“முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை..!

“முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை..!

கல்வி தொட்டுவிடும் தூரம்தான் எனச்

சொல்லிவிட்டு

தொலைதூரத்துக்கு நம்மைத்

துரத்தும் சதி

 

குலமொரு தொழிலெனும்

படுகொலை நிகழ்த்தி

பழங்காலத்துக்கே

அனுப்பி வைக்கும் வழி

 

தடாகத்துத் தண்ணீரெல்லாம்

நாமாக இருந்தாலும்

தாமரை இலை

ஒட்டவிடுவதில்லை நமை

 

தாமரை தரும் கல்வியும்

நம் தடாகத்தையெல்லாம்

கண்ணீராக்கிடுமா

அலைபாயும் எண்ணங்களில்

நடுங்குகிறது குலை

 

 

ஒரே நாடு   ஒரே  வரிசையில்

கல்விக்குமா இந்நிலை

முதலில்

மனிதரெல்லாம்  சமமெனும்

நிலையைச் சமை

Image

– கவுதமன்

“முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்”

கல்விக் கொள்கைக்கு எதிரான கவிஞர்களின் எதிர்ப்புக் கவிதைகளில் இது ஒரு கவிதை

நன்றி

தமுஎகச மற்றும்

ஆனந்தாயி

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *