அஸ்மிதா கெடியா மற்றும் அவரது கணவருக்காக நடத்தப்படுகின்ற ‘ஹவன்’ நிகழ்வை மேற்பார்வையிடும் கரிஷ்மா நர்வானி (நின்று கொண்டிருப்பவர்)



அஸ்மிதா கெடியா கால்களை குறுக்காக மடக்கி தரையில் அமர்ந்திருக்கிறார். வெளிர் மஞ்சள் நிறப் புடவையில் இருக்கின்ற சாமியாரிணி ஒருவர் வேத மந்திரங்களை ஓத, அவருக்கு முன்பாக இருக்கின்ற புனித குண்டத்தில் இருந்து நெருப்பு வெடித்துச் சிதறுகிறது. உலர்ந்த காற்று சற்றே சூடாக இருந்தது; சூரியன் வானத்தின் உச்சிக்கு உயர்ந்திருந்தது. பதட்டத்துடன் அமர்ந்திருந்த கெடியா தனது மடியில் கிடந்த ரோஜா நிறச் சேலை மடிப்புகளை நீவி விட்டுக் கொண்டே மந்திரங்கள் மீது கவனம் செலுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். தலையில் இருந்து நழுவி தன்னுடைய தோள்களில் விழுந்த முக்காட்டை அவர் சரிசெய்து கொண்டார்.

அது ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதி. தங்களுடைய குழந்தைக்கான கற்பனையான பாதுகாப்புக் கவசத்தை உருவாக்க உதவும் என்று அந்த ‘ஹவன்’ (யாகம்) நடத்துவதற்காக 29 வயதான அவரது கணவரும் 25 கி.மீ பயணம் செய்து வந்துள்ளார். மூன்று வருடங்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்திருக்கும் கெடியா இப்போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

குஜராத் ஜாம்நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள லகபாவால் என்ற சிறிய கிராமத்தில் அந்த யாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடம், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) சுகாதாரப் பிரிவான ஆரோக்கிய பாரதியுடன் தொடர்புள்ள கர்ப்ப விஞ்ஞான் அனுசந்தன் கேந்திராவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் வேத கர்ப்ப விஹார் (கருப்பையின் வேத சரணாலயம்) என்று பெயரிடப்பட்டது. ஐந்து சிறிய குடிசைகள், பக்கத்திலேயே கோசாலா (மாட்டு கொட்டகை) ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வேத கர்ப்ப விஹார், திருமணமான குறிப்பாக கருத்தரிக்க விரும்புகின்ற தம்பதிகள் சில நாட்கள் வந்து தங்கிச் செல்வதற்கான இடமாக முன்வைக்கப்படுகிறது.

C:\Users\Chandraguru\Pictures\Cross Breeding\Ved Garbha\ved-garbha-vihar-jamnagar-general-physician-doctors-pvkrluhfk4.jpg

உயரமான மரங்கள் மற்றும் துளசி, ஜம்புரா, நிர்குடி போன்ற மூலிகை தாவரங்களால் சூழப்பட்ட அந்தக் குடிசைகளிலிருந்து சில அடி தூரத்தில் உள்ள தளத்தில்தான் அத்போன்ற யாகங்கள் நடத்தப்படுகின்றன. சுற்றியுள்ள ‘தெய்வீக ஆவிகளை’ பெண்ணின் கருப்பைக்குள் (குழந்தைகளின் வடிவத்தில்) அமர வைப்பதற்காகவும், அதற்குப் பின்னர் கருவிற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்வதற்காகவும் தெய்வங்கள் அந்த யாகத்தின் மூலம் அழைக்கப்படுகின்றன.

இந்த யாகம் கர்ப்ப  விஞ்ஞான் அனுசந்தன் கேந்திராவில் புதிதாக நுழையும் கெடியாக்கள் போன்ற இளம் ஜோடிகள் சூப்பர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள உதவும் என்ற உத்தரவாதம் தரப்படுகிறது. ஜாம்நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 2004 முதல் இயங்கி வருகின்ற இந்த மையம், இந்தியா முழுக்க 10 இடங்களில் தன்னுடைய மையங்களைக் கொண்டுள்ளது (அவற்றில் காந்திதாம், சூரத் உட்பட ஏழு மையங்கள் குஜராத்திலேயே இருக்கின்றன). குட்டையாக, கறுப்பாக, சராசரி புத்திசாலித்தனம் கொண்டவர்களாக தம்பதியர் இருந்தாலும், தங்கள் திட்டத்தில் உள்ள விதிகளைக் கடைப்பிடித்தால் அவர்களுடைய குழந்தைகள் உயரமாகவும், அழகாகவும், ‘மேதை’களாகவும் இருப்பார்கள் என்று கேந்திராவின் இயக்குனர் கரிஷ்மா மோகன்தாஸ் நர்வானி உத்தரவாதம் அளிக்கிறார்.

C:\Users\Chandraguru\Pictures\Cross Breeding\Ved Garbha\dr_karishma_navrani.jpg

கரிஷ்மா நர்வானி

பண்டைய ஆயுர்வேத வேதநூலான சரக் சம்ஹிதாவிலிருந்து மேற்கோள் காட்டப்படுகின்ற கடுமையான திட்டமே இந்த மையத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த திட்டத்தின் கீழ் இங்கே வருகின்ற தம்பதிகள் ஒழுங்குபடுத்தப்பட்ட உணவுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும், அங்கே தரப்படுகின்ற மருந்துக் கலவையைக் குடிக்க வேண்டும். தங்களுடைய வாழ்க்கை முறைக்கு உள்ளார்ந்ததாக யோகாவை ஆக்கிக் கொள்ள வேண்டும். மிகச்சரியான சந்ததியைப் பெறுவதற்கான இந்த திட்டத்தில், ஒன்பது மாதங்களில் மூன்று கட்ட யாகங்களை உள்ளடக்கிய சன்ஸ்கார் விதியும் அடங்கும்.

கெடியாக்களை அங்கே நான் சந்தித்தபோது, ​​அவர்கள் கர்ப்பத்தின் ஒன்றரை முதல் இரண்டு மாதங்களுக்கு இடையில் செய்யப்படுகின்ற இரண்டாம் கட்ட சடங்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். பிறக்கப் போகின்ற குழந்தையிடம் ‘நற்குணங்களை’ வளர்த்தெடுப்பதை உறுதி செய்வதற்காகவே அந்த இரண்டு மணி நேர சடங்கு நடத்தப்படுகிறது.

கர்ப்ப தான் சம்ஸ்கார் என்று அழைக்கப்படுகின்ற முதல் கட்டச் சடங்கு கருத்தரிப்பதற்கு முன்பாகச் செய்யப்படுகிறது. பசு கொட்டகையின் அருகே நின்று கொண்டிருக்கும் நர்வானி அந்தச் சடங்கு தாயின் கருப்பையில் நுழைய தெய்வீக ஆவிக்கு அழைப்பு விடுப்பதாக இருக்கிறது என்று நம்மிடம் விளக்குகிறார். கோசாலாவை அருகிலேயே வைத்திருப்பது மிகவும் முக்கியம் – பசுக்கள் இருக்கும் இடத்தில், இயல்பாகவே தெய்வீக ஆவிகள் இருக்கும் என்கிறார். கூர்மையான தாடை, இறுக்கமாக பின்னப்பட்ட கூந்தலுடன் இருந்த நர்வானி, 800க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு மிகச் சிறந்த சந்ததிகளை உருவாக்க உதவிய அனுபவம் தனக்கு இருப்பதாகத் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

1982 ஆகஸ்ட் மாதத்தில் ஓஹையோவில் வசிக்கின்ற ஜோசப் சுசெடிக், அவரது மனைவி பற்றிய ஒரு கட்டுரையை பீப்பிள் பத்திரிகை வெளியிட்டது. அவர் ‘சுசெடிக் முறை’ என்ற முறையை உருவாக்கியுள்ளார். அந்த முறையைக் கடைப்பிடித்து, நேரடியாக கருப்பையுடன் பேசுவதன் மூலம் கருப்பையில் இருக்கின்ற குழந்தைக்கு எழுத்துக்கள், எண்கள், சமூக ஆய்வுகளை தாயால் கற்பிக்க முடியும். சுசெடிக்குகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த முறையால், அவருடைய நான்கு மகள்களுக்கு 150-க்கும் மேற்பட்ட ஐக்யூ இருந்தது என்று  அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கேந்திராவும் அதுபோன்றதொரு தீவிரமான கருப்பை பயிற்சி திட்டத்தையே நம்பியுள்ளது. ஆயுர்வேதத்தின் மூலம் மரபணுக்களை ‘மேம்படுத்த’ முடியும் என்பது மட்டுமல்லாமல், பரம்பரைக் குறைபாடுகளையும் ‘சரிசெய்ய’ முடியும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் கேந்திரா கூறுவது குறிப்பிடத்தக்கது.

Bishaka Rathore, who joined the programme on the advice of her mother.

தனது தாயின் ஆலோசனையின் பேரில் அந்த திட்டத்தில் சேர்ந்த பிஷாகா ரத்தோர்

எளிய கனவு

‘உலகிலேயே நம்பர் 1 என்ற வகையில் மிகச் சிறந்ததொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். எல்லா பெற்றோர்களுமே இதுபோன்ற கனவையே கொண்டிருக்கிறார்கள்’ என்று கெடியா என்னிடம் கூறினார். யாகம் இப்போது முடிந்து விட்டது. கெடியாவின் குரலில் ஓர் உறுதிப்பாடு உள்ளது. அவர் பிறக்கப் போகின்ற குழந்தையிடம் கவனத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்துவதைப் போலவே அவரது குரல் இருந்தது. அவர் ‘என் குழந்தை ஆரோக்கியமாகவும், திறமையாகவும், பண்பட்டும் இருக்க வேண்டும். என்னுடைய குழந்தை அனைத்துத் துறைகளிலும் சிறந்து ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும்’ என்றார்.

ஆயுர்வேதத்தை மீண்டும் உயிர்த்தெழுப்புவதற்கான கேந்திராவின் நோக்கங்களும், அதனால் விளையும் நன்மைகளும் இந்தியாவின் பண்டைய சுகாதார முறைகளை மீண்டும் மீட்டெடுக்க விரும்புவதற்கான விவரிப்புகளுடன் பொருந்திப் போகின்றவையாகவே இருந்தாலும், தம்பதியர் ‘சூப்பர்’, ‘மேதை’ குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்களால் தரப்படுகின்ற உந்துதலுடனான விவரிப்பு கேள்விகளுக்குரியதாகவே இருக்கின்றது.

நிலைமையைப் பொறுத்து தம்பதிகளுக்கு ரூ.20,000 முதல் 70,000 வரை கட்டணம் அங்கே வசூலிக்கப்படுகிறது. பணத்தைச் செலுத்த முடியாதவர்கள், ஆர்.எஸ்.எஸ் நடத்தி வருகின்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான (நர்வானி தலைமையிலான) பிரபாபென் ஆரோக்கிய கேந்திராவிற்குச் செல்லுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். அந்த அமைப்பு வறியவர்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது.

ஆல்-ரவுண்டர் குழந்தைக்கு வாக்குறுதியளிக்கின்ற இந்தத் திட்டத்தில் சேர்வது, பலவீனமானவர்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அது மிகவும் கடினமான மலையேற்றத்தைப் போன்றே இருக்கிறது. கருத்தரிப்பதற்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே அந்த திட்டம் தொடங்கி விடுகிறது.

தங்களுடைய விந்து, கருமுட்டையின் தரத்தை மேம்படுத்துவதற்காக, பஞ்சகர்மா சிகிச்சை (அல்லது உட்புற உடல் சுத்திகரிப்பு), கடுமையான குடல் நச்சு நீக்க உணவு சிகிச்சையை கெடியாக்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மூன்று மாதங்களின் முடிவில், பிறக்கப் போகின்ற குழந்தையின் ஜாதகத்தை மதிப்பிட்டு, ஐந்து நாட்கள் கொண்ட நல்ல நேரத்தைக் குறித்துத் தர ஜோதிடர் ஒருவர் அங்கே வருகிறார். அந்த நேரத்தில்தான் தம்பதியினர் வேத கர்ப்ப விஹாரில் உள்ள குடிசை ஒன்றில் கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும். ‘கிரக அசைவுகள், பெண்ணின் கருமுட்டை வளர்ச்சியின் சுழற்சியைப் பொறுத்து, தம்பதியினருக்கு எந்த நாள், நேரம் முகூர்த்தத்திற்குச் சிறந்ததாக இருக்கும், சுற்றியுள்ள அண்ட ஆற்றல் எப்போது மிக அதிக அளவிலே இருக்கும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்படும்’ என்று நர்வானி விளக்கினார்.

