Take 3 Shortstory By Karkavi டேக் 3 சிறுகதை - கார்கவி




ரொம்ப பரபரப்பான சூட்டிங் ஸ்பாட்…ஒரு பக்கம் ரிகர்சல்….இன்னொரு பக்கம் சண்ட காட்சினு ரொம்ப பரபரப்பா போய்கிட்டிருக்கு சூட்டிங் பன்ற இடம்….

கேரவன்ல மேக்கப்ல ஹீரோயின் ..இன்னொரு கேரவன்ல ஹீரொனு மேக்கப் ரொம்ப வேகமாக நடந்துகிட்டு இருக்கு…

புரொடக்சன் ரூல்ஸ் படி இடம் சாப்பாடுனு தடபுடல ஒரு படம் ரெடியாகிட்டு இருக்கு…..

அன்னைக்கு காலைல பத்து மணி இருக்கும்…நேத்து நடந்த அந்த சுவாரஸ்யமான குடும்ப சுசிவேசன முனுமுனுத்துகிட்டே வரா கூட்டத்துல ஒருவளா நடிக்கிற ராக்கம்மா…..

நாளைக்கு நடிக்கபோற ஒரு சண்டக் காட்சிக்காக மீச, தாடிய நல்லா சைஸ் பன்னி இந்தமாறி இருந்தா நல்லாருக்கும், அந்தமாறி இருந்தா நல்லார்க்கும்னு…ராக்கம்மா கிட்ட புலம்பிகிட்டே வரான் ராமசாமி…..

அந்த ஸ்டியோவ நெருங்குற நேரத்துல ” என்னக்கா சாப்டாச்சா முன்னடியே வன்டீங்கலா…அண்ண என்ன அந்தரத்துல பறந்துகிட்டே வராரு… என்று கேட்டான் கார்த்தி…..

ஆமா தம்பி அந்த ஆளுக்கு என்ன வேள எப்ப பாத்தாலும் அடிதடினு ஸடன்ட் பத்திதான் நனப்பு….தூக்கத்துல பொலம்பல் தாங்கல பா கார்த்தி…..னு ராக்கம்மா சொன்னாள்….இத கேட்டுகிட்டு சிரிச்சிகிட்டே ஸ்டுடியோக்குள்ள நுழஞ்சா கார்த்தி……

கார்த்தி ஒரு முதுகலை படித்த இளைஞன் கிராமத்துல இருந்து சென்னைக்கு டைரக்டர் ஆகுற கனவோட வந்த பல்லாயிரம் பேருல அவனும் ஒருத்தன்…

அப்டி இப்டினு கஸ்டப்பட்டு ஒரு படத்துல அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்குற வாய்ப்பு இப்பதான் கிடச்சிருக்கு அவனுக்கு……..

அதுக்காக அவன் பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சம் இல்ல ரொம்ப அதிகம்,….பத்துக்கு பத்து ரூம்ல…நாலுபேருகூட தங்கிகிட்டு நாத்தம் புடிச்ச கக்கூசுலயும் நாலாவது ஆளா வரிசைல நின்னு வாடக கொடுக்க அவ்ளோ சிரமப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கான் கார்த்தி…..

கார்த்தி முதல் முதலா எழுதுன கதை “டேக் இட் ஈசி” அப்டிங்ர டைட்டில் ல சார்ட் பிலிம் ஆ எடுத்தான்… அவன் அத பெருசாக்கனும் னு ஆசப்பட்டு… இதுவரை கத எழுதிகிட்டு இருக்கான்…..

ஒருநாள் ரொம்ப ஆர்வமா கதைய முழுசா எழுதி முடிச்சிடுவோம்னு எழுத உட்காரும் பொழுது…. ஒரு போனு….”அலோ…அம்மா…யப்பா அப்புனு எப்படிப்பா இருக்க, சாப்டியா …கூட எல்லாரும் எப்டிப்பா இருக்காங்கனு ஒரு சோர்ந்து போன அவன் அம்மாவோட குரல்…..நல்லார்க்கேன் மா அப்டினு அதுக்கு ஈடு கொடுத்த இவனோட குரலு… சரிப்பா பத்ரமா இரு….எங்க போனாலும்…. சூதானமா இருப்பானு சொன்ன அவன் அம்மாவோட போன்கால் முடிவுல தன்னயறியாம கண்ணுல தண்ணி கலங்க ஆரம்பிச்சது……

வாசல் ல ”டக் டக்.””..கதவ தட்டுற சத்தம் ..யாருங்க னு கேட்டான் கார்த்தி…. வெளில “நாங்கதாம் பா…ராமசாமி ராக்கம்மா…….” இதோ வரேன்கா’..னு போய் கதவ திறந்தான் கார்த்தி….

வாங்க கா…வானே இப்பதான் இடம் தெரிஞ்சதா னு இவன் கேட்க….இல்லப்பா டைம் இல்ல ..இல்லனா அடிக்கடி வருவோம்…இன்னைக்கு என் பையனுக்கு நினைவு நாள் ல அதான் அவனுக்கு எடுத்த உடுப்பு உனக்கு கொடுக்கலாமே னு வந்தோம்….வாங்கிகுவீல பா….”அண்ணே…அம்மா அப்பாவ சொந்த ஊர்ல விட்டு இங்க கடக்குற நா…என்ன பையனா நனைக்கிறீங்க நீங்க…இத ஏத்துக்கலனா நல்லாவா இருக்கும்…..முதல வாங்கனா உள்ள….உட்காருங்க….இருங்க காபி போடுற…… அதுக்கு ராக்கம்மா…இரு தம்பி நா போடுறன் நீங்க பேசுங்க னு அந்த மூலைல இருக்குற ஸடவ் அடிக்க ஆரம்பிச்சா……..

அப்ரம் அண்ணே…. திதி நல்லபடியா முடிஞ்சதா…எதும் மனசுல யோசிக்காம தைரியமா இருங்க..எல்லாம் சரியாகிடும்… அப்டினு ராமசாமிக்கும் ராக்கம்மாவுக்கும் தைரியம் சொல்ல…… அந்த பேச்சிலயே….

என்ன தம்பி ரொம்ப சோர்ந்து இருக்க…எதும் பிரச்சனையா.. இன்னைக்கு சூட்டிங் போலயா….னு ராமசாமி கேட்டான்….

இல்லன… இன்னைக்கு ஹீரோ கால்சீட் முடிஞ்சது அது சம்மந்தமா டைரக்டர், புருடியுசர் போயிருக்காங்க அதனால் இன்னைக்கு இல்ல… அதா கதை ஒன்னு முடிக்கலாமேனு இருக்க….. அம்மா போன் பன்னாங்க பேசிகிட்டு இருந்த.. அப்பதான் நீங்களும் வந்தீங்க……

ஓ இதுதான் விசயமா…… சரிசரி அம்மா என்ன சொன்னாங்க… நல்லார்காங்கலா…அப்டினு ராமசாமி சொல்லும் போது….ம் பரவாலனா….அவங்க பேச்சுல கஸ்டம் தெரிஞ்சது…என் கஸ்டத்த காட்டிக்காம அப்டியே பேசிட்டு வச சிட்டனா……னு கார்த்தி சொன்னான்….

ஏன்பா இவ்ளோ விரக்தியா பேசுற…

ஆமானா…கதை எழுதி, காமிச்சி..நாய் மாறி உழச்சு…அவன்கிட்ட திட்டு, இவன்கிட்ட திட்டு…அப்டினு எவ்ளோ கஸ்டமா இருக்குனா….சில நேரம் லைட் மேன் இல்லனா அதயும் நானே செய்வன்..ராமன்னா……

எல்லாத்தையும் ரெடி பன்னி டேக் போறதுகுள்ள போதும் போதும் னு ஆகிடும்னா….உங்களுக்கு தெரியாததா…னு பேச்ச முடிச்சான் கார்த்தி….

இடையில்….”சரிசரி இந்த காபிய குடிச்சிட்டு அப்ரம் பேசுங்கனு நுழைஞ்சா ராக்கம்மா…..

“யப்பா கார்த்தி நீ இந்த வயசுல அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்கும் போதே இவ்ளோ யோசிக்கிற….” நான் இங்க வந்து கிட்ட தட்ட முப்பது வருசமாச்சு….

