ஹைக்கூ கவிதைகள் – தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம் 

•பறக்கும் கற்கள்
தெருமுனையில்
இரத்தம் சிந்தும் நாய்…

•பிரகாசிக்கும் வெளிச்சம்
விழுந்து கருகிய
விட்டில் பூச்சி…

•வெள்ளை சுவர்
வண்ணமடிக்கும்
வழிகாட்டி

•விதை விதைத்தவன்
பயிர் அறுக்கவில்லை
கருகிய பயிர்கள்.‌‌..

•கருணை மேலிட்டு
கண்ணீர் சிந்தும்
கருமேகம்