விவசாய உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்துவது சம்பந்தமாகச் சமீபத்தில் மத்திய அரசு மூன்று அவசரச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளதை பாஜக தவிர மற்ற அனைத்து பிரதான கட்சிகளும் எதிர்த்துள்ளன.

கொரானாவைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட ஊரடங்கு தடைகள் சற்று தளர்வுகள் துவங்கிய ஜூன் மாத துவக்கத்தில் மத்திய அரசு பிறப்பிக்கப்பட்ட மூன்று மசோதாக்களினால் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான மாநில பண்டகசாலை மற்றும் சந்தைகளில் எதிர்காலத்தில் மாற்றங்கள் நிகழக்கூடும். இந்த அவசரச் சட்டங்களின் நோக்கம் தங்களின் விவசாய உற்பத்தி பொருட்களைச் சந்தையைத் தாண்டி சுதந்திரமாக விற்பனை செய்து கொள்ளும் நோக்கத்திற்காக விவசாயத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கிறது.

விவசாயிகளின் உற்பத்திக்கான வர்த்தகம் மற்றும் வணிகம் ( மேம்படுத்தல் மற்றும் வசதிப்படுத்தல்) அவசரச் சட்டம் 2020,விவசாயிகள் ( அதிகாரமளித்தால் மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் ( திருத்த) அவசரச் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். அதிகாரப்பூர்வமான அறிக்கையின்படி. விவசாயிகள் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காகத் திறமையான விவசாய சந்தையை உருவாக்கும் வகையில் மத்திய அரசு விரிவான தலையீட்டினை மேற்கொண்டுள்ளது. மேலும் குறிப்பிடுகையில். விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சிக்கலிலிருந்து மீட்டெடுத்து முழுமையான வளர்ச்சியை அங்கிருப்பதற்காக மாநில அரசுகளின் கீழ் உள்ள அரசாங்கம் மாதிரி விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை சந்தை (ஹஞடுஆ) சட்டம் 2017 மற்றும் மாதிரி விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்தப் பன்னை சட்டம் 2018 ஆகியவற்றில் மத்திய அரசு முன் வரைவு மேற்கொள்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தவிர மற்ற பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த அவசரச் சட்டங்களை எதிர்க்கின்றன அல்லது விளக்கங்களையும். பாதுகாப்பு அம்சங்களையும் கோருகின்றன.பஞ்சாப் மாநில அரசு இந்த அவசரச் சட்டங்கள் கூட்டுறவு கூட்டாட்சி உணர்வுகளுக்கு விரோதமானது என்றும் மத்திய அரசு இவ்விசயத்தில் மறுசிந்தனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் ஒரே இந்தியா ஒரே விவசாயச் சந்தை எனும் கோஷத்தை நிராகரிக்கிறது. மேலும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பயிர்களுக்கும் விசேசமான தனித்துவமாகக் குணங்களையும் நுட்பங்களையும் கொண்டுள்ளன. எனவே ஒருவிதமாகக் காட்சிப்படுத்தக்கூடாது.

பஞ்சாப் அரசு அனைத்து கட்சிகளைக் கொண்ட பிரதி நிதிக்குழுவைப் பிரதமரைச் சந்திக்க ஆலோசித்து வரும் வேளையிலேயே விவசாயிகளைக் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கு அவசரச் சட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. விவசாயிகளும் ஏற்கனவே தெருவில் இறங்கி விட்டார்கள்.

கிசான் மஸ்துர் சங்க்ராங் சமதியின் கீழ் திரட்டப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியாப்பூர், பஹிகா,டார்ன்டரான்,மோகா,ஜலந்தர் மற்றும் அமிர்தரஸ் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட நீதிபதிகளிடம் மத்திய அரசின் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தினை பற்றி பாரதிய கிசான் யூனியன் தலைவர் அஜ்மீர் சிங் லோஹாவால் அச்சத்தைத் தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்தையும் ஓரங்கட்டிவிட்டு புறவழியில் அவசர கதியில் இந்த அவசரச்சட்டங்களைக் கொண்டு வருவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல் ...

ஒரே நாடு ஒரே விவசாயம் என்பதை மோடி விரும்புவாரானால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் வரை காத்திருந்து அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளையும் பெற்றுச் சரியான முடிவிற்கு வந்திருக்க வேண்டும். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்குப் பிறகு அவர்கள் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க மாட்டார்கள். முதலமைச்சர்களின் நம்பிக்கையினை எடுத்துக்கொள்ள மெத்தனமாக இருப்பதால் அவர்கள் விவசாயிகளின் தலைவர்களிடமோ அல்லது பஞ்சாயத்துத் தலைவர்களிடமோ பேசக்கூட மாட்டார்கள். ஆனால் பாதிப்பிற்குள்ளாவது யார்? மத்திய அரசு அல்ல. இந்த தேசத்திற்காக ஒவ்வொரு நாளும் தனது நிலத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண விவசாயிகள் தான். லோஹோவால் மேலும் இந்த அவசரச்சட்டங்கள் விவசாயிகளைக் கொன்று விடும். ஒருமுறை தனியார் நிறுவனங்கள் காலூன்ற முடியுமானால் அவர்கள் சந்தையைக் கட்டுப்படுத்துவதை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக்கொள்வார்கள். சந்தைப் பொருட்களின் விலைகளையும் அவர்கள் கட்டுப்படுத்துவார்கள். முடியுமானால் சந்தையைக் கூட வாங்கி விடுவார்கள். அவர்களை யார் கட்டுப்படுத்துவது எது? விலைகள் பற்றி அவசரச் சட்டம் தரும் உத்தரவாதம் சந்தையை ஒருபோதும் நெருங்க முடியாது என்கிறார்.

அரசாங்கம் அனைத்து வரிகளையும். கட்டணங்களையும் தள்ளுபடி செய்து விடும் என்று அவர்கள் கூறுவது உண்மையில் பெரும் நிறுவனங்களுக்குத் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பஞ்சாப் சந்தை வாரியத்தின் தலைவரான இருந்தவன் என்ற முறையில் இதில் எனக்கு அனுபவம் உண்டு.
சட்டத்தின் பாதிப்புக்கள் இந்த வருடத்தில் தெரியாது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். நமது விவசாயம் பெரும் நிறுவனங்களிடம் கரைந்து போய்விடும். சாதாரண விவசாயிகளுக்காக வேலை செய்ய வேண்டிய மத்திய அரசு அம்பானி .அதானிகளுக்காகச் சேவை செய்கிறது. அவசரச்சட்டத்தால் பெரும் நிறுவனங்கள் விவசாயத்திற்குள் நுழைந்து விடும். விவசாயி தன்னுடைய சொந்த நிலத்திலேயே கூலிக்காரர்களாக்கப்படுவார்கள்.

தற்போது கொஞ்ச நஞ்ச நிலத்தைச் சொந்தமாக வைத்துப் பிழைத்து விவசாயிகள் என்ற அந்தஸ்த்திலிருந்து நிலமற்ற விவசாயிகள் என்ற அந்தஸ்த்திலிருந்து எதிர்காலத்தில் தள்ளப்படுவார்கள். பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூட்டுறவு கூட்டாட்சி எனும் உணர்விலிருந்து அவசரச்சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். தொற்று நோய் காலத்திலும் கூட உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தேசத்தின் முன்மாதிரியாகப் பஞ்சாப் மாநிலம் திகழ்ந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். விவசாயம் மாநில அரசுகளின் விவகாரம் என்றும் அரசியல் சட்ட அட்டவணைப்படி மாநிலப் பட்டியலின் 14வது பட்டியல் அம்சமாக வழிகாட்டப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளையில் வர்த்தகம் மற்றும் வணிகம் பற்றிய அம்சத்திலும் பொதுப்பட்டியலின் 33வது பதிவில் மத்திய மாநில அரசுகள் இரண்டும் இது விசயத்தில் சட்டமியற்றலாம் ஆனால் மாநில அரசுகளின் சட்டத்தினை பழிவாங்கும் வகையில் மத்திய அரசின் சட்டம் இருக்கக்கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பசுமைப்புரட்சியினை நல்ல முறையில் பயன்படுத்தியதால் பஞ்சாப் மாநிலம் பெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறது என்பதை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் விவசாய உற்பத்திக்கான சந்தை முறை ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை காலத்திலும் கூட மாநிலத்திற்கும் அதேபோல நாட்டிற்கும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நல்ல முறையில் சேவை செய்து வருகிறது. உண்மையின் இத்தகைய சாதனை பசுமைப் புரட்சியின் மூலமாகப் பெறப்பட்டதோடு ஒருபுறம் உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த உதவியதோடு, மறுபுறம் பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்தையும் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

Farmers in Punjab protest Electricity Amendment Bill, demand ...