வீட்டு கஸ்டத்துக்கு இந்த ஸ்டுடியோல கூட்டுற வேலைக்கு வந்த…நடிக்கிறதலாம் பாக்கும் போது எனக்கும் ஆச வரும்….இதோ இந்த ஆளு அப்ப ஸ்டன்ட் ல அந்த மாஸ்டர்களுக்கு எடுபுடியா வேல பாத்தாரு…..நா வர போக…என் சாப்பாடு இவரு சாப்ட…அப்ரம் நாங்க பேசி பழகி… ஒருநாள் கல்யாணம் பண்ணிகிட்டோம்… வீட்டுல ஏத்துக்கல அதனால இங்கயே காலத்த ஓட்ட ஆரம்பிச்சிட்டோம்…..கண்ணுக்கு கண்ணா இருந்த மவனும்…இந்த ஆளு ஸடன்டுக்கு இழுத்து அவன் இல்லாம போயிட்டான்……

ஒரு நாள் கிரௌடுல ஆள் இல்லனு என்ன கூப்டாங்க….அதுல டையலாக் சொல்ர பொன்னுக்கு டையலாக் வரல….ஒரு ஆர்வத்துல நான் அத சொல்லிட்ட…உடனே உன்னமாறி டைரக்டரு…”யம்மா நீ சொல்ரியாமா…இத…நீ சொல்லுனு சொன்னாரு……சரிங் க ஐயா னு நானும் சொன்ன…அதில் இருந்து அட்மாஸ்பியர் ஆக்டர்ஸ்ல நா நல்லா எல்லார்க்கும் தெரயுறபடி ஆகிட்ட…..ஏ இப்ப உன் படத்துல நடிக்கிறனே…உனக்கு தெரியாதா…..னு ராக்கம்மா இழுத்தா…….

அதுக்கு இடையிலயே ராமசாமி பேச ஆரம்பிச்சான்…..

ஆமா தம்பி…நான்லாம் உடம்பாலயும் மனசாலயும் படாத கஸ்டமே இல்லபா….. கனவோட ஊர்ல இருந்து வந்து எடுபுடியா இருக்குறது எவ்ளோ சிரம்ம்…அதில் அவ்ளோ மன உளைச்சல் இருக்கு….

ரொம்ப மட்டமா நடத்துவாங்க…அப்டி இருக்கும் போது…ஒரு ஸடன்ட் சூட்டிங்கல ஹீரோக்கு கைல அடி….அதுல நெருப்புல குதிக்குற சீன்…எல்லாரும் தயங்குனாங்க….ஆனா நா உயிர் போனா போகுது ஒருமுறை யாவது நடிச்சிடனும் னு…நா பன்ற சார் னு முன்ன போய் நின்ன….அதயும் செஞ்ச…..”இதோ இந்த தழும்பு” பாத்யா….இது அன்னைக்கு பட்டது தான்……

“கார்த்தி வாழ்க்கைல எல்லாமே ஒரே நாள்ல கிடைச்சிடாது…கஸ்டபடனும்….என்னடா அட்வைஸ் பன்றானே னு கோச்சிக்காத…நீ படிச்சவன் புரியும்…..ஒரு விசயம் தள்ளி போகுது அப்டினா அதவிட பெருசாவோ…இல்லனா இன்னும் ரொம்ப நல்லா நடக்க போகுதுனு நாம நம்பனும்…….

நம்மள பொறுத்த வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டேக்….ஆரம்பிச்சிடனும் என்னைக்காது ஒரு நாள் டேக் கட்டாயமா பைனல் ஆகும்…

ஒவ்வொரு டேக்லயும் யாரோ ஒருத்தர் சரியா நடிக்காம போகுறதால தப்பு வருமே தவிர…உன் கதைல எந்த மாற்றமும் வராது….அதனால…விடாம முயற்சி செய்….நீயும் தனியா படம் எடுக்குற நாள் ரொம்ப தூரமில்ல….சரியா……

தைரியாம இரு….நாங்க களம்பிறோம்….சாப்டு உன்னோட திறமைல நம்பிக்க வை….கட்டாயம் எல்லாம் மாறும் னு…சொல்லிட்டு கார்த்தி வீட்டுல நம்பிக்கைய முழுசா நிரப்பிட்டு…களம்புனாங்க ராமசாமியும் ராக்கம்மாவும்……

அந்த புத்துணர்வோட… கதைய வேற ஒரு கோணத்துல மாத்தி எழுத ஆரம்பிச்சா கார்த்தி…..

மனசுக்குள்ள…..”…டேக்-1……டேக்.-2…….டேக்-3….னு அவன் குரல்ல ஸடார்ட்….ரெடி….ஆக்‌ஷன்.. அப்டினு…சத்தம்…, அது…டேக் பாக்ஸ்ல…’டேக் இட் ஈசி…….னு எழுதியிருந்தது…….கார்த்தி எழுதின கதையோட முடிவுல…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *