புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சுஜாதாவின் “21ஆம் விளிம்பு” – பெ. அந்தோணிராஜ் 

        சுஜாதாவை அறிமுகப்படுத்துவது தேவையிருக்காது. இவர் 1994-95 ஆம் ஆண்டுகளில் குமுதம் இதழில் இணையாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அது சமயம் இக்கட்டுரைகள் தொடராக வந்துள்ளன. இப்போது கிழக்கு பதிப்பகம் நூலாக தந்துள்ளது.
      நூல் முழுதும் செய்திகள் நிரம்பி உள்ளது. கவிதைகள், விடுகதைகள், ஜோக்குகளுக்கும் குறைவில்லை. திகட்டாமல் தந்துள்ளார் சுஜாதா.
        ஒரு வாசகர் விடாப்பிடியாக அந்த மெக்ஸிகோ சலவைக்காரி செக்ஸ்  ஜோக்கை இப்போதாவது கூறுங்கள் எனக்கேட்க,
அதுபற்றி இப்போதும் எழுதமுடியாது என்று கூறிவிட்டு, நமது பிரபந்தங்களிலும், கம்பராமாயணத்தில் செக்ஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அருணகிரி நாதரின் திருப்புகழில் பாதி பக்தியும், பாதி செக்ஸும் பேசப்பட்டுள்ளன எனக்கூறி, பதத்திற்கு ஒரு பாடல்,
“அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும்  அங்குள………..”
என்று இப்படி எல்லா இடங்களிலும் நீங்கள் விரும்பிய சலவைக்காரி ஜோக் உள்ளது என தன் புலமையையும், வாசிப்பனுபவத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
             ‘நாளை தான் உலகின் இறுதிநாள் என்றால் தமிழ் நாட்டில் வெளிவரும் பத்திரிகைகள், நாளிதழ்கள் எப்படி தலைப்பு செய்தி வெளியிடும்’ என்று கூறியுள்ளார், பாருங்கள்
தினமணி = நாளை பஸ்கள் ஓடாது
தினத்தந்தி = நாளை தினத்தந்தி வராது
தினமலர் = நாளை தினத்தந்தி வராது (பகடி எப்படி )
Hindu = alleged end of world, arrangments made.
Express = pressure on rao’s ministry to stepdown before world ends. Before culprits will be punished.
குமுதம் = இனி ஏதும் வழக்கில்லை (இலவசமாக சாஷா கேட்டு வாங்கிக்கொள்ளவும் )
ஞானபூமி = மீண்டும் சந்திப்போம் (சொர்க்கத்திலிருந்து வெளிவரப்போகும் ஒரே இதழ் )
ஆனந்தவிகடன் = உலக முடிவு ஸ்பெஷல், அதிக பக்கங்கள்
ஜூனியர் விகடன் =கடைசி இரவில் என்ன செய்வோம், ஆந்தையாருடன் ஒரு ஜாலி அரட்டை.
விடுதலை = நாளை பார்ப்பன ஆதிக்கம் ஒழியும்
முரசொலி = இறுதி போராட்டத்தில் இணைவோம்
கல்கி = நாளை முடிகிறது உலகு, அசடு வழிகிறது அரசு.
இன்றைய செய்தித்தாள்கள் -Today Newspapers ...
    இதைப் படித்த பின்னர் சிரிக்காமல் இருக்கமுடியுமா? முடியல சுஜாதா என்று வடிவேல் மோடில்தான் சொல்லவேண்டிவரும்.
‘சுகமான குடும்ப வாழ்க்கைக்கு பத்து கட்டளைகள்’ என்று வரிசைப்படுத்துகிறார். நான் ஒரு இரண்டு மட்டும் கூறுகிறேன்.
ரூல் 1: மனைவியை பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தக்கூடாது, தனியாக இருக்கும்போது எவ்வளவு வேண்டுமென்றாலும் அவமானப்படுத்திக் கொள்ளலாம்.
ரூல் 2: மனைவியின் dressing table ஐ நோண்டக்கூடாது.
‘பொன்மொழிகள்’ என்ற பகுதியில் இங்கிலாந்து இளவரசி ஆன் கூறியதாக இரண்டு,
“பொது இடங்களுக்கு நான் வரும்போது, நான் கணைக்கவோ, பல்லை கடிக்கவோ, பாதங்களை தரையில் தேய்க்கவோ, வாலை ஆட்டவோ வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றார்கள்.
“மகப்பேறு, மனைவியாய் இருப்பதின் அபாயங்களில் ஒன்று “
1952 ல் அரேபியாவில் நடந்த தண்டனையைப் பற்றி குறிப்பிடும்போது பயங்கரமாக உள்ளது. முறையில்லாத தொடர்பில் இருந்த இரண்டு பேருக்கான தண்டனை.
“தவறு செய்த ஆண் கைகள் பின்னால் கட்டி கொண்டுவரப்பட்டு அரசரின் பிரதிநிதி முன்னர் மண்டியிட்டவுடன், அவனுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவன் அவனின் தோளை தட்டுகிறான், அந்த நிலையில் அவன் திரும்பிப்பார்க்கும் போது கழுத்துப்பகுதி சற்று உயர்ந்திருக்கும், வினாடி நேரத்தில் அவன் தலை துண்டிக்கப்படுகிறது. அந்த இளம்பெண் அதே போல கைகளும் வாயும் கட்டப்பட்டு முன்னால் மண்டியிட, ஒருவன் அவள் பின்னாலிருந்து அவளது தோள்பட்டையில் நூறு முறை கம்பு கொண்டு தாக்குகிறான், அவள் மயங்கி விழுந்த பின் மைதானத்தில் சென்று ஒரு தூணில் நிறுத்தப்படுகிறாள், லாரியில் கையளவு கற்கள் வந்து கொட்டப்படுகிறது, சுற்றியிருந்த அனைவரும் கல்லால் அவளை தாக்குகிறார்கள், இடையில் ஒரு டாக்டர் வந்து நாடிப்பிடித்து பார்த்து திரும்புகிறார். எப்போது அந்த டாக்டர் அவள் இறந்துவிட்டதாக அறிவிக்கிறாரோ அப்போது கல் எறிதல் நிறுத்தப்படுகிறது.
எழுத்துஞானி சுஜாதா! | Sujatha death anniversary ...
நமது சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் அருமையாக மொழிபெயர்த்த A.K.ராமானுஜனை பற்றி எழுதியும், அவருடைய கவிதைமொழிபெயர்ப்பு ஒன்றையும் கொடுத்துள்ளார்.
“சிறு வெள்ளைரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கியா ஆங்கு
இளையவள் முளைவாள் எயிற்றாள்
வளையுடைக் கையள் -என் அணங்கியோளோ “
இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு,
“As a little white snake
With lovely strips on its young body
Troubles the jungle elephant
This slip of a girl
Her teeth like sprouts of new rice
Her wrists stacked with bangles
Troubles me. “
    என்ன ஒரு எளிமையான மொழிபெயர்ப்பு, அருமை, இந்த புத்தகம் கிடைத்தால் எதிர்காலம் ஆங்கில வழி கற்கும் தமிழ் மாணவர்களுக்கு உதவலாம்.
‘லிமரிக்’ என்ற ஒரு கவிதை வடிவத்தை அறிமுகப்படுத்துகிறார் ஒரு கூட்டத்தில். அதாவது முதல் இரண்டு அடிகளிலும்  ஐந்தாவது இறுதி அடியிலும் இறுதி சீரில் எதுகை வரவேண்டும். மூன்று நான்காவது அடிகளில் முதலில் எதுகை பயின்று வரவேண்டும் எனக்கூறிய அடுத்த வினாடி ஒரு கவிராயர் ஒரு லிமரிக் எழுதிக்கொடுத்துள்ளார்.
“அண்ணாமலை ரெட்டியாரின் சிந்து
அறியாமையால் சுஜாதா இங்கு வந்து
சொன்னாரைய்யா லிமரிக் என்று
என்ன செய்ய விதியை நொந்து “
இது எப்படியிருக்கு. On the spot ல கவிதையெழுத ஆள் இருக்கில்ல.
       இன்னும் நிறைய செய்திகள், விடுகதைகளை நான் கொடுக்கவில்லை, வாசித்து சுஜாதாவை ரசித்து மகிழுங்கள்.
21 ஆம் விளிம்பு- 21 Aam Vilimbu
நூல்: 21ஆம் விளிம்பு 
ஆசிரியர்: சுஜாதா 
பதிப்பகம்: கிழக்கு 
விலை: ரூ. 200
அன்புடன்,
பெ. அந்தோணிராஜ் 
தேனி.