K.Punithan's Poetry is Based on The story of the fox who betrayed the crow (Crow And Fox). Book Day Is Branch of Bharathi Puthakalayam



காகத்திடம் ஏமாந்த நரி கதை

புத்தரின்
போதி மரத்தடியில்
வடை சுடும் பாட்டி

வடையை அலகால்
கொத்திக் கொண்டு
போதி மரக்கிளை மேல்
அமரும் காகம்

காகத்தைப் பொறுத்த வரை
அது திருடு அல்ல

காகம்
இன்றைய நவீன மனிதன் போல
மென்மையாய் சாப்பிடுகிறது

காகத்தைப் பாடல் பாடச் சொல்லியும்
நடனம் ஆடச் சொல்லியும்
வடை கீழே விழும்
என எதிர்பார்த்து ஏமாந்த
நரி
இன்றைய சந்தையில்
எதுவும் வாங்காமல் திரும்பும்
அப்பாவி மனிதனை
ஒத்தது

…க. புனிதன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “காகத்திடம் ஏமாந்த நரி கதை – க. புனிதன்”
  1. இன்றைய சந்தையில் எதுவும் வாங்காமல் திரும்பினால் அவன் அப்பாவியா என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *