VinothKumar Poetry (Alangarangalil Tholaiyum Kanavugal Title of Poetry). Book day website is Branch of Bharathi Puthakalayam.



அலாரங்களில் தொலையும் கனவுகள்…
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*—*–*-*-*-*-*-*-*
அலாரம் அடித்த
பிறகு உறங்கும்
ஐந்து நிமிடம்,
சொர்க்கத்திற்கும்
நரகத்திற்குமான
சின்னஞ்சிறு
இடைவெளியாய் …

எழுதலுக்கு
பயந்து கொள்கிறேன்..

அடுத்த நாளின்
ஆயத்தங்களில்,
அணுகுண்டுகளுடன்
மல்லிகை வாசமும்..

யானையின் கருத்த
உருவத்துடன்
தொலைத்து விட்ட
ஒரு மழைக்கனவு..

செய்து முடித்தவைகளின்
குறைகளும்..
செய்ய வேண்டியவற்றின்
துரத்தல்களும்..

கண்கள் மூடிக்கிடக்கும்
காலத்துளி
கலக்கத்தையும்..
கஷ்டத்தையும் கொடுத்தபடி

குறுங்கனவுகளோ
சில குறிப்புகள்
தந்த படியே..

நகரும் நொடி முள்ளை
ஆயுதமாக்கி
கண்களில்
குத்தும் கடிகாரம்..

அலாரங்களில்
தொலையும்
கனவுகள்
மாண்டவர்களைப் போல..

மீண்டும் வருவதேயில்லை…

பூக்களும்,
புன்னகைகளும்
இல்லாதவொரு
வெறும் கனவு
நாளையும்
வந்து
பாதியில்
தொலைந்து
போகலாம்…

– வினோத் பரமானந்தன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

6 thoughts on “அலாரங்களில் தொலையும் கனவுகள் – வினோத் பரமானந்தன்”
  1. அனைவரும் கடந்த அந்த ஐந்து நிமிடங்களை அழகாக கூறிவிட்டார்… வாசித்த அந்த நொடி மீண்டும் மீண்டு வராத அந்த கனவுகள் ஒவ்வொருவர் மனதிலும் எழும்…. அருமை…

  2. என் கவிதை வெளியானதில் பெரும் மகிழ்ச்சி…

  3. அனைவரும் கடந்த அந்த ஐந்து நிமிடங்களை அழகாக கூறிவிட்டார்…. வாசித்த அந்த நொடி மீண்டும் மீண்டு வராத கனவுகள் ஒவ்வொருவர் மனதிலும் எழும்.. அருமை..

  4. அருமை அருமை
    வாழ்த்துக்கள்
    வரிகளுக்கு வார்த்தை அமைத்து வார்த்தைகளுக்கு அழகுசூட்டி எழுதுவது எப்படி என்று உன்னிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்

  5. மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா…. வாழ்த்துக்கள் 💐 உங்கள் கவிதை பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *