நாங்கள் ஆன்லைன் கல்விக்கு எதிராகவும் இணைய இடைவெளிக்கு எதிராகவும் இருக்கிறோம் – டிவி சவால் தொடங்கப்பட்ட காரணம் குறித்து இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் வி.பி.சானு

 

ஜூன் 4அன்று திரைப்பட இயக்குநர் ஆஷிக் அபு ஐந்து புதிய தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கினார். ஆனால், அவை ஐந்துமே அவருக்காக அல்ல. மாறாக, அவர் இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் விடுத்திருந்த டிவி challengeக்காக கொடுத்துவிட்டார். கேரள அரசு  ஆன்லைன் மூலம் பள்ளிகளை திறக்க முடிவு செய்த உடன், ஆளும் சிபிஐஎம் கட்சியின் முறையே மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளான இவை கேரள மக்களை நோக்கி இணைய வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்காக டிவிக்கள், மொபைல் போன்கள் மற்றும் இதர கருவிகளை கொடையாக கொடுக்க கோருகிறது.

மாநிலத்திலுள்ள எல்லா அரசு பள்ளி மாணவர்களுக்கும் தன்னுடைய kerala infrastructure technology மூலம் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க கேரள அரசு முடிவெடுத்தது. இந்த பாடங்கள் கேரள அரசின் victers சேனல் மூலமும் ஒளிபரப்பாகிறது. இதற்கு ஒரு பக்கம் பலமான வரவேற்பு இருந்தபோதும், மறுபக்கம் இன்னமும் கேரளத்தில் நிலவும் இணைய இடைவெளி (digital divide) குறித்து பலத்த எதிர்மறை விமர்சனங்களும் வரத் தொடங்கின. சாமக்ர சிக்‌ஷா அபியான் எடுத்த ஒரு ஆய்வின் மூலம் சுமார் 2.61 இலட்சம் கேரள மாணவர்களுக்கு இணைய வசதியோ அல்லது தொலைக்காட்சி வசதியோ இல்லை என தெரிய வந்தது.

Online Learning Should Return to a Supporting Role - The New York ...

“டிவி சேலன்ஜ் பிரச்சாரத்தின் இலக்கு என்பது நிலவும் இணைய இடைவெளி (digital divide) சமன் செய்தல்” என்பதே என இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் வி.பி.சானு சொல்கிறார். “எவரிடம் தேவைக்கும் அதிகமாக தொலைக்காட்சி, மொபைல் உள்ளிட்ட கருவிகளை வைத்திருக்கிறார்களோ அவைகளை அவர்கள் இந்திய மாணவர் சங்கத்திடம் கொடுக்கும் பட்சத்தில் அவை தேவைப்படும் மாணவர்களுக்கு பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் வழங்கப்படும்” என தெரிவித்தார். இந்த சவால் ஜூன் 1 அன்று துவங்கியது எனவும் சொல்கிறார்.

சமீபத்தில், டெல்லி பல்கலைக்கழகம் தொடங்க எத்தனிருந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பினை தெரிவித்திருந்தது. டிவிட்டரில் இது குறித்து ஷேஷ்டேக் மூலம் பிரச்சனையை எழுப்பியும், சமூக இடைவெளியுடன் போராட்டமும் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் கொள்கை ரீதியாக இணைய இடைவெளிக்கு எதிராகவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராகவும் இருப்பதாக தெரிவிக்கும் சானு, “எல்லா மாநிலங்களிலும் உள்ள இணைய இடைவெளிக்கு இ.மா.ச எதிராக இருக்கிறது. இருப்பினும் அந்த இடைவெளி சற்றேனும் குறைய எங்களால் முயன்ற முயற்சியினை இங்கு எடுத்து வருகிறோம். ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் என்ற திணிப்பை செய்யாமல், தொலைக்காட்சிகள் மூலமாகவும் அதே வகுப்புகளை ஒளிபரப்பு செய்து இன்னும் பலரை அடைய கேரள அரசு முயற்சி எடுத்து வருகிறது. 2001ஆம் ஆண்டில் கேரள குடும்பங்களில் 36% ஆக இருந்த சொந்த தொலைக்காட்சி வசதி, 2011ல் 78% என உயர்ந்தது; இப்போது 2020ல் இன்னமும் உயர்ந்திருக்கலாம் என நம்புகிறோம்.”

Image may contain: 2 people, people standing and outdoor

கேரள அரசு சோதனை ஓட்டமாக இரு வாரங்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்த உள்ளது. இதை குறித்து சோனு சொல்கையில், “இது எங்களுக்கு பிரச்சனையின் தீவிரத்தை அறிய போதிய நேரத்தை கொடுக்கும். இந்த குறுகிய காலத்தில் எத்தனை கருவிகளை (gadgets} மக்களுக்கு சென்று சேர்க்க முடியுமோ அத்தனையும் சென்று சேர்க்க முயல்கிறோம். ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் பொது இடங்களில் தொலைக்காட்சிகளை வைத்தும், இணைய வசதி அதிகரிக்கவும் முயற்சி எடுத்து வருகிறோம்” எனவும் சொல்கிறார்.

நன்றி : பார்வதி பெனு, edexlive.

தமிழில் : ராம்

https://www.edexlive.com/news/2020/jun/05/we-are-against-online-education-and-digital-divide-vp-sanu-on-why-sfi-started-its-tv-challenge-12464.html