை நாம் கையாள்வதற்கு இதனைப் புரிந்துகொள்வது அவசியமாகும். மார்ச் 24 அன்று மாலை, நாடு…