கிரகங்கள், மதம், அறிவியல் அனைத்தும் இணைகின்ற இடத்தில் 

கர்ப்பம் தரிக்கின்ற அந்தப் பெண் என்ன சாப்பிட வேண்டும், அணிய வேண்டும், என்ன படிக்கலாம், பார்க்கலாம் என்று அனைத்துக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. அவர் அணிகின்ற  ஆடைகளின் நிறத்திலிருந்து,  அணிந்து கொள்ளும் நகைகள் வரை அனைத்தும் கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்ததாகவே இருக்கின்றன.

ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் மனிதவளத் துறையின் தலைவரான மைதிலி சாரதி (31 வயது), 2016இல் மையத்தின் இதுபோன்றதொரு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் போது நர்வானியைச் சந்தித்தார். அந்த நேரத்தில் சாரதி 25 நாட்கள் கர்ப்பமாக இருந்த போதிலும், ஆயுர்வேதத்தால் கிடைக்கக்கூடிய பயன்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததால், நர்வானி சொல்வதை அப்படியே பிசகாமல் பின்பற்ற முடிவு செய்தார்.

Mythili Sarathy with her daughter. மகளுடன் மைதிலி சாரதி

‘ஒவ்வொரு மாதமும், உங்கள் கரு மீது ஒரு குறிப்பிட்ட கிரகம் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று சாரதி கூறினார். நாங்கள் அவருடைய அறையில் அமர்ந்திருந்தோம். ஹிந்து தெய்வங்களின் படங்கள் அங்கேயிருந்த சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன. எல்லா வடிவங்கள், அளவுகளில் பொம்மைகள் – மிகப்பெரிய கரடி, ஊதா நிற நீர்யானை -அடுக்கி வைக்கப்பட்டிருந்த பின்னணியில், அந்த அறையில் பக்தி மணம் கமழ கர்நாடக இசை தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்தது. சாரதியின் அந்த இரண்டு வயது மகள் யசோதரா மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். தூங்கி எழுந்ததும், யசோதரா அமைதியாக, எதையும் கேட்காதவளாக இருந்தாள் எனப்து வியக்கத்தக்கதாக இருந்தது.  தன்னுடைய வீட்டில் இருந்த அந்நியர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள அவள் அதிக நேரம் எடுத்துக் கொண்டாள்.

யசோதராவை தனது மடியில் வைத்துக் கொண்ட சாரதி  ‘ஒவ்வொரு கிரகத்தின் கதிர்வீச்சுகளும் வேறுபடுகின்றன. அந்தக் கதிர்வீச்சுகளைப் குழந்தைகள் பெற்றுக் கொண்டு, கிரகத்தின் தாக்கத்திலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்ற வகையிலே, நீங்கள் தேவையான உலோகத்தை அணிந்திருக்க வேண்டும். ஆகவே, ஒரு மாதம் நான் முத்து அணிந்திருந்தேன். அடுத்த மாதம் வெள்ளி என்று தொடர்ந்து பல உலோகங்களை அணிந்தேன்’  என்றார். குழந்தையிடம் இருக்க வேண்டும் என்று விரும்பிய குணங்களுக்காக, தன்னுடைய கர்ப்ப காலத்தில் இந்திய கிளாசிக்கல் இசை, ஓவியம், கிளாசிக்கல் நடனம் ஆகியவற்றைக் கேட்பதற்கு, பார்ப்பதற்கு நேரம் செலவிடுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். ‘இன்று இவை அனைத்திலுமே என் மகளுக்கு ஆர்வம் உள்ளது’ என்று சாரதி கூறினார்.

இந்த திட்டத்தின் மையத்தில் மதம் அமர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தையை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு முன்பே பதிவுசெய்யப்பட்ட சமஸ்கிருத சுலோகங்கள், சுக்தங்கள், மந்திரங்கள், ராமாயண வசனங்கள், ஓம்காரா மந்திரத்துடன் உள்ள இசை சி.டி.க்கள் வழங்கப்படுகின்றன. மகாபாரதத்தையும், பகவத்கீதையையும் படிப்பதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

செயல்முறைக் கையேடாக, ‘கருப்பைக்குள் ஒன்பது மாத தெய்வீகப் பயணம்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று இந்த திட்டத்தில் சேரும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. பருவங்களுக்கேற்றவாறும், அன்றைய நேரத்திற்கேற்றவாறும் குறிப்பிட்ட பக்தி இசையை கேட்க வேண்டும் என்று அந்தக் கையேடு அறிவுறுத்துகிறது. போதனைகளைப் போன்று இருக்கின்ற அந்த பாடத்திட்டம் பெண்களுக்கு தார்மீக, மதரீதியான ஆலோசனையை அளிப்பதாகவே தெரிகிறது.

C:\Users\Chandraguru\Pictures\Cross Breeding\Ved Garbha\book4.jpg

கருப்பைக்குள் ஒன்பது மாத தெய்வீகப் பயணம் 

இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் வரவேற்கப்படுவதாக நர்வானி தெளிவுபடுத்துகிறார். தங்களுடைய இணையதளத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் தங்களை அணுகலாம், அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குறிப்பிட்ட செயல்முறைகள் எதுவும் தங்களிடம் இல்லை என்கிறார். இருப்பினும், சடங்குகள் மிகவும் உள்ளார்ந்து, எவ்விதத் தடையுமின்றி ஹிந்து மதம் சார்ந்தே இருப்பதால், அதை நடத்தி வருகின்றவர்கள் கூறுவதைப் போல அந்த திட்டம் மதரீதியாக பாகுபாடற்று இருக்கவில்லை. ‘நான் இவையனைத்தையும் ஒரு முஸ்லீம் தம்பதியினரைச் செய்ய வைத்தேன். சிறந்த சந்ததியைப் பெற விரும்பிய அவர்கள் அதைச் செய்தார்கள். இது விதி என்பதால், நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும், இதைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம்.  அவற்றைச் செய்ய மறுத்தவர்களும் இருந்தார்கள். அதனால் என்ன?’ என்றார்.

சரிசெய்ய முடியாததைச் சரிசெய்வது?

ஜாம்நகர் குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் (பிஏஎம்எஸ்) இளங்கலை பட்டம் பெற்ற (1999) நர்வானி, பஞ்சகர்மா நிபுணரும், அந்த நிறுவனத்தின் பேராசிரியருமான ஹிடேஷ் ஜானியிடம் பயின்றவர். 2003-04 காலகட்டத்தில், பிரபாபென் ஆரோக்யா கேந்திராவில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்த போது, அஹிர் சமூகத்தைச் சார்ந்த தம்பதியினர் வழக்கத்திற்கு மாறான கோரிக்கையுடன் நர்வானி, ஜானி இருவரையும் சந்தித்தனர்.

தலசீமியா மைனர்களாக இருந்த அவர்கள் தலசீமியா மேஜராகப் பிறந்த தங்களுடைய முதல் குழந்தையை இழந்திருந்தனர். ‘அந்த தம்பதி படிக்காதவர்களாக, சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ளவர்களாக இருந்தனர். தங்கள் அடுத்த குழந்தையையும் இழந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சினர். அதற்காக எங்களுடைய உதவியை அவர்கள் நாடினர்’ என்று ஜானி விளக்கினார்.

ஜாம் நகரில் வேத கர்பா என்று அழைக்கப்படுகின்ற அவரது மருத்துவமனையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அந்த மருத்துவமனை கர்ப்ப விஞ்ஞான அனுசந்தன் கேந்திராவின் கார்ப்பரேட் கிளையாகச் செயல்பட்டு வருகிறது.

Hitesh Jani.

ஹிடேஷ் ஜானி

‘டி.என்.ஏ மட்டத்தில் ஏற்படுகின்ற மரபணுக் கோளாறுகளை சரி செய்ய முடியும் என்று நமது புனித ஹிந்து வேதங்கள் கூறுகின்றன’ என்று கூறிய ஜானி ‘பெற்றோரின் முக்கிய மரபணுக்களைச் சரிசெய்ய முடியாது என்றாலும், அவர்களின் எதிர்கால சந்ததியினரின் மரபணுக்களை – உருவாவதற்கு முன்பாக, வெளிப்படுவதற்கு முன்பாக – அதாவது கருத்தரிப்பதற்கு முன்பே தற்காலிகமாக டி.என்.ஏவை நம்மால் சரிசெய்ய முடியும். எனவே குழந்தைக்காக உருவாக்கப்படும் புதிய மரபணுக்களில் கோளாறு இருக்காது. இதை நாங்கள் மிகவும் உறுதியாகச் சொல்கிறோம்’ என்றார்.

சாஸ்திரங்களிலிருந்து கவனமாகக் குறிப்பிட்டுக் கூறிய பிறகு, அந்த தம்பதியினருக்கு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த திட்டம் வழங்கப்பட்டது. ‘தம்பதியினர் கருத்தரித்த அடுத்த குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக இருந்தது. நாங்கள் அடுத்தடுத்து முயற்சித்துப் பார்த்து வெற்றி பெற்ற எங்களுடைய முதல் சோதனையாக அது இருந்தது. அந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த உந்துததலைக் கொடுத்தது’ என்று ஜானி கூறினார். அப்போதிருந்து ஜானி, நர்வானி இருவரும் பரம்பரைச் சிக்கல்களைக் கொண்ட தம்பதிகளிடம் அவர்களால் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்ற வாக்குறுதியை அளித்து வருகின்றனர்.

C:\Users\Chandraguru\Pictures\Cross Breeding\Ved Garbha\ved-garbha-jamnagar-ho-jamnagar-general-physician-doctors-g1bdunqhe8.jpg

வேத கர்பா

ஆயினும், கருத்தரிப்பதற்காக எண்ணற்ற தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கின்ற அடங்கிய மரபணுவை சிறிது காலத்திற்குள் இவ்வாறு சரிசெய்து விட முடியுமா? உண்மையில் அது சாத்தியமே இல்லாதது என்று டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரும், ஆலோசகருமான, 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க மருத்துவர் ரஞ்சனா சர்மா கூறுகிறார். ‘நீங்கள் தலசீமியா மைனர், உங்கள் பங்குதாரரும் தலசீமியா மைனர் என்றால், ஒவ்வொரு கருத்தரிப்பிலும்  உங்கள் குழந்தை தலசீமியா மேஜராக இருப்பதற்கு 25% வாய்ப்பு மட்டுமே உள்ளது. மேலும் நீங்கள் தலசீமியா மைனர் குழந்தையைப் பெற 50% வாய்ப்பும், அது முற்றிலும் சாதாரண குழந்தையாக இருப்பதற்கு 25% வாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறுகிறார். ரஞ்சனா சர்மாவைப் பொறுத்தவரை, ஜானி கூறுபவை எந்தவித ஆதாரமும் அற்றவை என்பதால், அந்த குறையைக் களைந்ததற்கான பெருமையை அந்த கேந்திரம் தன்வசம் எடுத்துக் கொள்ள முடியாது.

Medha Jhawar, who subscribed to the programme.

திட்டத்தில் சேர்ந்த மேதா ஜாவர்

உரிய விலை கொடுத்தால் சிறந்த தயாரிப்பு…?

யாகம் நடக்கின்ற நாளில் எங்கள் மீது பிற்பகல் சூரிய ஒளி வீழ்ந்த போது, அங்கிருந்த குடிசைகளைப் பார்க்க நர்வானி என்னை அழைத்தார். வேத கர்ப்ப விஹார் சுற்றுச்சூழல்-கிராமம் என்றே குறிப்பிடப்பட்டாலும் அந்தக் குடிசைகளில் ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கிருந்த படுக்கையில் உட்கார்ந்த நர்வானி, ஏர் கண்டிஷனரை இயக்கி, தனது பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியை எனக்குக் காட்டுவதற்காக தன்னுடைய மடிக்கணினியைத் திறந்தார். ஆர்.எஸ்.எஸ்சின் கல்விப் பிரிவான வித்யா பாரதிக்காக (குஜராத், மத்தியப் பிரதேசம் முழுவதும் கிளைகளைக் கொண்ட) எண்ணற்ற முறை பள்ளி சுவர்களில் அவர் காட்டியிருந்த அதே விளக்கக்காட்சியைத்தான் என்னிடம் காட்டினார்.

C:\Users\Chandraguru\Pictures\Cross Breeding\Ved Garbha\ved-garbha-vihar-jamnagar-general-physician-doctors-g460p01p9q.jpg

வேத கர்ப்ப விஹார் குடிசை

தன்னுடைய செயல்களுக்கான முன்மாதிரிச் சான்றுகளாக​​ பெரும்பாலும் மகாபாரதத்திலிருந்து குறிப்புகளையே தன்னுடைய பேச்சினூடே நர்வானி குறிப்பிட்டார். ‘அபிமன்யு தனது தாயின் வயிற்றில் இருந்தபோதே சக்ரவியூகத்தை எவ்வாறு உடைப்பது என்பது குறித்த அறிவைக் கற்றுக்கொண்டார். நீங்களும் உங்களுடைய குழந்தை கருப்பையில் இருக்கும்போதே உங்கள் குழந்தைக்கு அறிவை அதுபோன்று கொடுக்க முடியும்’ என்று அவர் கூறினார்.

விளையாட்டில் சிறந்து விளங்கக்கூடிய குழந்தையைப் பெற ஆர்த்தி சாங்கனி என்பவர் விரும்பியதாக, தன்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் குறித்து அவர் விளக்கினார். 2009இல் சாங்கனி முதன்முதலாக நர்வானியைச் சந்தித்தார். ‘அந்த நேரத்தில் டாக்டர் கரிஷ்மா நர்வானி என்னிடம், உங்களுக்கு என்ன மாதிரியான குழந்தை வேண்டும்? என்று கேட்ட போது, அவர் ஏன் இவ்வாறான கேள்வியைக் கேட்டார் என்று நான் ஆச்சரியப்பட்டேன்’ என்று சாங்கனி நினைவு கூர்ந்தார். தான் உண்மையில் அதிர்ச்சியடைந்ததாக அவர் ஒப்புக் கொண்ட சாங்கனி ‘தான் கனவு கண்ட குழந்தையை ஒருவரால் சரியாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அதற்கு முன் நான் கேள்விப்பட்டதே இல்லை’ என்றார். விளையாட்டு உலகில் மூழ்குமாறு அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.  பத்திரிகைகளில் பல்வேறு விளையாட்டுத் துறைகளைப் பின்பற்றுவது முதல் தடகள விளையாட்டுகளைப் பார்ப்பது வரை சாங்கனி அனைத்தையும் செய்து வந்தார். ‘கால்பந்து, கிரிக்கெட், கபடி என்று எல்லா விளையாட்டுகளையும் நான் பார்த்தேன்’ என்று கூறிய அவர் குழந்தைகள் கோ-கோ விளையாடுவதைப் பார்ப்பதற்காக தன்னுடைய வீட்டை விட்டு வெளியே மாலை நேரங்களில் சென்றதாகவும் தெரிவித்தார்.

சாங்கனியின் ஒன்பது வயது மகள் ஹியா இப்போது ஸ்கேட்டிங் சாம்பியனாக இருப்பதாகவும், 25க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை அவள் வென்றுள்ளதாகவும் நர்வானி தெரிவித்தார். உயரம் தாண்டுதலில் தேசிய தங்கப் பதக்கம் வென்றவர் சாங்கனி என்பதாலேயே அவருடைய குழந்தை அவரிடமிருக்கின்ற தடகளத்திற்கான பண்புகளை மரபுரிமையாகப் பெற்றிருக்க முடியுமா என்ற கேள்விக்கு,  மிகக் கவனமாக ‘அது சாத்தியம்தான். ஆனாலும் என்னிடம் உள்ள அளவிற்கு அல்ல’ என்று சாங்கனி முணுமுணுத்தார்.

C:\Users\Chandraguru\Pictures\Cross Breeding\Ved Garbha\mcms.jpg

திவ்யா தேஸ்வால்

சமீப காலங்களில் மாற்று பிரசவ நடைமுறைகளில் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. பிரசத்திற்கான குளங்கள் முதல் தொழில்முறை பிரசவ பணியாளர்களை பணியமர்த்துவது வரை, தங்களுக்கான சிறந்த அனுபவங்களைப் பெறுவதற்காக வெவ்வேறு சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளை முயற்சிக்க மக்கள் தயாராக உள்ளனர். திவ்யா தேஸ்வால் அதுபோன்று சான்றளிக்கப்பட்ட பிரசவ பயிற்சியாளர். கிட்டத்தட்ட 20 வருட அனுபவம் கொண்டவர். பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவ கால உளவியல் (APPPAH, அமெரிக்கா) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற தொழில்முறை நிபுணர் என்ற முறையில், கேந்திராவால் விளம்பரப்படுத்தப்படுகின்ற  கர்ப்ப விஞ்ஞான் சன்ஸ்கார் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

C:\Users\Chandraguru\Pictures\Cross Breeding\Ved Garbha\C26tZ0oVEAEvUmB.jpg

‘நெறிமுறைகளைப் பொறுத்தவரை, நம்முடைய பண்டைய நூல்களில் இருக்கின்ற ஆரோக்கியத்திற்கான அனைத்து அடிப்படைகளும் பெரும்பாலும் துல்லியமானவை என்பதை (நவீன) அறிவியல் இப்போது நிரூபித்து வருகிறது’ என்று என்னுடைய வீடியோ அழைப்பில் தேஸ்வால் கூறினார். ‘ஆம், கருவிலேயே குழந்தைகளிடம் உள்ளுணர்வு நிலை இருக்கிறது, நாம் சாப்பிடுவது குழந்தைகளைப் பாதிக்கிறது, தாயின் உணர்வுகள் குழந்தைகளைப் பாதிக்கின்றன என்றே உலகெங்கிலும் உள்ள ஆய்வுகள் நமக்கு காட்டுகின்றன’ என்று அவர் பட்டியலிட்டார். ‘அவர்கள் சொல்வது அனைத்தும் புதிய கருத்துக்கள் அல்ல. ஆயினும், நமது பண்டைய நூல்களில் உள்ளவை ஒரு குறிப்பிட்ட குழுவினரின் மரபுரிமையாக இருக்கவில்லை. அந்தக் குழுவால் அதற்கான காப்புரிமையைப் பெறவும் முடியாது. அவை எல்லோருக்குமானவையாகவே இருக்கின்றன’ என்றார்.

இருந்த போதிலும், கர்ப்ப விஞ்ஞான் சன்ஸ்கார் மூலமாகப் பெறப்படுகின்ற பலன்கள் விளம்பரப்படுத்தப்படுகின்ற விதத்தை அவர் சிக்கலானது என்றே  கருதுகிறார். ‘அவர்கள் அதைச் சந்தைப்படுத்தும் விதம் கவலையளிப்பதாக இருக்கிறது’ கூறிய அவர், ‘தங்கள் குழந்தைக்கான நல்ல ஆரோக்கியத்தை நாடுவது ஒவ்வொரு பெற்றோரின் குறிக்கோளாகவே இருக்கும். அதற்காக அவர்கள் எதையும் செய்யத்  தயாராக இருப்பார்கள். ஆனால் குழந்தையின் ஐ.க்யூவை அதிகரிப்பது என்ற அடிப்படையில் இதை விற்பதில் ஏதோ தீவிரமான தவறு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இங்கே, நற்பண்புகள், திறன்களைத் தவிர குழந்தையிடம் வேறு எதையும் எதிர்பாராத மக்களிடம் உள்ள அச்சம் அல்லது விருப்பங்களை அவர்கள் மோசமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்’ என்ற வாதத்தை அவர் முன்வைத்தார்.

தேசிய அளவில் கர்ப்ப விஞ்ஞான் திட்டம் இன்னும் வேகத்தை எட்டவில்லை  என்றாலும், அது நடைமுறையில் உள்ளது; அந்த திட்டத்தில் தம்பதிகள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்பது எதையோ நமக்குச் சொல்கிறது. ‘(கேந்திரா) ஏன் இதை இவ்வாறு விற்கிறது? ஒருவேளை அதற்கான கோரிக்கை இருப்பதால்கூட இருக்கலாம். என்னைக் கேட்டால் இது சமூகத்தின் தோல்வி என்றே நான் சொல்வேன்’ என்று தேஸ்வால் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கிறார்.

C:\Users\Chandraguru\Pictures\Cross Breeding\Ved Garbha\Dw2tgsRXQAEDF6V.jpg

நமது சமுதாயத்தை நாம் நன்கு ஆராய வேண்டும். ஏன் நாம் சில சமயங்களில் நம் குழந்தைகளை வெறுமனே நம்முடைய தயாரிப்புகளாக மட்டுமே பார்க்கிறோம் என்பதை ஆராய வேண்டும். நம் சொந்த வாழ்க்கையின் மீது மட்டுமல்லாமல், பிறக்கவிருக்கின்ற குழந்தைகளின் ஆன்மா, துணை, வலிமை மீதான கட்டுப்பாட்டிற்கான தீராத தேவையை எது நம்மிடம் தூண்டியிருக்கிறது?

https://www.livemint.com/mint-lounge/features/garbhvigyan-sanskar-the-womb-whisperers-1556869597384.html

நன்றி: தி மிண்ட் இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *