samakaala sutrusuzhal savaalgal சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் பற்றி எரியும் காடுகள்

பருவ கால மாற்றங்கள்! பற்றி எரியும் காடுகள்!

 

பசுமை மேம்படும் நிலையில், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில், தொடர்ந்து மரங்கள் வளர்த்து வருவதை அரசு, தன் பல்வேறு துறைகள் மூலம் ஒரு இயக்கம் ஆக மாற்றி நம் மக்களை அதில் மிகுந்த ஈடுபாடு கொள்ளச் செய்து வருவது நாம் அறிந்ததே. எனினும் நம் நாட்டில் உள்ள பல்வேறு வகை காடுகள், தொடர்ந்து சிறப்பாக பாதுகாக்க, சட்டங்கள், வனத்துறை நடவடிக்கைகள் பின்பற்றி வரப்படுகிறது.

காடுகள்,குறைவது அல்லது அழிவை நோக்கி செல்ல, நவீன அறிவியல் வளர்ச்சி, இடப் பற்றாக்குறை,மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலை போன்ற காரணங்கள் இருப்பினும், காடுகள் இயற்கையாக அல்லது பருவ கால மாற்றம் காரணமாகவும் பற்றி எரிந்து அழியும் நிலை உருவாகுவது சற்று வேதனைக்குரிய தகவல் ஆகும்.

ஆம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையில் காடுகள் எரிந்து, மனித உயிர் இழப்புகள் ஏற்பட்ட வருந்ததக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கோடை காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இயல்பாக காடுகளில் நிகழக்கூடியது என்றாலும், உலகெங்கிலும் காடுகள் தீப்பற்றி எரிவது சமீபத்தில் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருவதற்கு காரணம், பருவ கால மாற்றங்களின் விளைவுகள் மற்றும் அதனால் உரிய காலத்தில் மழைப் பொழிவு குறைவாக இருப்பது முக்கிய காரணம் ஆகும்.

இயல்பாக கோடை காலத்தில் வெப்பம் அதிகம் ஆகி காடு, எரிதல் (FOREST FIRE) வருவது நாம் அறிந்த ஒன்றுதான் அல்லவா!? கடந்த காலத்தில் இந்தியாவில்  நவம்பர் 2020 முதல் ஜூன் 2021 வரை 52785 தீ பற்றுதல் சம்பவங்கள், வறண்ட இலையுதிர் காடுகள் சந்தித்துள்ளன.. பசுமை மாறா காடுகள், மாண்டேன் காடு, டெம்பரேட் காடுகளில் இந்த பிரச்சினைகள் குறைவாக உள்ளன. இவற்றில் 4% இயல்பாக தானே தீ உருவாக்குவது,54%காட்டு பகுதியில் மிக அரிதாகவும்,7% அடிக்கடி தீ பற்றுதல், 2.40% தீவிரமான விபத்து, 6%அதிகம் நிகழ்வு, மற்றும் 35% முற்றிலும் தீ எரிப்பு இல்லாத பகுதி என கணக்கிட்டு உள்ளனர்.

எனினும் தீ  காடுகளில் பருவ கால மாற்றத்தின் காரணத்தில் இந்திய இமாலய காடுகளில், குறிப்பாக வறண்ட காடுகளில், மழை குறைவினால் தீ பற்றும் நிலை உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டின் நிலை விட இந்த ஆண்டு சற்று கூடுதல் நிகழ்வுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ,7மடங்கு அதிகம் (2050)இருக்கிறது.2022 ஆம் ஆண்டு,296 தீ விபத்து சம்பவங்கள்  இருந்த நிலை மாறி வருகிறது எனில் இது சற்று உற்று நோக்கி கவனம் கொள்ள வேண்டிய நேரம் ஆகும். குறிப்பாக கிண்ணவூர், மணாலி, குலு, சம்பா, ஷாமலா இமாலய மாவட்டங்களில் கிட்டதட்ட 1000ஏக்கர் வன பகுதி எரிப்பு ஏற்பட்ட நிலை வருத்தம் தருகிறது. உத்ராகண்ட், ஆந்திர பிரதேஷ், ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் முறையே 2 மற்றும் 3,4 சம்பவங்கள் மட்டும் கண்டபோது இமாலய காடுகள், நிலைமோசம் ஆகும். இதனால் ஏற்படும்

பொருளாதார இழப்பு 10 கோடி ரூபாய் முதல் 177 கோடி வரை இருப்பது அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தி ஆகும். 2026 காட்டு பிரிவுகள் (Beats )  அங்கு உள்ளது. அவற்றில் 339 பகுதிகள் மிக எளிதில் தீ பற்றி எரியும் பகுதிகள்,667 பிரிவுகளில் ஓரளவு பற்றும் நிலை, மற்ற 1020 பிரிவுகள் பாதி வாய்ப்புகள் மட்டும் உள்ளதாக தெரிகிறது.இமாலய வன ஆய்வு நிலையம் (HFRI) உயிரின வேற்றுமை, மண் ஆய்வு விஞ்ஞானி ஒருவர் கருத்துப் படி மிகக் குறைவான மழை மட்டும் தான்  இத்தகைய தீ காடுகளில் பரவ முக்கிய காரணம் ஆகும்.

ஸ்காட்லாண்ட் நாட்டிலும், மலைப்பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் வரை உள்ள காலத்தில்,சதுப்பு, சேற்று நிலங்களில் (PEAT LAND) அடிக்கடி தீ பற்றி எரிவது  சமீப காலம் ஆக பதிவுகள், காணப்படுகிறது.ஐரோப்பா நாடுகளில் இவ்வாறு பருவ கால மாற்றம் காரணம் ஆக காடுகள் தீ பிடித்து எரிவது தொடர்ந்து நடை பெறுகிற தகவல்கள் மேலும் வேதனை கொள்ளும் நிலை ஆகும். தீ பற்றி காடுகள் எரிந்து, பின் அதனால், வெப்பம் ஆங்காங்கே உயர்வு பெறுவது, மதிப்புமிக்க வன வளம் அழிவது கவலைக்குரிய செய்தி ஆகும்.

எரித்தல் என்பது நம் நாட்டு மக்களின் இயல்பானஒரு நடத்தை ஆகிவிட்டது. ஒரு பொருள், மனிதர், மற்றும் எதிர்ப்பு எல்லாவற்றிலும் எரிக்க நாம் எப்போதும் தயங்குவதே இல்லை. அத்தகைய எரிப்பு குப்பை, வேண்டா பொருட்கள்,ஆன்மீக செயல்பாடுகள் என வாழ்வில் ஒரு பிரிவு என்பதாக ஆகிவிட்டது. அது பசுமை பரப்புகளிலும் பரவும்  கலாசாரம் மலைகிராமங்களில் கைவிடப்படுவது நன்று. அதற்கு உரிய விழிப்புணர்வு வனத்துறை, தன் ஆர்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். தீ என்ற காடுகள் அழிய காரணமாக உள்ள காரணியின் ஆபத்து முழுமையாக, மக்கள் புரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

மலைப்பகுதி, வன கிராம மக்கள் புகை பிடிக்கும் வழக்கம் கொண்டு இருப்பது இயல்பு, எனவே பணி புரியும் தோட்டம், அருகில் உள்ள காடுகள் அவற்றில் தீ விபத்து எற்பட அதிக வாய்ப்புகள் அதனால் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனும் உணர்வு பூர்வமாக இந்த பிரச்சனை பற்றி அறிய வேண்டும். பருவ கால மாற்றம் காரணம் ஆக காடுகளில் நம் நாட்டில் தீ விபத்து சம்பவங்கள் தொடர்ந்து வருவது, ஒரு புறம் இருப்பினும், உலகம் எங்கும் இந்த மாதிரியான நிலைகள் இருப்பது, நாம் சுற்று சூழல் பாதுகாப்பு மீது மேலும், மேலும் அக்கறை கொண்டு செயல் பட வேண்டியதை நாம் உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வோம்.

இதில், உள்ளூர் பகுதியில் நாடு முழுவதும், விழிப்புணர்வு செயல்பாட்டு கல்வியினை பள்ளி, கல்லூரிகளில் மேற்கொள்ள அரசு முடிவு எடுக்க வேண்டும். பருவ கால மாற்றம் அதனால் ஏற்படும் விளைவு, எதிர் காலத்தில் தீவிரமாக இருக்கும் என்று  இயற்கை விஞ்ஞானிகள் கூறி வரும் போது நாம் சற்று சிந்திப்போம்!




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *