Subscribe

Thamizhbooks ad

தொடர் 35: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

 

 

 

பறவைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு!
இயற்கை சூழலின் உயிர் துடிப்பு!!

இயற்கையில் காணப்படும் அனைத்து உயிரினங்களில், பறவைகள் என்பது மிகவும் வேறுபட்டது. பறத்தல், உடல் அமைப்பு, சிறகுகள், வண்ணம், குரல், போன்ற பல்வேறு வெளித் தோற்ற பண்புகள் மட்டுமின்றி, அவற்றின் நடத்தை, வாழ்க்கை முறை, பெற்றோர் கண்காணிப்பு, இடம் பெயர்வு என்ற வலசை போகுதல் ஆகிய செயல்கள் ஆச்சரியம் தரக் கூடியவை ஆகும். பறவைகள் காண்பதற்கு மகிழ்ச்சி தருவது மட்டுமின்றி, அவை இயற்கை சூழலின் முக்கிய செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. மனிதர்கள் வாழ்க்கையில் அடிப்படை உணவு உருவாக்க, மகரந்த
சேர்க்கை (POLLINATION), விதை பரவுதல் (SEED DISPERSAL) என்று தாவரங்கள் பெருக்கத்தில், மறைமுக செயல்பாடுகள் மூலம் பறவைகள் நமக்கு உதவுகிறது. நெடுங்காலமாக இவை மனிதனுக்கு உணவாக இருப்பதும் நாம் அறிந்த தகவல் ஆகும். எனினும் இந்த உயிரினங்களின் நிலை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள மனிதன் தயாராக இல்லை என்பது உண்மை! அவன் வளர்ச்சி, என்ற பெயரில் காடுகள் அழித்து கட்டிடங்கள் பெருக திட்டமிட்ட காலம் முதல், பறவைகள் என்பதை கூண்டில் வைத்து ரசிப்பது, வேட்டை மூலம் அழித்து உணவாக்குதல் ஆகிய செயல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டுள்ளது.

அரசு வனத்துறை மூலம் அரிய பறவை இனங்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவது ஒரு புறம் இருக்க,உள்ளூர் பறவை இனங்கள் பற்றிய அறிவு, பாதுகாப்பு உணர்வு, நம் மக்கள் இடையில் மிக குறைவு என்பது மறுக்க இயலாது. அதனால் ஊடகங்கள், நம் நாட்டு பறவைகள் பற்றிய செய்திகளைக் கூட மிக ஆச்சரியம் கலந்து, “வெளிநாட்டு பறவை “என தவறாக சித்தரிப்பு செய்வது வழக்கம் ஆகிவிட்டது. சமீபத்தில் நம் நாட்டில் பதின்மூன்று நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, இந்திய பறவைகள் நிலை பற்றிய கணக்கெடுப்பு ஆய்வுகளில், பல கவலை அளிக்கும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. Nature Conservation foundation, Bombay Natural History Society, ATREE, SACON, WETLANDS INTERNATIONAL, WWF, ZOOLOGICAL SOCIETY OF INDIA, WILD LIFE INSTITUTE OF INDIA, NCBS,FOUNDATION ENVIRONMENT SOCIETY, NBA-INDIA, Centre for Ecological Sciences -INDIAN INSTITUTE OF SCIENCE ஆகிய ஆய்வு மற்றும் அரசு சார்ந்த, தொண்டு நிறுவனங்கள் இந்த பணியில் ஈடுபட்டு வந்தன. அவர்களின் ஆய்வில், நாடு முழுவதும், சேகரிக்கப் பட்ட 3 மில்லியன் தரவுகள் (DATA)
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறுபறவைகள் நிலை பற்றிய உண்மைகள் அறியப்பட்டன.

இந்த கணக்கெடுப்பு ஆய்வில் மொத்தமாக 942 பறவை சிற்றினங்கள் ஆய்வு செய்யும் கணக்கெடுப்பு மேற்கொள்ள திட்டம் உருவாக்கப்பட்டது. பல்வேறு பறவைகளின் நிலை, எண்ணிக்கை மிகக் குறைவாக 39% சதவீதம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 178 பறவை சிற்றினங்கள் மிகக் கவலை அளிக்கக் கூடிய எண்ணிக்கையில் இருப்பதால், அவை உடனடி கவனிப்பு, ஆய்வு தேவைப்படும் நிலையில் உள்ளன. மயில் என்ற நம் தேசிய பறவை மட்டும் 150% அதிக எண்ணிக்கையில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது இந்த பறவை கணக்கெடுப்பு ஆய்வில்,98 பறவை சிற்றினங்கள், மிக வேகமாக குறைந்து வருவதாகவும்,106 சிற்றினங்கள் முந்தைய எண்ணிக்கை நிலையினை விட குறைவாக உள்ளதாக தெரிகிறது. நிலையாக ஓரளவு எண்ணிக்கை உள்ள பறவையினங்கள் 98 ஆக உள்ளது. எண்ணிக்கை கூடுதல் ஆன பறவை இனங்கள் 18 மட்டுமே ஆகும். மொத்தத்தில் 523 பறவை சிற்றினங்களுக்கு, மட்டுமே தரவுகள் (DATA) முழுமையாக சேகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 419 சிற்றினங்களுக்கு குறைவான தரவுகள் இருப்பது, அந்த பறவையினங்கள் பற்றிய வாழ்வியல், சூழல் போன்ற தகவல்களை உறுதியாக ஆய்வுக்கு உட்படுத்த இயலாத நிலைக்கு ஆகியுள்ளது.

குறிப்பிட்ட நீர் பறவைகளின் புவிப் பரவல், மிகவும் குறைவாக உள்ளது என்பது இந்த ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. கார்கனி வாத்து, வடக்கு தட்டை வாயன் வாத்து, ஊசிவால் வாத்து, போச்சர்ட் வாத்து, பூ நாரை, கொண்டை வாத்து, கற்றை வாத்து போன்றவை இந்நிலையில் உள்ளன. தமிழ் நாட்டில் நீல சிரிக்கும் குருவி, அஷாம்பு சிரிக்கும் குருவி, வெண் வயிறு சோலை கிளி, நீலகிரி பிபிட் குருவி போன்ற பறவைகள் இவ்வாறு பரவல் குறைந்து ஆங்காங்கே மட்டும் காணப்படுகிறது.
உண்மையில் இவ்வாறு பறவைகள் பற்றிய தகவல்கள் மூலம் பல்வேறு சூழல் செயல் பாடுகள் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அறிவியல் பூர்வ இயற்கை பாதிப்புகள் பற்றி, பொது மக்களுக்கும், பல கற்றரிந்தவரும் அக்கறை கொள்வது, நம் நாட்டில் இல்லை.

சமூக பிரச்சனை மற்றும் பொருளாதார பிரச்சனை ஆகியவை முன்னுரிமை பெறும் நிலையில், மறைமுகமாக இயற்கை, பறவைகள் நம் வாழ்வில் பங்கு வகிப்பது பற்றி பெரும்பான்மை மக்கள் அறிய ஆர்வம் கொள்ளும் நிலை மிக குறைவாக வே இருக்கிறது. வளர்ச்சி, என்பது செயற்கை முகம் கொண்டு இருப்பது மட்டும் மக்களால் விரும்பப்படுகிறது. ஆனால் பறவைகள் பல்வேறு பாதிப்புகள் அடைய இந்த வளர்ச்சி காரணிகள், எதிர் மறையாகவே செயல்படுகின்றன. நிலங்களை பல்வேறு காரணங்களுக்கு மாற்றம் செய்வது, நகர மயமாக்கம், முன்னரே இருந்து வந்த பாரம்பரிய இயற்கை சூழல் அமைப்புகள், குறிப்பாக சிறு பசுமை பகுதி,ஏரி, குளங்கள் அழிந்து விடுதல், ஒற்றை முறை பயிர் வளர்ப்பு, நோய்கள்,, கட்டிடம், தொழிற்சாலை பெருகுதல், வேட்டையாடுதல், மாசுபாடு, செல்ல பறவை வளர்த்தல் கலாசாரம், பருவ கால மாற்ற விளைவுகள், ஆகிய பல காரணிகள் தொடர்ந்து பறவைகளின் இயற்கையான வாழிடங்களை அழித்து வருவது கவலைக்குரிய தகவல் ஆகும்.

சரி, இந்த பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வு, பல்வேறு முறைகளில் வெவ்வேறு பறவைகள் பற்றிய சூழல் தகவல்கள் தந்தாலும், அவற்றைப் பற்றி பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு மற்றும் தொடர் செயல்பாடுகள் இருக்குமா!!? என்பது சற்று ஐயம் ஆக உள்ளது. ஏனெனில், பொதுவாக மிக வேகமாக அழியக் கூடிய நிலையில் உள்ள பறவைகள், பிரபலமான, அழகு பெரிய பறவைகள் பற்றிய உடன் ஆய்வு, கண்காணிப்பு, பாதுகாப்பு போன்றவை நம் நாட்டில் அதிக முன்னுரிமையினை, பல்கலைக்கழகங்கள், அரசு, தனியார் ஆய்வு நிலையங்கள் தருவது வழக்கம் ஆகிவிட்டது. மேலும் சமீப காலமாக இயற்கை, பறவைகள் அறிவியல் ஆய்வுகள் பற்றிய திட்டங்கள் செயல்படுத்துவதில், அதிக தொய்வுகள் காணப்படுகிறது. நிதி குறைப்பு, புதிய ஆய்வு திட்டங்களை தவிர்த்தல் போன்றவை நம் நாட்டின், உயிரியல் ஆய்வாளர் இளைஞர்கள் எதிர்காலத்தினை கேள்விக்குறி நிலைக்கு ஆக்கியிருக்கிறது என்பது வருந்தத் தக்க உண்மை! மேலும் இந்த ஆய்வுகளின் முடிவுகள் முறையாக பகுத்தாய்வு அரசுதுறைகளிலும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் தொடரவேண்டும். பருவ கால மாற்ற விளைவுகள், அரிய பறவைகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் இயற்கை காணும் களப்பணி, மேற்கொண்டு மாணவர்கள் மூலம் உள்ளூர் பறவைகள் இனம், அவற்றின் எண்ணிக்கை அவ்வப்போது கண்டறிய திட்டங்கள் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதற்குரிய “பறவைகண்காணிப்பு (Bird watching) பயிற்சி பெற ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். பறவைகள் அதிசயம் ஆக என்றும் பார்ப்பது மட்டும் தவிர்த்து அறிவியல் செய்முறை என மாற்றம் செய்து உள்ளூர் பறவைகள் அட்டவணை உருவாக்க முயற்சி மேற்கொள்ள கல்வித்துறை, சுற்றுசூழல் துறை, உள்ளாட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். பறவைகள் இயற்கை சூழலின் உயிர் துடிப்பு என்பது நாம் அனைவரும் அறியவேண்டும். இயற்கை ரசிக்க மட்டும் தான், என்ற கருத்து அகன்று, அவை அறிவியல் பூர்வ உலக வாழ்வின் ஆதாரம் ஆகும் என்பதை மக்கள் மற்றும் அரசு உணர வேண்டும். வளர்ச்சி திட்டங்கள், இயற்கை பகுதியில் நிறைவேற்ற, பல காரணங்கள் (பொருளாதாரம், மக்கள் விருப்பம் போன்றவற்றை கூறி நியாயப்படுத்துவதை நிறுத்தவேண்டும். சமகால சுற்று சூழல் சவால்களில், பறவைகள் பாதுகாப்பு முக்கியம் ஆகும்.நல்ல மாற்றங்கள் எதிர் காலத்தில் தொடர்ந்துவரும் என்று எதிர்பார்க்க நம்பிக்கை கொள்வோம்!!!!

Latest

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

      கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி அளவும் குறைவில்லாமல், ஒவ்வொரு நொடிப்பொழுதும் அழகாகவும், சந்தோஷமாகவும் வாழும் ஒரே இடம் கிராமம் மட்டுமே.நாம் பலபேர் கிராமத்தில் பிறந்து, வேலை...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல் வழக்கு உண்டு. பசியின், பஞ்சத்தின் வலிகள் கூட மனித சமூகத்திற்கு அவ்வளவு சுலபத்தில் புரிந்து விடுவதில்லை. அதை தெளிவாக மனதிற்குள்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக் காணும் போது மட்டும் ஏன் மற்றவர்களை அழைத்துக் காண்பிக்கிறோம் என்ற கேள்விக்கணையோடு தொடங்கி, வானவில்லுக்காக 62 நாடுகள் பயணித்து பல்வேறு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here