நூல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள் – கார்த்திக்நூல்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

மலையாள மூலம்: மனோஜ் குரூர்

தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ

விலை: ரூ.250

வெளியீடு: வம்சி புக்ஸ் 

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் எழுதிய வேள்பாரி வரலாற்றுப் புதினம் படித்தபின் அவரின் இறுதிநாள்களைக் குறித்து அறியும் ஆவல் எழுந்தது. அதுசமயம் வேள்பாரி வாசகர் மன்றம் முகநூல் பக்கத்தில் ஒரு வாசகர் நிலம் பூத்து மலர்ந்த நாள் நூலில் உள்ள சில கருத்துக்களை குறிப்பிட்டு சொல்லியிருந்தார்.  அப்போதே இந்த புத்தகத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. Book my book இணைய தளத்தில் இந்த புத்தகத்தினை வாங்கி படிக்கத்தொடங்கினேன்.

கதைக்களம் மூன்று பகுதியாக இடம்பெற்றுள்ளது.

**கொலும்பன்** எனும் முதல் பகுதியில் பாணர்களின் வறுமை வாயிலாக சங்ககால வாழ்வியல் புடம் போட்டு காட்டப்பட்டுள்ளது. பெரும்பாணன், கொலும்பனும் அவர்களின் குடும்பத்தாருடன் வறுமை நீங்க வேண்டியும் சிறுவயதில் தங்களை விட்டு நீங்கிய மயிலனையும் தேடி நன்னனின் நாட்டிற்கு செல்வதாக தொடங்குகிறது இக்காவியம். வழியில் பரணரின் வழிகாட்டலில் பாரியின் நண்பர் கபிலரை சந்திக்க செல்கின்றனர். கபிலரின் மூலமாக பாரியினை சந்திக்கும் நேரத்தில் அங்கு பாரி கொல்லப்படுவதுடன் முதல் பகுதி நிறைவு பெறுகிறது.

'நிலம் பூத்து மலர்ந்த நாள்' : சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக  கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது!

**இரண்டாம் பகுதி-சித்திரை**

பாரி கொல்லப்பட்டதும் பறம்பிலிருந்து உயிர்தப்பி வறுமை நீங்க வழிதெரியாமல் கால்போன போக்கில் நடந்து ஆயர் குலத்தில் நஞ்சமடைந்து இனி எங்கும் செல்ல வேண்டாம் என்ற தங்குகிறது பாணர்கூட்டம். இந்நிலையில் கொலும்பனின் மூத்த மகள் சித்திரையை ஒரு போர்வீரன் காதலிக்கிறான். சித்திரை காதலை ஏற்றுக்கொண்டாளா? மறுத்தாளா?
மயிலனை தேடிச்சென்ற சந்தனின் நிலை என்ன?

சித்திரையின் முடிவு என்ன என்பது குறித்து இரண்டாம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

**மூன்றாம் பகுதி- மயிலன்**

மயிலன் ஏன் தான் பிறந்த பாணர்குலத்தை விட்டு நீங்கினான். வழியில் என்ன நடந்தது?
நன்னன் ஏன் கொல்லப்பட்டான்?
மயிலின் ஏன் பறம்பிற்கு சென்றான்?

போர்வீரனான மகீரனுக்கும் மயிலனுக்கும் என்ன தொடர்பு? மயிலனின் வறுமை நீங்கியதா?
போன்ற அனைத்து விடை தெரியா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் சுவராசியமாக செல்கிறது இறுதிப்பகுதி.

நூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள் – வல்லமை

நூல் முழுவதிலும் குறவன் குறத்தியர், உழவன் உழத்தியர் , ஆயர் குலத்தினரின் வாழ்வியல், ஏறு தழுவுதல் பாலை நிலத்தில் வாழும் மறவர்களின் வாழ்க்கை முறை, கடல் வணிகம், யவனர்கள், உமணர்கள் என அனைத்தும் கவிதையாக இடம்பெற்றுள்ளது.
**இன்மை என்பது இல்லாமலிருக்க வேண்டும்**

தரமான புத்தகம்.
மொழிபெயர்ப்பு வாடையே தெரியாத நூல்.