இ.பா. சிந்தன் (Chinthan Ep) எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” (Naam Yen Cubavin Pakkam Nirkka Vendum) - புத்தகம் | www.bookday.in

இ.பா. சிந்தன் எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

போராட்டம்.. போராட்டம் …ஜென்ம ஜென்மமாய் போராட்டம், பரம்பரை பரம்பரையாய் போராட்டம், 500 ஆண்டுகளாய் போராட்டம்? ஏன் போராட்டம்? எங்கே போராட்டம்? எதற்காகப் போராட்டம்? ‘கியூபா’ என்பது அந்த நாட்டின் பெயர். மண்வளம், மழைவளம் மிக்க பசுமையான நாடு. அந்த நாடு பசுமையாக…
இ.பா. சிந்தன் (Chinthan Ep) எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” (Naam Yen Cubavin Pakkam Nirkka Vendum) - புத்தகம்

இ.பா. சிந்தன் எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

“நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம் என்னைக் கனவு காண்பவன் என்று கூறுபவர்களுக்காக மார்த்தியின் பின்வரும் வார்த்தைகளைக் கூறுகிறேன்: “உண்மையான மனிதன் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டான். மாறாக, கடமையிருக்கும் பாதையைத்தான் தேடுவான். அவன்தான் செயல்திறனுள்ள மனிதன்,…
இ.பா. சிந்தனின் “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

இ.பா. சிந்தனின் “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

“நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” - நூல் அறிமுகம் இ.பா. சிந்தன் கைவண்ணத்தில் கியூபாவின் புரட்சிகர வரலாறு - வீ. பா. கணேசன் கடந்த 65 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெஞ்சினத்திற்கு ஆட்பட்ட போதிலும், தீரத்துடன் போராடிக் கொண்டிருக்கும்…
பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 3: திருதராஷ்டிர ஆலிங்கனம் - ராமச்சந்திர வைத்தியநாத் | அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கியூபா

பழைய பஞ்சாங்கம் – 3: திருதராஷ்டிர ஆலிங்கனம் – ராமச்சந்திர வைத்தியநாத்

திருதராஷ்டிர ஆலிங்கனம் பழைய பஞ்சாங்கம் - 3 - ராமச்சந்திர வைத்தியநாத் கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சமரசத்திற்கு இடமின்றி உறுதியுடன் போராடிவரக்கூடிய நாடொன்று இப்பிரபஞ்சத்தில் உள்ளதெனில் அது கியூபாவாக மட்டுமே இருக்கக்கூடும். 1959ல் ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக இருந்த…
"கியூபாவின் மருத்துவப் புரட்சி நூல் அறிமுகம் | கியூபா | மருத்துவ | அரசு | சே | Prabakar MJ | https://bookday.in/

“கியூபாவின் மருத்துவப் புரட்சி – நூல் அறிமுகம்

"உலகுக்குத் தேவை குண்டுகள் அல்ல மருத்துவர்கள்" கியூபா நாடு என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது புரட்சியாளர்கள் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா. அதுபோன்று புரட்சி, கம்யூனிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதே எல்லோருக்கும் நினைவுக்கு வரும். 1960 ஆண்டு முதல் சோசலிச கியூபா…
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது அதுதன் கடமையைச் செய்து கொண்டே இருக்கும் காலம் தாழ்த்தாதீர்களென்ற ஜோஷ்மார்டியை நீங்கள் தேசியத் தலைவனாய்…
New plan to save the earth Article by Sajeev Kumar புவியைக் காக்க புதிய திட்டம் - சஜீவ் குமார்

புவியைக் காக்க புதிய திட்டம் – சஜீவ் குமார்




பிடல் காஸ்ட்ரோ ஒருமுறை பத்திரிக்கையாளரிடம் கேட்டார்,”நீங்கள் சோசலிசத்தின் தோல்வி பற்றி கேட்கிறீர்கள், ஆனால் முதலாளித்துவத்தின் வெற்றியை உங்களால் கூற இயலுமா?”.

ஏற்கனவே நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த முதலாளித்துவம் இன்று கோவிட் பெருந்தொற்று காரணம் மேலும் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. உலகில் உள்ள மாந்தர்களில் 237 கோடி பேர் உணவுக்கு திண்டாடும் நிலையில் உள்ளனர். இவர்கள் வளர்ச்சி இல்லாத நாட்டு மக்கள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் அடங்குவர்.(கட்டுரையாளர்)

நிலைமை இப்படி இருக்க உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) அக்டோபர் 2021 ல் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அது பெரும்பாலானோர் கவனத்தை ஈர்க்காமலேயே போனது. அதில் இனம், சாதி, பாலினம் ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளின் முகமூடி அவிழ்த்தல் என்ற உப தலைப்பில் கூறப்பட்டுள்ளது மிகுந்த கவனத்திற்குரியது. இன்று சர்வதேச வறுமைக்கோடு என்பதைவிட (அதாவது ஒருநாள் 1.90 அமேரிக்க டாலர் வருவாய்) இந்த பல்பரிமாண வறுமை அளவீடு என்பது துல்லியமானது.

உடல் நலம் (ஊட்டச்சத்து, சிசு மரணம்), கல்வி (பள்ளி செல்லும் காலம், பள்ளி வருகை), வாழ்க்கைத் தரம் (சமையல் எரிவாயு பயன்பாடு, சுகாதாரம், தண்ணீர், மின்சாரம், வீடு, சொத்து) ஆகிய 3 அச்சுகளில் 10 குறிகாட்டிகள் மூலம் பல்பரிமாண வறுமை அளவிடப்படுகிறது. 109 நாடுகளில் 590 கோடி மக்களின் வாழ்வியல் சூழலிலிருந்து பல்பரிமாண வறுமை பற்றிய ஆய்வை இந்த குழு மேற்கொண்டது. அதில் அவர்கள் கண்டறிந்தது உலகில் 130 கோடி பேர் (ஐந்தில் ஒருவர்) பல்பரிமாண வறுமையில் வாழ்கின்றனர்.

* அதில் 64.4  கோடி அதாவது ஏறக்குறைய பாதி பேர் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள்.
* அதில் 85% பேர் சகாரா கீழ்மை (sub-Sahara) ஆப்பிரிக்காவில் உள்ளனர்.
* 100 கோடி பேர் சுவாசக் கோளாறு உண்டாக்கும் விறகு போன்றவை பயன்படுத்தி சமைக்கின்றனர், சுகாதாரமற்ற கழிப்பிடம் மற்றும் தரமற்ற வீடுகளிளை பயன்படுத்துகின்றனர்.
* 56.8 கோடி பேர் குடிநீருக்காக 30 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டியுள்ளது.
* பல்பரிமாண வறுமை கொண்ட 78.8 கோடி பேர் உள்ள குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவராக இருக்கின்றனர்.
* இத்தகைய வறுமையில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட  66% பேர் வாழும் குடும்பங்களில் ஒருவர் கூட குறைந்தது 6 வருடங்கள் கல்விச்சாலை செல்லாதவர்களாக உள்ளனர்.
* 67.8 கோடி பேருக்கு மின்சார வசதி இல்லை.
* 55 கோடி பேருக்கு  வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கணிப்பொறி, விலங்கு பூட்டிய வண்டி, மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற எட்டு வகை சொத்தில் ஏழும் இல்லாதவர்களாக உள்ளனர்.

அறுதி எண்ணிக்கை பார்க்கும்போது UNDP அறிக்கையில் உள்ளது குறைவாக தோன்றலாம். உதாரணம் உலக வங்கி 2019-ல் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் உலக மக்கள் தொகையில் 90% பேருக்கு மின்சார வசதி உள்ளது. (அதாவது அன்றைய மக்கட்தொகை படி 76.7 கோடி பேருக்கு மின் வசதி இல்லை-கட்டுரையாளர்). அதேபோல 2020-ல் நடந்த ஆய்வில் 350 கோடி பேருக்கு மின் வசதி இல்லை என்கிறது. ஆனால் UNDP அறிக்கையோ 67.8 கோடி பேருக்கு மட்டுமே மின் வசதி இல்லை என்று சொல்கிறது. அறுதி எண்ணிக்கை குறைவு என்றாலும் UNDP அறிக்கை தரும் செய்தி மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது, அது என்னவெனில், நாள் தோறும் ஏற்றத்தாழ்வு வளர்ந்துவரும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முதல் முறையாக UNDP ஏற்றத்தாழ்வுகள் நுட்பமான விஷயங்களில் கவனத்தை குவித்து -இனம், சாதி படிநிலைகள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சமத்துவமற்ற சமூக அடுக்குகள், மரபுவழி வந்த பண்டைய பழமைவாத பாரம்பரியம் போன்ற மனித சுயமரியாதையை தாக்குதலுக்கு உள்ளாக்கும் மோசமான விஷயங்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. 41 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் பல்பரிமாண வறுமை என்பது சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களை மிக மோசமாக பாதிக்கிறது என்று UNDP அறிக்கை கூறுகிறது. உதாரணமாக இந்தியாவில் பட்டியல் சாதி/ பட்டியல் இன மக்களை வறுமை மற்றும் பாகுபாடு அதிகமாக பாதிக்கிறது, அது அவர்களின் ஏழ்மையை மேலும் பூதாகரமாக்குகிறது.

பல்பரிமாண வறுமைக்கு உள்ளாகும் 6-ல் 5 பேர் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். 2010 புள்ளிவிவரப்படி ஒவ்வொரு வருடமும் மருத்துவ செலவு காரணமாக 6.3 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுகின்றனர் (அதாவது ஒரு நொடிக்கு 2  இந்தியர்). பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கூடியிருக்க வாய்ப்பு உள்ளது ஆனால் சரியான தகவுகள் சேகரிப்பது கடினமானதாக உள்ளது. பட்டியல் சாதி பட்டியல் இன மக்கள் பெரும்பாலும் மருத்துவ சுகாதார கட்டமைப்புகளுக்கு வெளியே உள்ளதால் பெருந்தொற்று இச்சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்ற வருடம் இலத்தின் அமேரிக்கா நாடுகளின் பொலிவாரியன் கூட்டமைப்பு மற்றும் மக்களின் வர்த்தக ஒப்பந்தம் (ALBA- TCP) ஆகியவற்றின் பொதுச்செயலாளர் சாச்சா லோரண்டியின் வேண்டுகோளுக்கிணங்க, முக்கண்டம் (Tricontinental) சமூக ஆய்வு  நிறுவனம் மற்றும் காரகாசின்(வெனிசுலா) சைமன் போலிவார் நிறுவனம்  மற்றும் உலகளாவிய 26 ஆய்வு நிறுவனங்கள் உதவியுடன் சமகால நெருக்கடிகளைப் பற்றி சர்வதேச கலந்துரையாடலை துவங்கப்பட்டது. அதன் விளைவுதான் “புவியை காக்க ஒரு திட்டம்”.

இரண்டு வகையான உரைகள், ஒன்று,  உலக பொருளாதார  மன்றம் முதல் அனைவர்நலம் உள்ளடக்கிய முதலாளித்துவ சபை வரை உள்ள பிற்போக்கு தாராளவாத அறிவு ஜிவிகள், மற்றொன்று, தொழிற்சங்க கோரிக்கைகள், இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஆகியவற்றின் உரைகளை கூர்மையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் பின்னதில் இருந்து எடுத்த தகவல்கள் முன்னதின் குறைபாடுகளை புரிந்துகொள்ள உதவியது. உதாரணம், பழைமைவாத, தாராளவாத உரைகள் பெருந்தொற்று காலத்தில்  முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்த வளர்ந்த நாடுகளின் வங்கிகள் 16 டிரில்லியன் ( 16 லட்சம் கோடி) அமேரிக்க டாலர்களை பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடாமல் நிதி துறை நிறுவனங்களையும் தொழில் நிறுவனங்களையும் காப்பாற்ற பயன்படுத்தியுள்ளதை கண்டுகொள்வதில்லை. இந்த நிதி மிகச்சிறப்பான பொது சுகாதாரத்துக்காகவோ அல்லது படிம எரிபொருளுக்கு மாற்றான மாசு அற்ற பசுமை ஆற்றல்களை உருவாக்கும் முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 

இந்த திட்டம் ‘ஜனநாயகமும் உலக அமைப்பும்’ என்பதில் துவங்கி “டிஜிட்டல் உலகம்” வரை 12 முக்கிய அம்சங்களை விவாதிக்கிறது. அதில் கல்வி பற்றிய பகுதியின் பரிந்துரைகள் பின்வருமாறு உள்ளது.

  1. பொதுப்பள்ளி மூலம் கல்வி தனியார்மயமாவதையும், கல்வி சரக்காக மாறுவதையும் தடுத்தல்.
  2. கல்வியாளர்களை கல்வி நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பில் அமர்ந்துதல்.
  3. அடித்தட்டு மக்களை பயிற்சி மூலம் ஆசிரியர்களாக உத்திரவாதப்படுத்துதல்.
  4. மின்சார இணைப்பு மற்றும் எண்மின் (digital) இடைவெளிகளை நிரப்புதல்.
  5. பொதுத்துறை மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அதிவேக இணைய வசதிகளை உருவாக்குதல்.
  6. பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வியின் அனைத்து கூறுகள் மற்றும் கல்விக்கு அப்பாற்பட்ட செயல்முறைகள் ஆகியவற்றுக்கான வாய்ப்பு உருவாக்குதல்.
  7. மாணவர்கள் உயர்கல்விகளில் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்க வழிகள் உருவாக்குதல்.
  8. கல்வியை வாழ்நாள் முழுதும் பெறவேண்டிய வாய்ப்பை வாழ்க்கையின் அனைத்து நிலையில் உள்ள மனிதர்களும் பெற ஏற்பாடு செய்தல். அதன் மூலம் கல்வி என்பது வேலைவாய்ப்பு பெறுவதற்கு என்பது மாறி அது அறிவு மற்றும் சமூகத்தின் நீடித்த வளர்ச்சியை உருவாக்கும் சமூகக் கட்டுமானத்துக்கு உறுதுணையாவதாக இருக்கவேண்டும்.
  9. அனைத்து வயதுள்ள தொழிலாளர்களும் அவரவர் துறையில் உள்ள உயர்கல்வி மற்றும் தொழில் கல்விக்கு மானியம் அளித்தல்.
  10. உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வியும் அவரவர் பேசு மொழியில் பயில்வதற்கான வாய்ப்புகளை மொழிபெயர்ப்பு மூலம் பெறுவதற்கு அரசாங்கம் உத்திரவாதப்படுத்துதல்.
  11. தொழில், விவசாயம் மற்றும் சேவை துறைக்கு தேவைப்படும் கூட்டுறவு மேலாண்மை கல்வி நிலையங்களை நிறுவுதல்.

 “புவியைக் காக்கும் திட்டம்” என்பது  1945ல் ஐ.நா. சாசனம் ஏற்படுத்திய கோட்பாடு காரணமாக, இதுவரை 193 நாடுகள் கையெழுத்திட்ட, அனைத்து நாடுகளும் கட்டுப்படவேண்டிய நிபந்தனையும் கொண்டதன் அடிப்படையில் உருவானதாகும். இந்த திட்டம் உருவானதன் நோக்கம் இதை விவாதப்பொருளாக்கி விரிவாக்க வேண்டும் என்பதே. இந்த திட்டம் நிகழ்காலத்தை விமர்சிப்பது மட்டுமன்றி எதிர்கால சமூகத்தை நிகழ்காலத்தில் கட்டமைபதற்கான முயற்சியும் ஆகும்.

(தோழர் விஜய் பிரசாத் டிரைகாண்டினண்டல் தளத்தில் எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)

Sethu Anandhan's Fidel Castro Book Review By Theni Sundar. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

சேது ஆனந்தன் எழுதிய *ஃபிடல் காஸ்ட்ரோ*: விறுவிறுப்பான, வண்ணமயமான ஒரு நூல்



தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர் தோழர் சேது ஆனந்தன்.. அவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர். எங்கள் மண்ணின் சிறந்த ஆளுமைகளில் அவரும் ஒருவர்.

பள்ளி ஆசிரியராக, ஓய்வறியா சங்கவாதியாக பணிபுரிந்தவர் பணி ஓய்வுக்கு பிறகு படைப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார்.. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் அப்போது தான் மாநில பொறுப்பிற்கு வந்த சமயம். தோழர் சேது ஆனந்தன் அவர்களின் முதல் நூல் ஜோசப் ஸ்டாலின் அப்போது தான் வெளிவந்தது. அதற்கான விழா தேனியில் நடந்தது. அவ்விழாவில் அவர் சார்ந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர், தமிழகம் அறிந்த தோழர் மாயவன் கலந்து கொண்டிருந்தார்.

அதே போல அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் தோழர் ஆர்.எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் ஆர். முத்து சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்.. இத்தனை பெரிய ஆளுமைகள் பங்குபெற்ற அந்நிகழ்வில் என்னை அங்கீகரித்து, எனக்கு ஒரு முக்கிய இடத்தை அளித்து என்னை ஊக்கப்படுத்தினார்.. எனக்கு அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்தை எண்ணி தோழரை அன்று நான் ஆச்சரியமாகப் பார்த்தேன்.. இந்த சமூகத்திற்காக நீங்கள் செய்து வரும் பணிகள், உங்கள் உழைப்பின் பயன் தான் இது வேறொன்றும் இல்லை தோழர் என்று என்னிடம் கூறினார். எனக்கு அது நன்றாக நினைவில் உள்ளது..

அந்த நிகழ்வும் குறித்தும் நிகழ்வில் நான் பேசியது குறித்தும் அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் தோழர் முத்துசுந்தரம் அவர்கள் சிலாகித்துப் பேசியதாகவும் என்னைப் பற்றி விசாரித்ததாகவும் சில நாட்கள் கழித்து பேசியபோது ஈரோடு மாவட்ட பேராசிரியர் மணி அவர்கள் கூறியதும் நினைவில் வந்து போகிறது..

காலங்கள் வேகமாக ஓடி விடுகின்றன. அதே போல படைப்பிலக்கியம் நோக்கி தோழர் சேது ஆனந்தன் அவர்களும் மக்கள் சீனம், மகாபாரதம் என அடுத்தடுத்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். இப்போது பிடல் காஸ்ட்ரோ என்கிற நூலை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் அற்புதமான அணிந்துரை வழங்கி இருக்கிறார்.

கடிக்க கொஞ்சம் சிற்றுண்டி, குடிக்க ஒரு குவளை தேநீர், அதற்கான நேரம் – இவை போதுமானவை தோழர் சேது ஆனந்தன் அவர்களின் ஃபிடல் காஸ்ட்ரோ நூலை வாசித்து விடலாம்.. அவ்வளவு சிறிய நூலா என்று நினைத்து விட வேண்டாம்.. 72 பக்கங்கள் இருக்கின்றன. அப்போ, போதுமான அளவிற்கு தகவல்கள் இல்லையோ என்றும் தவறாக நினைத்து விடக் கூடாது..

கியூபா எவ்வாறு உருவானது முதற்கொண்டு தோழர் காஸ்ட்ரோ அவர்களின் குடும்பப் பின்னணி, படிப்பு, காதல், புரட்சி, போராட்டங்கள், அமெரிக்காவின் தில்லுமுல்லுகள், சர்வாதிகாரி பாடிஸ்டா அரசை தூக்கி எறிவது, நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருதல், உயிர்த் தோழன் சே குவேரா உடனான நட்பு, முயற்சிகள், சர்வதேச அரங்குகளில் அவரது எழுச்சி பொங்கும் உரை, அணி சேரா நாடுகளின் தலைமைப் பாத்திரம், அரசியல் ஓய்வு, 600 க்கும் மேற்பட்ட அமெரிக்க கொலை முயற்சிகளையும் முறியடித்து கடைசியாக இயற்கை மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வின் அத்தனை அத்தியாயங்களும் விறுவிறுப்பாக வாசிக்க தந்திருக்கிறார் தோழர் சேது ஆனந்தன்.

புதிதாக தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ குறித்து அறிய விரும்பும் அனைவருக்கும் தாராளமாக பரிந்துரைக்கலாம்.. ஏற்கனவே பிடல் காஸ்ட்ரோ குறித்த பிற நூல்களை வாசித்தவர்கள் கூட தோழரின் புதிய பாணியிலான, எளிய நடையிலான இந்நூலை ஒரு முறை வாசிக்கலாம்..

எந்த முக்கியமான சம்பவங்களும் விடுபடாமல் அதே நேரத்தில் விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார்..

தோழர் சேது ஆனந்தன் அவர்களின் *ஃபிடல் காஸ்ட்ரோ* நூல் பெற விரும்புவோர் தொடர்புக்கு : 9442022301

தேனி சுந்தர்

வாரிசாட்சி வழிகாட்டி ‘கியூபா’ – அண்டனூர் சுரா 

வாரிசாட்சி வழிகாட்டி ‘கியூபா’ – அண்டனூர் சுரா 

‘இது நானாக எடுத்து முடிவு. கியூபாவின் எதிர்காலம், அடுத்தத் தலைமுறை, இளைஞர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. எதுவொன்றும் இந்த முடிவை நோக்கி என்னைத் தள்ளவில்லை. நான் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினாலும், என் எஞ்சிய வாழ்நாட்களைக்…