Veyilin Kodumai Poetry | கவிதை வெயிலின் கொடுமை

கவிதை: வெயிலின் கொடுமை

இப்படி ஒரு
அரக்கத்தனமான
வெயிலிலும்…
பிசுபிசுத்த வியர்வையிலும்…
எங்கோ ஒரு மேகத்தில் இருக்கும் நீர்
கொஞ்சம் இளகி பூமியை
நனைக்காதா என ஏங்குகிறது மனம்

இந்த வெயிலுக்கும் எனக்கும்
நீண்ட நாள் பழக்கம் இல்லை…
உனக்கும் எனக்கும் இருக்கும்
சிறு சந்திப்பு போல குறுகியது தான்…

ஏதோ ஒரு ஓரத்தில்
என் மனதில் தொக்கி நிற்கும்
உன் நினைவுகள் போல…
இந்த வெயிலும் என்னோடு
இணைந்து கொண்டது…

ஒருவேளை வெயிலின் கொடுமையும்
உன் நினைவுகளின் கொடுமையும்
நீங்காதோ என்னவோ…

எழுதியவர்:

நா.வே.அருள் 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. Dinesh bharathi

    வெயில் கால காதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *