44-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, புத்தக வாசிப்பை மையப்படுத்தி சென்னையின் சில பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளை முன்னெடுத்தது. அகரம் கலைக் குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

May be an image of one or more people, people standing, tree and outdoors

தென்னிந்திய அளவில் மிகப்பெரிய மக்கள் கூடுகை சென்னை புத்தகக் காட்சி. வாசகர்களின் ஆதரவு பெருகிவந்தாலும், புத்தக வாசிப்பு என்பது அருகி வருகின்றது. இணையம் மற்றும் காட்சி ஊடகங்கள் வளர்ச்சி புத்தக வாசிப்பை பாதித்திருக்கிறது. புத்தக வாசிப்பில் முன்னோடி மாநிலம் என தமிழ் வாசகர்கள் அறியப்பட்டாலும், இன்னொரு புறம் தனக்கான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்கும் விழிப்புணர்வு பலரிடம் இல்லை, அதன் வெளிப்பாடு தான் வாங்க வேண்டிய புத்தக பரிந்துரைகளை நண்பர்களிடம் கேட்டும் புத்தகங்களில் விரும்பியும் படித்து தெரிந்து கொள்கிறார்கள்.

May be an image of one or more people, people sitting, people standing, tree and outdoors

44-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, புத்தக வாசிப்பை மையப்படுத்தியும், வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் ‘தெரு வாசி’ என்ற முழக்கத்துடன் ஒரு வீதி நாடக நிகழ்வை பபாசி – அகரம் கலைக் குழுவினருடன் முன்னெடுத்தது. வீதி நாடக பயிற்றுநர், பேராசிரியர் ஆர். காளீஸ்வரன் பயிற்சி அளித்தார். நகரின் பல பகுதிகளில் வீதி நாடகக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தி சிறுவர்கள் மற்றும் இளையோர் அனைவரையும் வாசிக்க சொல்லி புத்தகங்களை வழங்கினர்.

May be an image of one or more people, people standing and outdoors



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *