உலக அழகி – ஜெயஸ்ரீ பாலாஜிவீட்டு வேலைகளை நயம்பட முடித்து
விரல்நகங்கள் உடைப்பட்டுள்ளதா
என்று பார்க்கும் தருணத்திலும்..
பனிக்கூழ் தின்று முடிக்கையில்
உதட்டின் சாயநிறம் போய்விட்டதா
என்று பார்க்கும் தருணத்திலும்..
அறியாமல் கசக்கிய கண்களில்
இமைகளின் கண்மை கலைந்துள்ளதா
என்று பார்க்கும் தருணத்திலும்..
கழிவறைக்குச் சென்றுவந்தபின்
புடவையின் மடிப்புக் கலைந்துள்ளதா
என்று பார்க்கும் தருணத்திலும்..
நகைகள் எல்லாம் கழட்டி வைத்துபின்
இயல்பாக பெருமூச்சு விட்டு “நிம்மதி”
என்று பார்க்கும் தருணத்திலும்…
நீண்ட இருசக்கர பயணத்தின்பின்
முடி கலைந்துள்ளதா
என்று பார்க்கும் தருணத்திலும்…
வேரறொரு பெண் தனது உடையை
பாராட்டக் கேட்டு பெருமையாய் “அப்படியா”
என்று பார்க்கும் தருணத்திலும்…
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
வெளிபடுகிறாள் அன்னிச்சையாக
உலக அழகி..
செ. ஜெயஸ்ரீ
திருநின்றவூர்.