மதுசூதனனின் ஐந்து குறுங்கவிதைகள்

Madhusudhan S Five Short Poems (Haiku) in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.1)
திறக்கக் கடினமான
போத்தல் மூடியை
அழுத்தித் திருகும் போது
மென்னி முறித்துக் கொல்லும்
கொலைகாரன் ஆன உணர்வு.
************
2)
அறுவடையான வயல்களில்
கொத்திக் கொண்டிருந்தன
கரிச்சான்கள்
இதற்கு மேல்
சொந்த ஊர் பற்றி
எழுத முடியாமல்
தொண்டைக் கவ்வியது
என் பேனாவிற்கு.
*********
3)
பலர் பற்றி நின்ற
தாழ்மரக் கிளையை
வேறு சிலர் முறிக்கிறபோது
அந்த பலரை
தேடிப் போகிறது போலிருக்கிறது
உச்சியிலிருந்து விலகிய பறவை
*******
4)
நீ வந்து போன கனவை
என் கைக்குட்டையில்
மடித்து வைத்திருந்தேன்.
தெரியாமல் விரித்த போது
பனி படர்ந்திருக்கிறது
என் அறையில்.

*******

5)
வருத்தம் தொக்கி நிற்கும்
என் வார்த்தைகளுக்கு
முற்றுப் புள்ளியாய் இருக்கிறது
உன் உதட்டு மச்சம்.
*******

Madhusudhan S
14.8.2021

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.