எனக்குப் பிடித்த நூல் கட்டுரை – அழகோவியம்

எனக்குப் பிடித்த நூல் கட்டுரை – அழகோவியம்




Anbirku ayiram mugankal

நூல் : அன்பிற்கு ஆயிரம் முகங்கள்
ஆசிரியர் : விழியன்
விலை : ரூ.₹60/-
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

தன் வகுப்பில் நடந்த கட்டுரைப்போட்டியில் விழியனின் அன்பிற்கு ஆயிரம் முகங்கள் நூலினைப் பற்றிய அறிமுகம் கொடுத்துள்ளார் அழகோவியம். ஏழாம் வகுப்பை சேர்ந்த மாணவி. “எனக்கு பிடித்த நூல்” என்ற தலைப்பிலான கட்டுரை. மற்றவையை கட்டுரை சொல்லும்.

எனக்குப் பிடித்த நூல்
*****************************

குறிப்புச்சட்டகம்:-

முன்னுரை
பிடித்த நூல்
நூலாசிரியர் குறிப்பு
நூலின் மையக்கருத்து
பிடிக்கக்காரணம்
முடிவுரை

முன்னுரை:

புத்தகம் மனிதனை முழுமையாக்குகிறது.
நல்ல நல்ல புத்தகங்களைத் தேடி தேடி வாசிக்க வேண்டும். புத்தகங்களைப் படிக்கும் போது அது நம் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ”ஒரு புத்தகம் உங்களிடம் இருந்தால் ஆயிரம் நண்பனுக்குச் சமம் என்பார்கள்.” அதுபோல நான் படித்த நூல்களில் ஒன்றான * அன்பிற்கு ஆயிரம் முகங்கள்’ நூலைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிடித்த நூல்:

13 சிறுகதைகள் கொண்ட ’அன்பிற்கு ஆயிரம் முகங்கள்’ தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்த மற்றும் ஈர்த்த நூலாகும். இந்நூலில் உல்ல சிறுகதைகளில் ஒன்றான ‘பெருமழையின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நூலாசிரியர் குறிப்பு:

‘அன்பிற்கு ஆயிரம் முகங்கள்’
என்னும் நூலை எழுதியவர் விழியன். விழியன் என்கிற உமாநாத், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும். எழுதியும். கல்வி சார்ந்து இயங்கியும் வருகின்றார். இவரின் ‘மலைப்பூ, 1650 – முன்ன ஒரு காலந்துல ‘பென்சில்களின் அட்டகாசம்’ ஆகியவை பரவலாகப் பேசப்படும் புத்தகங்கள்.

நூலின் மையக்கருத்து:

இக்கதையின் மையக்கருத்து அன்பு எவ்வாறு வெளிப்படுகின்றது. குழந்தையின் ஆலோசனை எவ்வாறு அன்பாக வெளிப்படுகிறது என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.

பிடிக்கக்காரணம்:

இக்கதையில் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், ஃபேண்டசி சிறிது என கலந்து இருக்கும் நுட்பமான உணர்வுகளையும் புதிய சமூகப் பார்வைகளையும் கொடுக்கும். இதனால் இந்நூல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

முடிவுரை:-

புத்தகத்தில் ஒளிர்வது, ஞானத்தின் ஒளி.!”. என்பர். அதுபோல நாம் நிறைய நூல்களை படித்து ஞானத்தை பெறுவோம் புத்தக வாசிப்பு மிகவும் அவசியம்.

– அழகோவியம்

 

 

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. ப மோகனா அய்யாதுரை

    மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் எழுதியிருக்கும் அழகோவியத்திற்கு அன்பும், வாழ்த்துகளும்..💐💐

  2. அன்பிற்கு ஆயிரம் முகங்கள் நூல் விமர்சனம் படித்தேன் .”புத்தகம் மனிதனை முழுமையாக்குகிறது என்ற ஆரம்பம் உண்மை. படிக்கனும் என்ற உணர்வை உந்திதள்ளும் விசையாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *