அறிமுகம்
தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot, 26 செப்டம்பர் 1888 – 4 சனவரி 1965) என்பவர் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஒரு புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் நாடக ஆசிரியர் இலக்கிய விமர்சகர் மற்றும் அறிவுஜீவி அவார். .அமெரிக்காவில் இவர் பிறந்திருந்தாலும் இவரது குடும்பம் (மூன்று தலைமுறைகளுக்கு முன்பே மதத் தொண்டு புரிவதற்காக பிரிட்டனிலிருந்து அமெரிக்காவிற்கு போய் குடியேறிய குடும்பம் தான்.
இவரது தந்தை ஹென்றி வேர் எலியட் ஒரு சிறந்த வெற்றிகரமான வணிகர் ..தாய் சார்லோட் சேம்ப் ஸ்டியன்ஸ் கலை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். குறிப்பாக ஆங்கிலக்கவிதைளை அற்புதமாக எழுதக்கூடிய கவிஞர். இளம் எலியட்டிற்கு இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது தன் தாயிடமிருந்து தான் என்பது சந்தேகமில்லை. ஆனால் பிற்காலத்தில் அவர் கவிதைகளை செதுக்கிய சிற்பி என்று புகழ்பெற்ற பிரெஞ் குறியீட்டியல் கவிஞர் திரு எஸ்ரா பவுண்டைத்தான் சொல்ல வேண்டும். எலியட்டின் கவிதை குறித்த பார்வையையும் வடிவத்தையும் புதிய புதிய சொல்லாடல்களையும் அவருக்கு அறிமுகப்படுத்தியவர்இவர்தான். கவிஞரின் உலகப்புகழ்பெற்ற நூலான பாழ் நிலம் The Waste Land (1922) என்ற நூலை திருத்தி வடிவமைத்து தந்தவரும் இவர்தான்
பெற்றோர்களுக்கும் எலியட்டிற்கும் இடையில் நாற்பத்து நான்கு வருடங்களுக்கு மேல் வயது வித்தியாசம் இருந்தது. .. கவிஞர் தன் வீட்டில் ஆறாவது கடைசிக்குழந்தை . தன் தாய் வழி தாத்தாவின் நினைவாக தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் என்று இவருக்குப் பெயரிடப்பட்டது. சிறு வயதிலிருந்தே கவிஞர் சீரான உடல்நலத்துடன் இல்லை .அவரது உடலில் ஹெர்னியா ( inguinal hernia, ) கோளாறு இருந்தது. அதன் காரணமாகவே அவர் விளையாட்டுக்களுக்கான வாய்ப்புகளில் மறுதலிக்கப்பட்டார். அவரது பள்ளிக்கால நண்பர்கள் அவரை நினைவுகூறும் போது அவரது சீரற்ற உடல் நலமே அவரை வெளிஉலகத்திலிருந்து பிரித்து புத்தக உலகத்திற்குள் புகுத்தியது என்று அவரை நினைவு கூர்கிறார்கள்.
கவிஞர் பதினான்கு வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்து விட்டார். ஆங்கிலக் கவிஞர் எட்வர்ட் பிட் ஜெரால்ட் மொழிபெயர்த்த ஞானக்கவி உமர்கய்யாமின் கவிதைகள் அவரை அந்த இளம் வயதில் மிகவும் பாதித்தவை என்று பின்னாட்களில் அவரே எழுதியிருக்கிறார்.
எலியட் 1914 ஆம் ஆண்டு தனது 25வது வயதில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். ஹார்வட் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்றா.பிறகு எம் ஏஆங்கில இலக்கியம் பயின்றார்.
கல்லூரிக்காலத்தில் கவிஞருக்கு இலக்கியத்தில் குறியீட்டியல் ( Arthur Symons‘s The Symbolist Movement in Literature.) என்ற அமைப்போடு தொடர்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக புகழ் பெற்ற குறியீட்டியல் இலக்கிய ஆளுமைகளான ஜூல்ஸ் லாபார்க் ( Jules Laforgue,) ஆர்தர் ரிம்பாட் ( Arthur Rimbaud, ) பால் வெர்லெய்ன் ( Paul Verlaine ) ஆகியோருடன் ஏற்பட்ட நட்பு எலியட்டை இலக்கியத்தின் அதிநுண்ணிய அடுத்த தளத்திற்கு நகர்த்திச் சென்றது.
கவிஞர் சமஸ்கிருதத்தில் இந்தியத் தத்துவம் உட்பட பிரெஞ்ச் செவ்வியல் கிரேக்கம் ஜெர்மன் ஆகியவைகளை முறையாக கற்றுத்தேர்ந்தவர் அவரது புகழ் பெற்ற கவிதை நூலான பாழ்நிலத்தில் ( The Waste Land ) இதன் அத்தனை தாக்கங்களையும் நாம் காணலாம். கவிஞருக்கு ஆக்ஸபோர்ட் மெர்ட்டன் கல்லூரியில் படிப்புதவித் தொகையுடன் இடம் கிடைத்தது. ஏனோ அந்த இடம் அவருக்கு பிடிக்கவில்லை. பல்கலைக்கழகத்தை பற்றி அவர் சொல்லும்போது ‘’ ஆக்ஸ்போர்ட் அழகான இடம் தான் ஆனால் நான் அங்கே சாகவிரும்பவில்லை.
பிறகு லண்டனுக்கு வருகிறார். அங்கேதான் அவர் முதன் முதலாக மிகப்பெரிய இலக்கிய ஆளுமையான எஸ்ரா பவுண்டை சந்திக்கிறார். அதுவே அவர் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்துவிட்டது. அவரது இலக்கியத்தின் மீதான பார்வைகளுக்கும் திருப்புமுனையாக அமைந்தது. எஸ்ரா பவுண்ட் இவருக்குள் இருக்கும் இலக்கிய மேதையை முதல் சந்திப்பிலேயே முழுமையாக கண்டு கொண்டார். அதன் பிறகு நடந்த தொடர்ச்சியான சந்திப்புகள் அவரை அமெரிக்காவிற்குத் திரும்பி போகும் எண்ணத்தையே கைவிடச் செய்துவிட்டன. அதுமட்டுமல்லாமல் அவரை ஆங்கிலேயக் குடியுரிமை பெறும் அளவிற்கு இழுத்துகொண்டு சென்றுவிட்டது அது. அதற்கு இன்னொரு காரணம் எலியட்டின் திருமண வாழ்க்கைதான்
அது குறித்து கவிஞர் இப்படி எழுதுகிறார் ‘’ நான் முற்றிலும் பெண்களின் உலகத்தை சார்ந்தவன் அவர்களின் உலகத்தின்பாதிப்பு எனக்குள் அதிகம் உள்ளது. ‘’
விவியன் ஹெய் உட் என்ற பெண்ணை தாயிர் என்ற தோழி அறிமுகப்படுத்திய சில மாதங்களிலேயே விவியன் ஹெய் உட்டும் எலியட்டும் பதிவுத்திருமணம் செய்து கொண்டார்கள்.
முழுமையான புரிதலுக்குகூட அங்கே நேரமில்லை.
அவர் வாழ்வின் சாபமும் வரமும் அது தான். இன்று நாம் எலியட்டின் கவிதைகளில் காணும் சிறிய சிறிய புறக்காட்சி வடிவங்கள் அவநம்பிக்கையின் உச்சம் மற்றும் அர்த்தமின்மையின் வெளிப்பாடுகள்ஆண் பெண் நேசத்தை முற்றிலும் அவலமென்னும் வேறொரு கோணத்தில் பார்க்கும் பார்வை யாவும் யாவும் அவர் தன் முதல் மனைவியால் பெற்றதே. எனலாம்.
புதுமணத்தம்பதிகள் பெட்ரண்ட் ரஸ்ஸல் தந்த இடம் ஒன்றுக்கு குடிபோனார்கள். சின்னஞ்சிறிய அறை. அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடத்தில் சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடியே தான் எலியட் உறங்கினார்.
பெட்ரண்ட் ரஸ்ஸல் சிறந்த தத்துவவாதி எலியட்டின் நண்பர் அவருக்கு விவியன் ஹெய் உட் மீது ஆர்வம் அவளுக்கும் தான் .இருவருக்கும் ஒரு அந்தரங்கமான உறவிருந்ததாக நிறைய இலக்கிய விமர்சகர்கள் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். நிருபிக்கப்பட்டதாக எங்கும் தகவல் இல்லை
எலியட்டிற்கும் விவியனுக்குமான உறவு பற்றி Michael Hastings ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். Tom & Viv என்ற அந்த நாடகம் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் எலியட்டாக நடித்திருப்பவர் Willem Dafoe.
The progress of an artist is a continual self-sacrifice, a continual extinction of personality. எனக்கூறுகிறார் எலியட். இது அவரது சொந்தவாழ்வின் எதிரொலியே.
அதாவது ‘’ ஒரு கலைஞனின் வளர்ச்சி என்பது தொடர்ந்து தன் அடையாளத்தை அழித்துக்கொண்டிருப்பதே தன் அடையாளத்தை கரைத்து காணாமல் போகச் செய்வதே ‘’ என்று அவரே எழுதியிருக்கிறார்.
இத்தனைக்குப் பிறகும் ஆச்சரியம் என்னவென்றால் எலியட் விவியனை அபரிதமாக நேசித்தார். அவளுக்கு மனச்சிதைவு நோய் இருப்பது நாளடைவில் கண்டுபிடிக்கப்பட்டது. அவளும் எலியட்டை மூர்க்கத்தனமாக நேசித்தாள் என்றே சொல்ல வேண்டும். அவளுக்கு ஒரு குழந்தை பெற்றுத்தரும் உடல் நலம் இல்லை. கவிஞர் தன்னை விட்டுப்போய்விடுவாரோ என்ற ஒரு பயம் வேறு .இவையனைத்தும் சேர்ந்து அவரை அவளின் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற ஆவல் அவளிடம் குடிகொண்டது .கடையில் அது அவரின் இலக்கிய வாழ்க்கையே கேள்விக்குள்ளாக்கி விட்டது. பேராசிரியப்பணி பத்திரிகையாசிரியப் பணி என்று எதிலும் அவரை அவள் நிரந்தரமாக சோபிக்க விடவில்லை. கடைசியில் வேறு வழியின்றி தன் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் அவள் கடைசி வரையிலும் அதை ஒத்துக்கொள்ளவேயில்லை. எலியட் தன்னை விவாகரத்து செய்வார் என்று அவள் நம்புவதற்கும் கூட தயாராக இல்லை.
மனநலக்காப்பகத்தில் அனுமதிக்கபட்ட விவியனை ஒருமுறை கூட எலியட் சென்று பார்க்கவேயில்லை.
மௌரீஸ் (அவளின்சகோதரன்) ஒரேயொரு முறை அவளைக் காணச் சென்ற போது அவள் எலியட் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேச்சில் அத்தனை அன்பிருந்தது. ஒரு மனநோயாளி போல அவளிடம் துளியும் அடையாளமில்லை என்று மௌரீஸ் கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறான்.
விவியனின் அன்பு மூர்க்கமானது. தன்னால் எலியட் எண்ணிக்கையற்ற பிரச்சனைகளுக்கும் அவமானத்திற்கும் உள்ளான போதும் அவள் அதை உணரவேயில்லை. அவள் எலியட்டை உறுதியாக நேசித்தாள். தன்னை அவர் ஒரு போதும் கைவிடமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். எலியட்டும் அப்படித்தானிருந்தார். ஆனால் தாங்கமுடியாத மனஉளைச்சலின் உச்சத்தில் தான் அவளிடமிருந்து பிரிந்து போனார்.
தான் விரும்பிக் காதலித்து மணந்து கொண்ட விவியனை பின்பு அவர் ஒரு போதும் சந்திக்கவேயில்லை. விவியன் தனது 58வது வயதில் மாரடைப்புக் காரணமாக மனநலக் காப்பகத்திலே இறந்து போனாள். பத்து ஆண்டுகாலம் அவள் மனநலக் காப்பகத்தில் வசித்திருக்கிறாள். எவரும் அவளைத் தேடிப் போகவேயில்லை. அந்த நாட்களில் அவள் எழுதிய டயரிக்குறிப்புகள் அவளது மரணத்தின் பின்பு தனிநூலாக வெளிவந்துள்ளது.
விவியனின் மரணத்திற்குப் பிறகு எலியட் தனது உதவியாளராக இருந்த வெலரி பிளெட்சர் என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது எலியட்டின் வயது 68 வெலரி பிளெட்சரின் வயது 30. 1948ம் ஆண்டு எலியட்டிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
ஒரு கவிஞனின் சொந்தவாழ்க்கை என்பது அவன் கவிதை உருவாக்கதில் பங்குபெறுகிறதா என்ற விவாதம் இன்றும் தொடர்ந்து வருகிறது. உளவியல் ஆய்வாளர்கள் எலியட்டின் கவிதைகளில் பாதி அவரது சொந்த வாழ்வின் வெளிப்பாடே என்று கூறுகிறார்கள். அத்துடன் விவியனுடன் ஏற்பட்ட விலகலே அவரை எஸ்ரா பவுண்டோடு நெருக்கமாக்கியது என்றும் கூறுகிறார்கள்.
வோர்ட்ஸ்வெர்த்தின் இயற்கை எழிலைப் பாடும் கவிதைகளை வாசித்த ஆங்கில இலக்கிய வாசகர்களுக்கு எலியட்டின் கவித்துவ வெளிபாடும் கவிதைப் பொருளும் மொழியும் விநோதமாய்த் தெரிந்தன. பாழ் நிலம் கவிதையில் ஒலிக்கும் அக்குரல் அன்றைய ஐரோப்பிய சமூகத்தின் வெளிப்பாடே. அவநம்பிக்கையும் குழப்பங்களும் கொண்ட அக்குரல் காலத்தின் முன்பின்னாகச் சஞ்சரிக்கிறது. கைவிடப்பட்ட மனிதனின் அந்தரங்க குரலாகவே எலியட்டின் கவித்துவ மொழி அமைந்துள்ளது.தீவிரமான மன அழுத்தமும் வெறுமையும் கொண்ட நிலையிலிருந்தே இக் கவிதைகள் உருவாகியிருக்கின்றன
எலியட்டின் புகழ் பெற்ற இலக்கிய நூல்கள்
எலியட் மிகச் சிறந்த கவிஞர் மட்டுமல்ல நல்ல நாடகஆசிரியர் சிறந்த இலக்கியத் திறனாய்வாளர் பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
அவரன் புகழ் பெற்ற நூல்கள் யாவும் வாசகர்களுக்கு முற்றிலும் வேறொரு உலகத்தை திறந்து காட்டக்கூடியது. நீங்கள் யூகிக்கவே முடியாத கற்பனை செய்து பார்க்க முடியாத கோணத்தில் கவிதை நாடகம் திறனாய்வுகள் என்று இலக்கியத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்பவர் அவர்.
அவரது புகழ்பெற்ற கவிதைகள்
The Love Song of J. Alfred Prufrock
The Waste Lan
The Hollow Men
Ash-Wednesday
Old Possum’s Book of Practical Cats
Four Quartets
அவர் எழுதியயநாடகங்கள்
The Confidential Clerk, and The Elder Statesman
இலக்கிய விமர்சனம்
“Tradition and the Individual Talent“,
“Hamlet and His Problems” of an “objective correlative“,
1948 ல் நவீன இலக்கிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
( நன்றி விக்கிபீடியா)
தகவல் குறிப்புகள் – தங்கேஸ்