ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

 

ஆறாயிரம் தலைமுறை
தலைமுறைகள்- விமர்சனம் | Thalaimuraigal review ...
மது சாரம் வழியும்
ஆதித் தெருவில்
சொற்கள் சில
நிர்வாணப்பட்டு கிடந்தன.
போதையில் மிதந்தும்
இசையில் நனைந்தும்
முறித்துக் கொண்ட தொடர்பின்
எல்லை மிக தூரமாக இருந்தது.
ஒரு பாதுகாவலனின் சொல்
அங்குமிங்குமாக அடி பட்டும்
மிதி பட்டும் சிதறுகிறது.
இப்போது பூமிக்குக் கீழுறங்கும்
ஒரு சேதி.
சுவாசத்தைப் போல
ஆதித் தெருவெங்கும் பரவி
கலைக்கப்படும் அந்நிகழ்வு
நதியைப் போல விரிகிறது.
பெரும் சக்தியாகிய சொல்
காப்பாளனிடமிருந்து வந்ததென்பது
பயத்தின் சம்மதமல்ல
நேசிப்பின் உச்சமென
அடையாளம் காண முடிந்த
ஆதிப் பரம்பரையின்
ஆறாயிரம் தலை முறை நான்.
மூன்றாம் பரம்பரையின் திமிரு
பரம்பரை என்பதன் உண்மையான அர்த்தம் ...
பெரும் இடைவெளியை
நிரப்பிச் செல்கிறது
ஒரு ஆதி கால நிகழ்வு.
நிரப்பப்படாமலிருந்த இடைவெளியில்
மூன்றாம் பரம்பரையின் திமிரு
படர்ந்திருந்தன.
வாப்பாவின் உம்மாவுக்கு
அந்த நிகழ்வில் உடன்பாடிருந்ததில்லை.
தாத்தாவின் கோபம் பற்றித் தான்
வாப்பும்மா நிறைய பேசி இருக்கிறார்
என உம்மா நேற்று சொல்லும் போது
தாத்தாவின் பழைய டயரியை
எடுத்துத் தூசி தட்டிய போதுதான்
அந்தப் பரம்பரை இடைவெளியை
என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது.
தாத்தாவின் கோபத்தில் நியாயம்
மறைதலாகி நிற்கிறது.
வாப்பும்மாவை பேச வைக்க முயற்சித்த
போது தான்
நான் உட்பட வீட்டில்
எல்லோரும் ஆதி காலத்துக்குள்
வாழ தூண்டப்பட்டோம்.
பெரியப்பா விட்ட பெரும் மூச்சு
இப்போது தான் அந்த இடைவெளியை
நிரப்பியது சம்மதத்தால்.
இப்போது நாங்கள் தாத்தாவுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது
பின்னோக்கிய கதை.
ஆட்டிடையானும் ஓ நாயும்
ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் ...
கரடு முரடான பாதை கடந்து
மேய்ச்சல் நிலம் அடைகிறான்
ஆட்டிடையன்.
அங்காங்கே சிறு பச்சைப் புற்கள்
காய்ந்து சருகான பற்றைகளுக்கு நடுவில்
மறைந்து கிடக்கும் புற்களை
ஆசை ஆசையாக மந்தைகள்
தின்று பசி தீர்க்கும்
காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறான்
ஆட்டிடையன்.
காட்டாறு போல வந்த ஓ நாய்
மந்தைகளுக்கு முன் நின்றது
பதறிய ஆட்டிடையனிடம்
தாகமென தனது முகத்தைக் காட்டிய
ஓ நாய்க்கு
தனக்கென வைத்திருந்த நீரைக்
கொடுக்கிறான்.
தாகம் தீர்ந்ததும் அது
மேய்ச்சல் நிலத்தை விட்டு
சாதூரியமாக நகர்கிறது.
மந்தைகளை  இப்போது அவ்விடத்திலிருந்து
நகர்த்திச் செல்கின்ற ஆட்டிடையனை
வழி மறித்தது பல ஓ நாய்கள்
இப்போது ஆட்டிடையன்
தனது தண்ணீர் பையை
எடுத்து பார்க்கிறான்
தண்ணீர் இல்லை.
ஓ நாய்கள் பாயத்தொடங்கின
மந்தைகள் மீது.
அங்குமிங்கும் ஓடும் மந்தைகளைப்
பார்த்து அங்கேயே நகராது
நின்று கொண்டிருக்கிறான் ஆட்டிடையன்
மனசு மட்டும் மந்தைகளை
தூர கலைத்துக் கொண்டிருந்தது.
..
நிலாக் கதை
நிலா பார்ப்பவர்கள்
அந்த இரவு முழுதும்
மின்சாரம் தடைப்பட்டிருந்தது
என்னால் உறங்க முடியவில்லை
வியர்வை சொட்டத் தொடங்கியது
உடல் வெக்கையில் சூடானது
படுக்கையை விட்டு எழுந்து கொள்கிறேன்
என் வீட்டுக் கூரையை யாரோ
பிரிப்பது போல சப்தம்
பயம் மெள்ள எனைச் சூழ்ந்து கொண்டது
இப்போது என் தனிமையும் நானும்
அந்த இருள்மைக்குள் மாட்டிக் கொண்டோம்
வீட்டுக் கூரை பிரிக்கும் சப்தம் இன்னும்
அதிகரிக்கிறது.
மேலே பார்க்கிறேன்
நிலவு எனது வீட்டுக் கூரையைப்
பிரித்து உள்ளே நுழைகிறது
அறை முழுதும் வெளிச்சம் நிறைகிறது
அதன் வழியாக மெல்லிய காற்றும்
வீசத் தொடங்கிய போது
நானும் நிலவும் விடிய விடிய
பேசிக் கொண்டிருக்கிறோம்
தனிமை தூரமாக இருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறது.
.
மீன்களுக்காக கடலை வரைதல்
What to do in Puerto Morelos? | Casa del Puerto Hotel
நான் சில மீன்களை
வரைந்து முடித்து  விட்டு
தூங்கிவிடுகிறேன்.
யாரோ என் தூக்கத்தை
கலைக்கும் படியாக
சப்தமாக உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
திடிரென விழித்துக் கொள்கிறேன்.
குழந்தை தூக்கத்திலிருந்து எழுந்து
மீன்களோடு பேசிக் கொண்டிருக்கிறது.
அவர்களது உரையாடலை முடிக்கவென
நான் தூக்கம் கலைந்த கையோடு
சில மீன் கொத்திப் பறவைகளை
வரைந்து விடுகிறேன்.
அவை றெக்கை விரித்துப்
பறந்து பறித்துச் செல்கின்றன
குழந்தையிடமிருந்து மீன்களை.
இப்போது குழந்தை
அழத் தொடங்கிவிட்டது
உடனே வனமொன்றை வரைகிறேன்
குழந்தை இப்போது அந்தப் பறவை
இந்த வனத்தில் தானே
வசிக்க வேண்டுமென்கிறது.
‘ஆமா’ என்கிறேன்.
அப்போ என் மீன்கள் எங்கே
என்கிறது.
உடனே நான் கடலொன்றை வரைய
முனைகிறேன்.
..
..
ஜே.பிரோஸ்கான்