பஞ்சாப் மாநிலத்தில் சந்தைகளும், உணவு கிடங்குகளும் மிகவும் நல்ல ஒருங்கிணைப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மசோதா மூலம் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் உள்ளுர் விவசாயிகளிடமிருந்து உற்பத்தி பொருட்களைக் கொள்முதல் செய்து வரும் உத்திரவாதத்தை திரும்பப்பெறு அச்சுறுத்தலை உருவாக்குகிறது என்று வாதிடுகிறார். ஜூன் 24ம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதான எதிர்கட்சியாக உள்ள சிரோர்மணி அகாலி தளம் உட்பட அனைத்து அரசியல் வட்டாரங்களிலிருந்தும் முதலமைச்சர் அமிர்ந்தர் சிங் பரலான ஆதரவினை பெற்றுள்ளார். சிரோர்மணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் பேசுகையில் எங்கள் கட்சியை பொறுத்தளவிலும் விவசாயிகளின் நலன்களுக்கு அப்பால் எந்த அமைச்சரவை, கூட்டணி அல்லது அரசாங்கம் என்பதெல்லாம் இல்லை என்றார்.

விவசாயிகளுக்கு விரோதமான இந்த மூன்று அவசரச்சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது நீதி கிடைக்க வேண்டும்.இந்த சட்டங்கள் விவசாயிகளின் விதியை கார்ப்பரேட்டுகளின் கருணை தீர்மாணிக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விடும் என்று மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுனில் ஜஹார் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் மேலும் பாஜகவின் உண்மையான உள்நோக்கம் என்பது ஏனெனில் இந்திய பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையாகக் கருதும் குறைந்தபட்ச ஆதரவு விலை ( ஆளுஞ) முறையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே. இந்த அவசரச் சட்டங்கள் வாயிலாக அரசாங்கம் இதிலிருந்து வெளியேறவும் பெருநிறுவனங்கள் உள்ளே நுழையவும் ஒரு சுமூகமான தளத்தை உருவாக்குவ தயாரிப்பு நடவடிக்கைகள் இவை என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பகவந்த் மான் பேசும்போது இந்த அவசரச்சட்டத்தால் விவசாயிகள் மட்டுமல்ல சந்தையை நம்பியுள்ள கமிசன் தரகர்கள். சிறு வியாபாரிகள் உள்ளிட்டோரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்.

ஆனால் பாஜக தலைவர்களோ புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானது என்றும் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான விவசாயிகளுக்கு உதவுவதற்காகச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் பேசியுள்ளனர். பாஜகவைத் தவிர மற்ற அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் உடனடியாக இந்த அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பிரதமரைக் கேட்டுக்கொள்வதாக ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சியின் பிரதிநிதிக்குழு மத்திய அரசிற்கு கடும் ஆட்சேபனையைத் தெரிவிக்கும் எனவும் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி பாரத் கிசான் யூனியன் தலைவர் அஜ்மீர்சி தெரிவிக்கையில் அவர்கள் சரியானதையே செய்துள்ளார்கள். இதைத் தவிர ஒரு மாநில அரசு என்ன செய்து விட முடியும்? மாநில அரசு நம்பிக்கையுடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் கார்ப்பரேட்மயமாக்கலில் விவசாயிகளும். விவசாயமும் அழிவதோடு ஏழை மக்களின் உணவும் பறிபோகும்.

ப்ரண்ட்லைன் ஏட்டில் ஷியா உஸ்சலாம் எழுதியது.

மொழியாக்கம். எஸ்.ஏ.மாணிக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *