வானம் பார்த்து வாழ்ந்து விட்டோம்
வாழ்வை வயலில் நட்டு விட்டோம்
பச்சைப் பயிராய் செழிக்கும் என்றே
வாழும் கனவு கண்டு விட்டோம்.
தலைமுறை கடந்தும் மாற்றம் இல்லை
கடனாளி ஆனதே எங்கள் கதை
குற்றம் ஒன்றும் புரியவில்லை.
போகும் வழியும் தெரியவில்லை.

காலம் தவறிய அடைமழையா?
தூர் வாராத நீர் நிலையா?
தேக்க மறந்த நதி நீரா?

சுரண்டப்பட்ட ஆற்று மணலா?
குடியிருப்பான விளைநிலமா?சாயப்பட்டறை கழிவுநீரா?
காக்கத் தவறிய அரசா?
காலம் தவறிய புரிதலா?

– அபர்ணா செங்கு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *