சமூக வலைதளப் படைப்பாளராக ஓர் அரசியல் கட்சி - நீலகண்டன் ஆர்.எஸ் (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்) | தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி | www.bookday.in

சமூக வலைதளப் படைப்பாளராக ஓர் அரசியல் கட்சி – நீலகண்டன் ஆர்.எஸ் (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்)

சமூக வலைதளப் படைப்பாளராக ஓர் அரசியல் கட்சி ஆங்கில மூலம்: நீலகண்டன் ஆர்.எஸ் தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்   தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் (த.வெ.க-வின்) வெற்றி, சமூக வலைதளங்களின் படைப்பாற்றல் உள்ளடக்கத்தால் ஏற்பட்ட அரசின் எழுச்சியையும், பகுத்தறிவின் மரணத்தையும் குறிக்கிறது. 2026…
மின் புத்தகம்:- தமிழக சட்டமன்றத் தேர்தல்: சித்தாந்தப் போரும் சமகாலச் சவால்களும் - என்.குணசேகரன் | Tamil Nadu Assembly Election 2026: Ideological Warfare and Contemporary Challenges - www.bookday.in

மின் புத்தகம்:- தமிழக சட்டமன்றத் தேர்தல்: சித்தாந்தப் போரும் சமகாலச் சவால்களும் | – என்.குணசேகரன்

மின் புத்தகம்:- தமிழக சட்டமன்றத் தேர்தல்: சித்தாந்தப் போரும் சமகாலச் சவால்களும் - என்.குணசேகரன் இந்த நூல் வெறுமனே ஒரு தேர்தல் போட்டியைப் பற்றியது அல்ல; மாறாக, தமிழகம் நீண்டகாலமாகப் பாதுகாத்து வரும் மதச்சார்பின்மை, சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகிய…
என்.குணசேகரன் எழுதிய "ஏழையின் வீடு கனவு நிறைவேறாவிட்டால் அரசின் பொருளாதாரக் கனவு நிறைவேறாது" கட்டுரை - Dream of Housing | www.bookday.in

ஏழையின் வீடு கனவு நிறைவேறாவிட்டால் அரசின் பொருளாதாரக் கனவு நிறைவேறாது..! – என்.குணசேகரன்

ஏழையின் வீடு கனவு நிறைவேறாவிட்டால் அரசின் பொருளாதாரக் கனவு நிறைவேறாது..! - என்.குணசேகரன் சென்னையில் டிசம்பர் 16-ஆம் தேதி குடியிருப்பு உரிமை,வாழ்விடக் கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் இயக்கம் நடைபெற்றது. சென்னையில் மூன்றில் ஒரு வீட்டிற்கு பட்டா இல்லை. வீடு இல்லாதவர்கள் பிரச்சனை…
சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் - ஜி.ராமகிருஷ்ணன்

சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் – ஜி.ராமகிருஷ்ணன்

சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் - ஜி.ராமகிருஷ்ணன் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற…
பழைய பஞ்சாங்கம் – 8: ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி  – ராமச்சந்திர வைத்தியநாத்

பழைய பஞ்சாங்கம் – 8: ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி – ராமச்சந்திர வைத்தியநாத்

ரூபாய்க்கு இரண்டரை பட்டணம் படி  பழைய பஞ்சாங்கம் - 8 - ராமச்சந்திர வைத்தியநாத் அவர்கள் சொன்னபடி கிடைக்கிறது/ ரூபாய்க்கு மூணு படி / தவிடு சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறுபத்திரிகையொன்றில் வெளியான கவிதை இது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை பகடி…
தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை - 2025 | Tamil Nadu State Education Policy 2025 Book PDF | Tamil Nadu State Education Policy

தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை – 2025

தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை - 2025 புதிய பார்வையில் கல்வி: உள்ளடங்கிய, சமத்துவ மற்றும் எதிர்கால ஆயத்தம்   Current status, environment, and vision of school education in Tamil Nadu (தமிழ்நாடு பள்ளிக்கல்வியின் தற்போதைய நிலை,…
தூத்துக்குடியில் 5 - வது புத்தக திருவிழா தொடக்கம் - 5th Book Festival in Tuticorin - Kanimozhi Karunanidhi - bookday - https://bookday.in/

