இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் மீது வன்மம்

நவீனத்தை ஏற்றுக்கொள்ளாத இந்துத்துவ தேசியம்:

“இன்று எங்கு பார்த்தாலும் நமது வாழ்க்கை அமைப்பு முறையை அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ரஷ்யாவின் வாழ்க்கை முறைக்குத் தக்க மாற்றி உருவாக்க முயற்சி நடப்பது தெரிகின்றது. ‘ஸ்வ’ (அதாவது, தேசியச் சிறப்புத் தன்மைகளும் அறிவாற்றலும்) ஒரு சிறிதும் இல்லாத ஒன்றை ‘ஸ்வ தந்தரம்’ (விடுதலை) என்று எவ்வாறு அழைக்க முடியும்? அதனைப் ‘பர (மாற்றார்) தந்திரம்’ என்றே அழைக்க வேண்டும். லெனினை நமது லட்சியமாகக் கருதுவோமானால், அது ‘ஸ்வ’ தந்தர மல்ல. லெனின் தந்தரம்’தான்! நமது வரலாற்று ரீதியான பரம்பரையில் “சுதந்திரம்” என்ற கருத்துத் தோன்றுவதற்கே மூலகாரணம், நமது தேசிய வாழ்க்கை லட்சியங்களை, அதாவது நமது தர்மம், பண்பாடு ஆகியவற்றை,காப்பதும் பரப்புவதும் தான்.” [ஞான கங்கை: அத்தியாயம்-21]

‘முன்னேற்றம் என்ற வாய்வீச்சு வீசி விட்டு, நமது மக்கள் உறுதியற்று ஆற்றோடு போகிறார்கள். நாம் எங்கு செல்கிறோம் என்று நமக்குத் தெரியாது. இன்னதுதான் நமது தேசிய வாழ்க்கையின் சாரம் என்று திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டத் தகுந்த விஷயங்கள் ஏதாவது இன்று உண்டா? நமது வாழ்க்கை முறை, கல்வித் திட்டம், நமது நடத்தை, நாம் உடையணியும் பாணி, நமது வீடுகளையும் நகரங்களையும் ஊர்களையும் நிர்மாணிக்கின்ற பாங்கு ஆகியவை எல்லாம் மாறி விட்டன. நமது தேசிய ஆன்மாவின் அம்சங்களாகிய இவை, மிக பயங்கரமான விதத்தில் மாறியுள்ளன. மிக மட்டகரமாக அந்நியர்களைக் ‘காப்பி’ நடிப்பது நமது தேசியத் தன்மானத்திற்கு இழைக்கப்படும் அவமானம் என்பதை ஒரு கணமேனும் நாம் சிந்திப்பதில்லை. இவ்வாறாகப் பிறரைப் பின்பற்றி நடிப்பது, நமது தேசியத் தனிச் சிறப்புப் பண்புகளை இழந்து, அறிவு பூர்வமாக அடிமைப் படுகிற இழிநிலைக்குத் தாழ்ந்து விட்டோம் என்பதற்குத் தெளிவான, உறுதியான அறிகுறி.” [ஞான கங்கை: அத்தியாயம்-14) குருஜி கோல்வல்கர் உதிர்த்த தத்துவ முத்துகள்தான் மேற்கண்டவைகள்.

மதசார்பற்ற நவீன அரசியல் சாசனம் இவர்களுக்கு தடை:

‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ (Secular and Socialist) ஆகிய இரு வார்த்தைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்குவது தொடர்பாக, தேச அளவில் விவாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சமீபத்தில் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியான விளம்பரத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை (Preamble) படம் இடம்பெற்றிருந்தது. அதில் மதசார்பற்ற, சோஷலிச என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. ஏனென கேட்ட போது இந்த முகப்புரை 42-வது அரசியல் சாசன திருத்தத்துக்கு முந்தையது என்பதால் அதில் அந்த வார்த்தைகள் இல்லை என பசப்பினர்.

1950-ல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள வாசகம் To constitute India into a Sovereign Democratic Republic என்ற இருந்த வாசகத்தை திருமதி இந்திரா காந்தி தனது அரசியல் சுய நலத்திற்காக Soverign Socialist Secular Democratic Republic என மாற்றினார் எனவும் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஏன் இந்திய அரசியலமைப்பு சட்டம் அவர்களுக்கு கசக்கிறது?

JUSTICE Social economic and political – LIBERTY of thought expression belief faith and worship – EQUALITY of status and of oppoutunity என நமது அரசியல் அமைப்பு சட்டம் முழுங்குவது சனாதனவாதிகளின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக நிற்கிறது.

நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் (Articles) மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கு ராஜேந்திர பிரசாத் தலைவர், ஆனால் அரசியலமைப்பு வட்ட வரைவு குழுவுக்கு டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்தார். அக்குழுவில் பி. ஆர். அம்பேத்கர், என். கோபாலசாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே. எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, என். மாதவ ராவ், டி. டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இருந்தனர்.

இந்தியாவின் 6 முக்கியமான அடிப்படை உரிமைகள்:

● சமத்துவ உரிமை
● சுதந்திர உரிமை,

இதில் பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை, அமைதியாக ஆயுதங்களின்றிக் கூடும் உரிமை, சங்கங்கள் அல்லது கூட்டமைவுகள் அமைக்கும் உரிமை, இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் தடையின்றிச் சென்று வரும் உரிமை, இந்திய ஆட்சி நிலவைரயின் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும் நிலையாகக் குடியமர்வதற்குமான உரிமை, விழைதொழில் எதனையும் புரிந்து வருவதற்கும் அல்லது வாழ்தொழில், வணிகத்தொழில் அல்லது ஆகுதொழில் எதனையும் நடத்தி வருவதற்கும் உரிமை

● சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
● சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை
● பண்பாடு மற்றும் கல்வி உரிமை
● அரசியலமைப்பு மூலம் தீர்வு காணும் உரிமை

2002 இல் இந்திய அரசியலமைப்பின் 86 வது திருத்தத்தின் மூலம் சட்டப்பிரிவு 21கி வில் கல்வி உரிமை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உரிமை சமீபத்தில் அதாவது 2010 இல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த உரிமை செயல்படுத்தியது. 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் அடிப்படை உரிமைகளின் பட்டியலில் அண்மையில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது தனி உரிமை ஆகும்.

அடிப்படை உரிமைகள் முழுமையாக புரிந்துகொள்ளும் பிரிவுகள்:

இந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை (Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:
1. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு (பிரிவு-14)
2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு-15)
3. பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு (பிரிவு-16)
4. தீண்டாமை ஒழிப்பு (பிரிவு-17)
5. பட்டங்கள் ஒழிப்பு (பிரிவு-18)
6. ஏழு சுதந்திரங்கள் (பிரிவு-19 முதல் 22)
7. சமய உரிமை (பிரிவு 25-28)
8. சிறுபான்மையினரின் பண்பாட்டு,கல்வி உரிமை (பிரிவு 29-30)
9. இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)
ஆகியன முக்கியமானவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமலாகிவிடும்.

இவைகள்தான் இந்து மத அடிப்படைவாதிகளான சனாதனவாதிகளை மிகவும் தொந்தரவு செய்கிறது. அவர்கள் கட்டமைக்கும் இந்து தேசியத்திற்கு இவைகள் எதிராக இருக்கிறது. எனவேதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற துடிக்கின்றனர்.

அடிப்படைவாதிகள் ஆட்சிக்கு வந்த பின்னணியில்:

பொய்யான வாக்குறுதிகளும், இந்த்துவ அணி திரட்டளும் மோடி ஆட்சியை மத்தியில் அமர வைத்தது. பாராளுமன்ற மைய்ய மண்டபத்திற்கு வந்தது முதல் இந்த தேசத்தை மதத்தின் பெயரால் துண்டாடும் அனைத்து நிகழ்வுகளையும் சங் பரிவார் துவக்கியது.
உதாரணமாக இஸ்லாமியர்கள் மீதும் தலித்துகள் மீதும் அரசு எந்திர உதவியுடன் தாக்குதல் தொடுக்கும் முறையை அறிமுகம் செய்தது மோடி ஆட்சிதான் சில உதாரணங்களை பார்க்கலாம்.

குஜராத்: குஜராத்தில் முண்ரா என்னுமிடத்தில் ஈத் பண்டிகை நாளன்று, தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் நடத்திய நாடகம் ஒன்றில் இஸ்லாமியர்கள் அணிவது போன்ற குல்லாய்கள் அணிந்திருந்தார்கள் என்பதற்காக அப்பள்ளியின் முதல்வர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

1995 ஆம் ஆண்டிலிருந்து குஜராத்தை ஆண்டு வரும் பாஜக அம்மாநில மருத்துவ கட்டமைப்பை முற்றிலும் சிதைத்துவிட்டது. கோத்ராவு அதை தொடர்ந்த படுகொலைகளும் அவர்கள் வாக்கு வங்கியை மத அடிப்படைவாத அடிப்படையில் முற்றிலும் ஒருங்கிணைத்து உள்ளது. இந்துக்களை ராணுவமயமாக்கு, ராணுவத்தை ஆயுதமாக்கு என்பதை அவர்கள் பரிசோதனை செய்யும் களம் குஜராத்.

மணிப்பூர்: கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை மோதல் நிலைமைகள் தொடர்கின்றன.இரட்டை என்ஜின் பாஜக அரசாங்கம் இன அடையாள அரசியல் (ethnic identity politics) மூலமாக மக்கள் மத்தியில் இனவெறித் தீயை விசிறிவிட்டுக்கொண்டிருக்கிறது. 180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில்
2023 மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வுக்குச் சில வாரங்களுக்கு முன்புதான் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் – இரண்டாம் தர குடிமக்கள் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மணிப்பூர் மெய்திக்கள் (Meiteis), குக்கிகள் (Kukis) மற்றும் நாகாக்கள் (Nagas) என மூன்று இனக் குழுக்களைப் பிரதானமாகக் கொண்டதாகும். மெய்திக்களில் பெரும் பகுதியினர் பல்வேறு வைணவ மத மடாலயங்களுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்கள். குக்கிகளில் பெரும்பகுதியினர் கிறித்தவர்கள்.
மெய்தி-குக்கி மோதலுக்கு இன அடையாளத்தை மத அடையாளத்துடன் இணைத்து ஒருவிதமான மதவெறி சாயமும் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், குக்கிகள் வாழும் பகுதிகளில் உள்ள மலைகளில் கனிம வளங்கள் அபரிமிதமாக இருப்பதால் அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்கிற கார்ப்பரேட் நலன்களும் இந்தப் பிரச்சனையில் மறைந்திருக்கின்றன.

மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ராவின் பல பகுதிகளில் மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அகோலா, அகமதுநகர், அமராவதி, நாசிக், அவுரங்காபாத் (இப்போது சம்பாஜி நகர்), சமீபத்தில் கோலாபூர் ஆகிய இடங்களில் இவ்வாறு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுள்ளன.இந்த இடங்கள் அனைத்திலும் சிறுபான்மையினர், அவுரங்கசீப்பையும் திப்பு சுல்தானையும் துதிப்பவர்கள் எனக் கூறி, குறி வைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய ஷிண்டே-பாஜக அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, “அவுரங்கசீப்பைத் துதிப்பவர்களை சத்திரபதி சிவாஜி பிறந்த மண்ணில் சகித்துக்கொள்ள முடியாது” என்று கூறுகிறது.

பீகார்: பீகாரில் சரண் மாவட்டத்தில் ஊனமுற்ற முஸ்லிம் ஓட்டுநர் ஒருவர், 55 வயதுள்ளவர், குண்டர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் மருந்துத் தொழிற்சாலை ஒன்றிற்கு விலங்குகளின் எலும்புகளை எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.இந்தத் தொழிலை அவர் கடந்த 50 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்.

உத்தர்காண்ட்: உத்தர்காண்டில், பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஜூன் 9 அன்று, ‘புனித ஜிகாத்’ (‘love jihad’)-இற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர்காண்ட காவல்துறைக்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறார்.

இந்து அமைப்புகளின் மகாபஞ்சாயத்து முடிவின்படி, முஸ்லிம்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு ஜூன் 15க்குள் போய்விட வேண்டும் என்று எச்சரித்து, அவர்களின் கடைகளுக்கு முன் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். உத்தர்காசியிலும் இதேபோன்று முஸ்லிம்கள் தங்கள் கடைகளை மூடிவிட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் அங்கே பதற்றநிலை ஏற்பட்டிருக்கிறது.பல முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள். இந்து அமைப்புகள் விடுத்த அறைகூவலுக்கிணங்க நடைபெறவிருந்த மகா பஞ்சாயத்து நீதித்துறையின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர் அமைப்புகள் ஜூன் 18 அன்று நடத்தவிருந்த மகா பஞ்சாயத்தும் ரத்து செய்யப்பட்டது. எனினும் பதற்றம் நீடிக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலும், பல மாநிலங்களில் தேர்தல்களும் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஆர்எஸ்எஸ்/பாஜக-வினர் தங்களுடைய இந்துத்துவா வாக்கு வங்கியை ஒருங்கிணைப்பதற்காக, இத்தகைய மதவெறி நடவடிக்கைகளை, தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் மேவாட் பிராந்தியத்தில் ’நூ’ என்னுமிடத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட மதவெறி வன்முறை வெறியாட்டங்களின் விளைவாக ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். பாஜக மாநில அரசாங்கம் இந்நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாகவும், உடந்தையாகவும் இருந்திருக்கிறது.

மதப் பதற்ற நிலை அருகேயுள்ள குருகிராம் நகருக்கும் பரவியிருக்கிறது. அங்கே ஒரு மசூதி தாக்கப்பட்டு, அதன் நயிப் இமாம் (Naib Imam) கொல்லப்பட்டிருக்கிறார். தலைநகர் பிராந்தியம் மற்றும் பல இடங்களிலும் பதற்ற நிலைமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன:

ஆட்சியாளர்களின் விஷத்தைக் கக்கும் வெறுப்புப் பிரச்சாரங்களின் விளைவாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தன் அதிகாரி ஒருவரையும், மூன்று முஸ்லிம் பயணிகளையும் சுட்டுக் கொன்றிருக்கிறார். நம் சமூகத்தில் மனிதாபிமானமற்ற செயல்கள் கூர்மையாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *