மாயத் தழல்…
ரகசியமாக அழைக்க வா
உன் பாதங்கள்
வளைவுகளாக விழட்டும்
வாசல் வரை
கொஞ்சம் குனியச் சொல்
தலை தட்டாது
இங்கும் அங்கும் அலையச் சொல்
அந்தரத்தில் வானம் தவிர எதுவும்
நிரம்பவில்லை
குனிதலுக்கும் நிமிர்தலுக்கும்
இடைப்பட்ட வளைவுதான் வானவில்…
ஜன்னல் மூடியேயிருக்கிறது
திரைச்சீலையின் ஓரம்
சரியாக இழுத்துவிடப்படவில்லை
பௌர்ணமி தெரிகிறபோதே
பார்த்துக்கொள்ளும்படியழைக்கிறா ள்
அம்மா
இரவு வந்துவிட்டதா?!
ஐ ஆம் ப்ரைட்னிங் என்கிறேன்
முன்பெப்போதுமல்லாத மகிழ்வென்கிறேன்
இத்தனை வருடங்களாகப் பிடித்திருந்தவொன்று
முழுமையாக
விட்டுவிலகியது போல
உட்காருகிறேன் எழுகிறேன்
ஆடுகிறேன்
இரண்டு மூன்று நடன அசைவுகள்….
-க.சி.அம்பிகாவர்ஷினி
****************************** **********