தூத்துக்குடியில் 5 – வது புத்தக திருவிழா தொடக்கம்

தூத்துக்குடியில் 5 - வது புத்தக திருவிழா தொடக்கம் தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா - 2024, தூத்துக்குடி சங்கர பேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் 5ஆவது புத்தகத் திருவிழாவை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். திமுக…
நூல் அறிமுகம் : மாத்தி யோசி வெற்றி நிச்சயம் – குழந்தை அருள்

நூல் அறிமுகம் : மாத்தி யோசி வெற்றி நிச்சயம் – குழந்தை அருள்


பக்கங்கள் 104
விலை ₹100
ஹரணி பதிப்பகம்
சென்னை 600 012
15 கட்டுரைகளைக் கொண்ட இரா. குழந்தை அருள் எழுதிய தன்னம்பிக்கை தரும் நூல் “மாத்தி யோசி வெற்றி நிச்சயம்”
பதினைந்து கட்டுரைகளிலுமே ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதற்கேற்ற கதையைச் சொல்லி நம்பிக்கையூட்டும் உத்தியைக் கையாண்டுள்ளார் நூலாசிரியர்.
முதல் கட்டுரையில் உற்ற நண்பனிடம் தனது மாணிக்கக் கல்லை நம்பிக்கையாகக் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றவன் திரும்பி வந்து மாணிக்கக் கல்லைத் திரும்பக் கேட்டபோது ஏற்கெனவே தாம்  நண்பனிடம் தந்துவிட்டதாக பொய்யுரைத்ததோடு அதை மெய்ப்பிக்க பொய் சாட்சிகளைக் கட்டமைக்கிறான். வழக்கு மரியாதை ராமனிடம் செல்ல அவன் மாத்தி யோசித்து சாதுர்யமாக உண்மையை வரவழைப்பதைக் கதையாகக் கூறி மாத்தி யோசிக்கும் உத்தியை அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர்.
1971ல் இந்திரா காந்தி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தவுடன் சர்வாதிகாரப் போக்கும் எதேச்சதிகாரமும் மேவி 1975ல் அவசர நிலைப் பிரகடனத்தில் முடிந்தது. இக்காலத்தில் இவற்றை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் எத்தனையோ அடக்குமுறைகளையும் சோதனைகளையும் சந்தித்த போதும் இடையறாதுப் போராடி ஜனதா கட்சி துவங்கப்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டு நோக்கத்தை அடைய எத்தகைய இன்னல்கள் வந்தாலும் துவளாமல் துணிவுடன் எதிர்கொண்டு இலட்சியத்தை அடைய வேண்டும் என்பதைத் தமது இரண்டாவது கட்டுரையில் நிறுவுகிறார் குழந்தை அருள்.
வழக்கமாக பல எழுத்தாளர்கள் பயன்படுத்தும் தெனாலி ராமன் கதையை இவரும் விட்டுவைக்கவில்லை. துணிச்சல் மூலம் இருளடர்ந்த காட்டில் கூட வீறுநடை போட முடியும் என்பதை இளைஞனையும் ஞானியையும் வைத்துக் கூறுகிறார் நூலாசிரியர்.
சாதுர்யத்தால் எதையும் சமாளிக்க முடியும் என்பதை ஆணவம் மிக்க பண்ணையாரையும் அறிவுமிக்க இளைஞனையும் வைத்து நிறுவுகிறார் குழந்தை அருள்.
எந்த ஒரு செயலையும் அச்செயலுடன் ஒன்றிச் செய்வதன் மூலம் வெற்றி நிச்சயம் என்பதை மன்னன் மற்றும் ஓவிய ஆசிரியர் மூலம் கதையால் உணர்த்துகிறார் நூலாசிரியர்.
சகிப்புத்தன்மையும் சாமர்த்தியமும் ஒருங்கிணைந்த நிலையில் எந்தக் காரியமும் கைகூடும் என்பதை ஆசிரியர் மாணவர் மூலம் விளக்கியது சிறப்பு.
1972ஆம் ஆண்டில் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். துணிவுடன் தனிக்கட்சியைத் தொடங்கி இறுதிவரை வெற்றி அடைந்ததையம்  எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஹிலாரி ஏறி உலக சாதனை படைத்ததையும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு நம்பிக்கை நங்கூரம் பாய்ச்சியுள்ளார் நூலாசிரியர்.
முதல் நோபல் பரிசு பெற்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற இரவீந்திரநாத் தாகூரைப் பெரிதாக இந்தியா அப்போது கொண்டாடவில்லை. மேலும் அற்பக் காரணங்களைக் கூறி ஏகடியம் செய்தனர் பலர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ‘பலமாகத் தட்டுபவன் மட்டும்தான் கதவு திறந்தே கிடப்பதை அறிவான்’ என்று உறுதியாக தாகூர் சொன்னது பலர் அறியாத செய்தி. இந்தத் தகவல் ஒரு கட்டுரையில் காணக் கிடக்கிறது.
மாணவர்களைக் கனவு காணச் சொன்ன அப்துல் கலாம் கூறிய நடைமுறைக்கேற்ற கனவுகளைப் பேசுகிறது ஒரு கட்டுரை.
சமயோசித அறிவைப் பயன்படுத்தி அண்ணா, கலைஞர், டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோர் எப்படியெல்லாம் எதிர்கொண்டார்கள் என்பதை விளக்கி சாதுர்யங்களும் சாமர்த்தியங்களும் எந்த நேரமும் கைகொடுக்கும் என்று நிறுவுகிறார் குழந்தை அருள்.
அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பதவியேற்க வரும் வழியில் சேற்றில் சிக்கிய பன்றியைக் காப்பாற்றிவிட்டுத் தாமதமாக செனட் சபை கூட்டத்துக்கு வந்ததைக் காட்சிப்படுத்தி இத்தகைய மனித நேயமும் வெற்றிக்குதவும் என்கிறார் நூலாசிரியர்.
உயர்வு மனப்பான்மை மற்றும் தாழ்வு மனப்பான்மை விரவிக் கிடக்கும் நிலையில் இரண்டுமே தவறென்பதை ஜென்கதை மற்றும் முயல் ஆமை கதை மூலம் நிறுவுகிறார் நூலாசிரியர்.
எந்தச் செயலாக இருந்தாலும்  திட்டமிடுதல் மிக முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. சரியான திட்டமிடல் மட்டுமே ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என இறுதிக் கட்டுரையில் விளக்குகிறார் குழந்தை அருள்.
மொத்தத்தில் பாவம், புண்ணியம், விதி என்றெல்லாம் சொல்லி சிக்கவைக்காமல் நம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற பல்வேறு உத்திகளையும் அவ்வுத்திகளைக் கையாள்வதற்கான வழிகளையும் விளக்கியுள்ள இந்நூல் இளைஞர்கள் படிக்க வேண்டிய நூல் எனின் மிகையன்று.
 பெரணமல்லூர் சேகரன்
நூல் அறிமுகம் : சுகுணா திவாகரின் திராவிட அரசியலின் எதிர்காலம் – அன்புச்செல்வன்

நூல் அறிமுகம் : சுகுணா திவாகரின் திராவிட அரசியலின் எதிர்காலம் – அன்புச்செல்வன்




இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சுகுணா திவாகர் வார்த்தைகளில் சொல்வதானால், “ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்து இறுதி யுத்தத்தின் ரத்தச்சுவடுகள் தமிழகத்திலும் தாக்கம் ஏற்படுத்திய” 2009-ல் தொடங்கி 2019 வரையிலான தமிழக அரசியல் குறிப்பாக திராவிட இயக்க நகர்வுகள் குறித்த பதிவுகளே ஆகும்.

அடிப்படைகளின் மரணம் என்ற முதல் கட்டுரை எழுதப்பட்டு இப்போது 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 13 ஆண்டுகளில் முழுதாகப் பத்தாண்டுகள் திமுக அதிகாரத்தில்/ஆட்சியில் இல்லாத காலம். இந்தக் காலகட்டத்தில் திமுக தனது தவறுகளை சுயபரிசோதனை செய்து திருத்திக் கொண்டு தனது முக்கிய கருத்தியல் ரீதியிலான கொள்கை கோட்பாடுகளை சூழலுக்கேற்ப மீளுருவாக்கம் செய்து புதிய செயல்திட்டம் வகுத்துள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வியும் திராவிட அரசியலின் எதிர்காலத்திற்கான பாட்டையுமாகும். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ல் பதவியேற்ற போது, பிற சனநாயகவாதிகளைப் போலவே நானும், சுயமரியாதை, சமதர்மம், சமூகநீதி குறித்த ஒரு குறைந்தபட்ச புரிதலாலான செயல்திட்டத்துடன் தனது ஆட்சியை தொடங்கியுள்ளதாகவே கருதுகிறேன். வரப்போகும் 5 ஆண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியே திராவிட அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய காலகட்டமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இன்று வரை ஊழல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறை சென்று வந்த ஜெயலலிதாவை, “இரும்புப் பெண்மணி, பன்மொழி வித்தகர், அறிவாளி, பெண்களுக்கான முன்மாதிரி(?)” என்றெல்லாம் பார்ப்பனீய ஊடகங்களும் பார்ப்பனீயத்தை உயரிய கலாச்சார பண்பாட்டு நிலையாகக் கருதிக் கொண்டிருக்கும் தமிழக இடைநிலை ஆதிக்க சாதிகளும் ஊதிப் பெருக்கியபடியே இருக்கின்றன. எம்.ஜி.ஆரில் தொடங்கிய மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஜெயலலிதா காலத்தில் அதலபாதாளத்தில் விழுந்து இபிஎஸ்_ஓபிஎஸ் காலத்தில் மீளமுடியாத நிலைக்குச் சென்றதை மறுக்க முடியாது. மாநில நலனுக்கானதாகவும், ஒன்றிய அரசுக்கு எதிரானதாகவும் ‘ஜெ’ முன்னெடுத்த சில ‘நற்காரியங்கள்’ தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் தன்முனைப்பே என்பதை புரியச் செய்கிறது ‘தந்தை’ பெரியாரும் ‘அம்மா’ ஜெயலலிதாவும் என்ற கட்டுரை.

இரண்டு கழகங்கள் என்ற கட்டுரை திமுக, அதிமுக செயல்பாடுகளை நுட்பமாக ஒப்பிடுகிறது. ‘குடும்ப/வாரிசு அரசியல்’ – தமிழகத்தில் கருணாநிதி தொடங்கி வைத்த பெருங்கேடு- இப்போது கட்சி பாகுபாடின்றி பல கட்சிகளில் தொடர்வது கழகங்கள் ஏற்படுத்திய அவல விளைவுகளில் ஒன்று. எவ்வித அரசியல் பார்வையுமற்ற குடும்ப வாரிசுகள் (உதயநிதி, துரை வைகோ போன்றோர் – ஏன் குடும்ப அரசியலை விமர்சனம் செய்து வரும் நாதக சீமான் கூட வேட்பாளர்களில் தனது குடும்ப உறவினர்களை நிறுத்தியது உள்ளிட்ட பல காட்டுகள் உண்டு) தேர்தல் அரசியல் களத்தில் முன்னிருத்தப்படுகின்றனர்.

அரசியல் பிடிவாதங்கள் அபாயமானவை என்ற கட்டுரை, ரவிக்குமாரின் பார்ப்பனல்லாதோரின் அரசியலை எதிர்க்க வேண்டும் என்ற எதார்த்தத்தை கணக்கில் கொள்ளாத வறட்டு பிடிவாதத்தையும், கி.வீரமணியின் ஆரிய திராவிடப் போராட்டம் என்ற பெயரில் சசிகலாவை ஆதரித்த ‘வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக்கொள்ளாத’ வறட்டு வாதத்தையும் உடைத்துப் போடுகிறது. பெரியாரை மதத்தலைவராக்கும் வேலையை திகவினரே மேற்கொள்ளத் தொடங்கி நாட்கள் பலவாகிவிட்டன. வரலாற்றுப் பார்வையின் அவசியத்தை சுட்டிச் செல்கிறது இக்கட்டுரை.

அணிகளாய் சிதறிய அதிமுக என்ற கட்டுரை, கொள்கையாலன்றி தனிமனித முரண்பாட்டால் உருவான அதிமுக, தனிநபர் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு இப்போது சுயநலத்தால் அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அவலத்தை எடுத்துரைக்கிறது. ஆனாலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இப்போதும் நீடிப்பதும் நிலைத்திருப்பதும் எம்ஜிஆர் என்ற தனிநபர் முன்னெடுத்த பாமர அரசியலின் எச்சமாகக் கூட இருக்கலாம்.

எம்ஜிஆர் நூற்றாண்டு தொடர்பான கட்டுரை அவரின் ஆளுமையை விமர்சன நோக்கில் அணுகுகிறது. தமிழக அரசியலிலும் வெகுசன சினிமாவிலும் எம்ஜிஆர் என்ற விந்தை நிகழ்வை அவ்வளவு எளிதாகத் தவிர்த்துவிட முடியாது.

“திராவிட” கலைஞர் ஏன் இந்தியாவுக்குத் தேவை என்ற கட்டுரை அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளில் முக்கியமான ஒன்று.

திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்று இன்னும் உருவாகவில்லை அல்லது அதற்கான வரலாற்றுத் தேவை இன்னும் எழவில்லை என்ற நிதர்சனத்தை நடப்பு அரசியல் நிகழ்வுகள் மூலம் கூறிச் செல்கிறது ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று தேவையில்லையா’ என்ற கட்டுரை.

இத்தொகுப்பின் கடைசி இரு கட்டுரைகள் – “திராவிட அரசியலின் எதிர்காலம்” மற்றும் “மீண்டெழும் திராவிட அரசியல்” ஆகியன திராவிட அரசியல் போக்கு குறித்த நுட்பமான பார்வைகளையும் முக்கியமான கேள்விகளையும் முன்வைக்கின்றன. பெரியார் சொன்ன இன அடிப்படையிலான “திராவிடர்” இயக்கத்துக்கும் அண்ணா, கலைஞர் முன்னெடுத்த நில எல்லை அடிப்படையிலான “திராவிட” முன்னேற்ற கழகத்துக்கும் இடையிலான நுட்பமான வேறுபாடு, திராவிட இயக்கங்கள்/ஆட்சிகள் மூலம் தமிழகத்திற்கும் இந்திய ஒன்றியத்துக்கும் ஏற்பட்ட அனுகூலங்கள், பாரிய மாற்றங்கள் பற்றிப் பேசும்போதே “தனி நபர் வழிபாடு”, “குடும்ப/வாரிசு அரசியல்”, “ஊழல்”, “ஆணாதிக்க மய்ய அரசியல்” போன்ற அவலங்களையும் சேர்த்தே நூலாசிரியர் பேசுகிறார். இந்துத்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்டு அடையாளங்களை அழித்து ஒற்றைத்துவ ‘ஒரே தேசம் ஒரே வரி ஒரே மதம் ஒரே கல்விமுறை, ஒரே கலாச்சாரம்/பண்பாடு” என்ற வகைமாதிரியை பாஜக – சங் பரிவார அடிப்படைவாத சக்திகள் கட்டி எழுப்பி வரும் தற்கால சூழலில் , இந்திய ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ‘பன்மைத்துவத்தை’ முன்வைக்கும் ‘திராவிட அரசியலின்’ பங்கு முக்கியமாகிறது என்பதை பிரதி தெளிவுற எடுத்துரைக்கிறது. பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஆதிக்க சாதிகளின் அதிகார மய்ய அரசியலாக “திராவிட அரசியலின்” போக்கு மாறிவிட்டதையும் சுயபரிசோதனை செய்ய வேண்டியது வரலாற்றின் தேவை என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இந்நூல் வெளிவந்த பின்பு, 2021-ல் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஓராண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையில், தற்போதைய சூழலில் திராவிட அரசியலின் போக்கும் நோக்கும் குறித்த கட்டுரையை சுகுணா திவாகர் எழுதவேண்டும் என்ற விருப்பம் இந்நூலை வாசித்து முடித்ததும் தோன்றுகிறது.

“செய்வீர்களா…சுகுணா…நீங்கள் செய்வீர்களா…?”

– அன்புச்செல்வன்

நூல் : திராவிட அரசியலின் எதிர்காலம்
ஆசிரியர் : சுகுணா திவாகர்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ₹90
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
642 002.
தொடர்பு எண் : 99425 11302