உங்கள் வரங்களை நிறைவேற்றிக்கொள்ள….
எப்போதும் நீங்கள் தேடும்
சிறகில்லா தேவதை அவள்…
சில நேரம் அடுப்பங்கரை அனலில்…
சில நேரம் வேலை நேரச் சுமையில்…
சில நேரம் கனவுகளைப் புதைத்தவளாக….
சில நேரம் கனவுகளை மறந்தவளாக…
தினம் தினம் அவளை கொண்டாட வேண்டாம்…
தினம் வைத்தும் அவளைக் கொண்டாட வேண்டாம்…
அவள் கிறுக்கலும் கவிதையாகலாம்….
அவள் கனவுகளும் சிகரம் தொடலாம்….
அவளை அவளாகவே ரசியுங்கள் போதும்…..
– நிஷா வெங்கட்…🖤
Post Views: 240