Haiku Maatham | Ulaga Pen Kavignargal Haiku Poems | ஹைக்கூ மாதம் | உலகப் பெண் கவிஞர்கள் ஹைக்கூ

ஆனந்தக் களிப்பு
தூண்டிலில் இருந்து விடுதலை
குளத்து மீன்

–நெல்லை அன்புடன் ஆனந்தி, அமெரிக்கா

தெருக்குழாயில் வெற்றுக்குடம்
நிரம்பி வந்தன
அடை மழை

–செ.கலைவாணி, ஆஸ்திரேலியா

மெல்ல விழுந்தது
செவ்வானம்
வீழ்ந்தது நிலவு

– நிர்மலாதேவி பன்னீர்செல்வம், மலேசியா

அலைகளின் அதிர்வில்
நடுங்கிக் கொண்டே இருக்கின்றன
கரையோர மரங்கள்

– கு.அ. தமிழ்மொழி, இங்கிலாந்து

அடங்காத ஆணவம்
அடித்தான் தடியால்
வெட்டியான்

– பிரபாவதி செந்தில், அமீரகம்

கண்ணாடியில் மேகங்கள்
நிலத்தின் மேல்
தண்ணீர்க் குட்டைகள்

– மேனகா நரேஷ், அமெரிக்கா

கறுத்த வானம்
வெளுக்கத் தொடங்கும்
உழவன் வாழ்வு

– மருத்துவர் ஜலீலா முஸம்மில், இலங்கை.

மௌனத்தின் அடர்த்தி
கலைத்து விட்டுச் செல்கிறது
குழந்தையின் பொன்சிரிப்பு

– காந்தி முருகன், மலேசியா

வெளியில் குளிர்
சட்டைக்குள் பனிக்கூட்டம்
வியர்வை

– பிர்தௌசியா, இலங்கை.

நன்றி

தொகுப்பாளர்: கன்னிக்கோவில் இராஜா
ஆசிரியர்: மழை துளிப்பா (ஹைக்கூ) வரலாற்று ஆவண இதழ்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



8 thoughts on “ஹைக்கூ மாதம்: உலகப் பெண் கவிஞர்கள் ஹைக்கூ”
  1. அருமை அருமை.. அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி இராஜா… 🌹🙏

  2. திரு. கன்னிக்கோவில் ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி! கவிஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐🙏🏻🙏🏻

  3. மௌனத்தின் அடர்த்தியை குறைத்தது குழந்தையின் சிரிப்பு….. நிதர்சனமான பார்வை….. அழகியல் ததும்பும் ஹைக்கூ வாழ்த்துக்கள் கவிகள் அனைவருக்கும்..

  4. நன்றி தோழர் கன்னிக் கோவில் ராஜா. தொடர்ந்து பெண்கள் கவி புனைந்திட தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

  5. ஹைக்கூ படைத்த அனைத்து பெண் படைப்பாளிகளுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துகள்..
    ஒருங்கிணைந்த கன்னிக்கோவில் ராஜா தோழருக்கு அன்பின் நன்றி.

  6. கன்னிக்கோயில் ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சியும், நன்றியும்.
    மற்ற எல்லா கவிதைகளும் ரசிக்கும் படியாக இருந்தது.
    அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *