முழுமுடக்கம் மற்றும் அனைவரும் முகக்கவசம் பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமே பெருந்தொற்றினைக் குறைக்க முடியும்  – டி.ஜேகப் ஜான்

பெருந்தொற்றினை வீழ்த்துவது காலத்தின் தேவை . இயல்பாகப் பெருந்தொற்று என்பது ஆலயமணி வடிவில் இருக்கும். தொடக்கத்தில் மேல்நோக்கிய சறுக்கு போலவும் (முதல் கட்டம் ) அடுத்து உச்சியைப் போலவும் ( இரண்டாம் கட்டம் ) அடுத்து கீழ்நோக்கிய சறுக்கு போலவும் ( மூன்றாம் கட்டம் ) இருக்கும். கோவிட் – 19 பெருந்தொற்றில் இந்தியா தற்போது முதல் கட்டத்தில் உள்ளது.

தொற்றுகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும்போது தற்போது இருப்பதைவிட மிக அதிகமான சுகாதார வசதிகள் தேவைப்படும் . பெருந்தொற்றினை எதிர்பார்த்து சுகாதார வசதிகள் உருவாக்கப்பட்டு இருக்கவில்லை. முதல் கட்டத்தை சமாளிக்கவும் இந்தியாவில் போதிய வசதி இல்லை . தொற்று பரவுவது குறையும்போது தீவிரக் கண்காணிப்புப் பிரிவுகளின் படுக்கைகள் , சுவாசக் கருவிகள், கடுமையான மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தும் சிறப்பு மருத்துவர்கள் தேவை குறையக்கூடும் . உச்சநிலை மட்டுப்படுத்தப்படும். கொஞ்சகாலம் மூச்சு விட்டுக்கொள்ளலாம். அழுத்தம் குறையும். இருப்பினும் தொற்றுள்ள பகுதி மணி வடிவில் இருந்தாலும் தட்டையானாலும் தொற்று உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை அப்படியே இருக்கும். நோய்த்தொற்று தடுப்புக்குத் திட்டமிடும்போது தொற்றுநோய் இயலின் இந்த முக்கியமான தகவல்களைக் கணக்கில் கொள்ளவேண்டும்.

தொற்றுநோய்ப் பரவலைத் தடுத்தல்

தொற்றுப் பரவலைத் தடுக்க இரண்டு வழிகள் உள்ளன . சில வாரங்கள் கடுமையான முடக்கத்தை அமல்படுத்துதல் அல்லது வீட்டுக்கு வெளியே செல்லும் எல்லா நேரத்திலும் முகக் கவசத்தைப் பயன்படுத்துதல் . முடக்க காலம் என்பது குடும்பங்களைத் தனிமைப்படுத்துகிறது . இதில் உள்ள குறைபாடு , குடும்ப உறுப்பினர்கள் எல்லா நேரங்களிலும் உடல்ரீதியாக ஒருவருக்கு ஒருவர் இரண்டு மீட்டர் இடைவெளியயைப் பராமரிக்க இயலாமல் போகலாம். இதன் விளைவாக முடக்க காலத்தில் ஆரம்பத்தை விட முடிவின்போது வீட்டில் இருப்பவர்களிடையே பரவி , பிறகு அதிகம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்படலாம். ஆனால் முடக்க காலத்தில் சமூகப் பரவல் தடுக்கப்படும்.
அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்கு நான்கு காரணங்கள் உள்ளன. ஒன்று , நோய்த்தொற்று உள்ள ஒருவர் இன்னொருவருக்குத் தொற்றவிடமாட்டார்.

coronavirus facemask tips: கொரானாவுக்கு முகமூடி ...

ஏனெனில் உரையாடும்போது , இருமும்போது அல்லது தும்மும்போது அவரிடமிருந்து வெளிப்படும் நீர்மத்துளிகள் முகக்கவசத்தால் தடுக்கப்படும் . நினைவில் கொள்ளுங்கள் , நோய்த்தொற்று உள்ள பலருக்கு அறிகுறிகளோ லேசான அறிகுறிகளோ இருக்காது. அவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது நமக்கும் தெரியாது . இரண்டு , நோய்த்தொற்று இல்லாதவர்களும் மற்றவர்களோடு பேசும்போது நீர்மத்துளிகள் மூலமான நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். கண்ணிமைகள் இணையும் பகுதியில் நீர்மத் திவலைகள் விழாமல் கண் கண்ணாடி அணிந்தவர்கள் கூடுதல் பாதுகாப்புப் பெறுகிறார்கள். இருதரப்பினரும் முகக் கவசங்கள் அணியும்போது நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு இல்லவே இல்லை எனலாம் . மூன்றாவது, முகக் கவசம் அணிபவர்கள், தங்களின் விரல் நுனிகளை மூக்குத் துவாரங்களிலோ வாயிலோ வைப்பதைத் தவிர்ப்பார்கள். புறவெளியில் படிந்திருக்கும் வைரஸ் , விரல் நுனியால் தொடும்போது பரவலாம். நமது கண்களை , மூக்குத் துவாரங்களை, வாயை நாம் தொடாதிருந்தால் இவ்வகையான பரவல் தடுக்கப்படும்.

நான்காவது, இவை அசாதாரண நாட்கள் என்பதை எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் நினைவுபடுத்தும் . குடிசைப் பகுதிகள் போன்று கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் தொற்று பரவலைக் குறைப்பதில் பெரும் பயனைத் தராது. இத்தகைய இடங்களில் எல்லோரும் முகக்கவசம் அணிவது நோய்த்தொற்று பரவலை குறைக்கும். இந்தியாவில் முடக்க காலத்திற்கு முன்பாகக் குடிசைப் பகுதிகளிலும் , கடை வீதிகளிலும் , அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும் கடைகளிலும் பிற இடங்களிலும் அனைவரும் முகக் கவசம் பயன்படுத்துவதை உறுதி செய்வது புத்திசாலித்தனமான வாய்ப்பாக இருந்திருக்கும்.

இனி மாஸ்க், சானிடைசரை அதிக விலைக்கு ...

தைவானும், செக் குடியரசும் ஆரம்பத்தில் அனைவரும் முகக் கவசம் பயன்படுத்துவது என்பதைச் சார்ந்திருந்தன. இதனால் நோய்த்தொற்று குறைந்தது. இந்த முகக் கவசங்கள் கண்ணுக்குக்கீழிருந்து மூக்கினை மூடி முகவாய் வரை இருக்க வேண்டும். முகக் கவசம் அணியும் வயதுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவற்றை அணிய வேண்டும். கோவிட் – 19 இறப்புக்கான மூன்று காரணங்கள் . தீர்க்க முடியாத அளவுக்கு வைரஸ் நச்சுத்தன்மை அதிகரிப்பு ; நீரிழிவு, நாட்பட்ட நோய்கள் போன்றவை பரவலுக்குக் கூடுதல் வாய்ப்புள்ளவை. அடுத்தது தரம் குறைந்த சுகாதார வசதி. முடக்கத்தை அமல்படுத்துதல் , அனைவரும் முகக்கவசம் பயன்படுத்துவதை உறுதிசெய்தல் ஆகியவை தோற்று நோயைக் குறைத்து, நோய்த்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் , சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் நமக்கு வாய்ப்பளித்திருக்கிறது. எங்கெல்லாம் இது செய்யப்பட்டதோ, அங்கு, இறப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது

நன்றிகள் 

டி. ஜேக்கப் ஜான்
வேலூர் சிஎம்சி
நுண்கிருமி இயல் துறையின்
ஓய்வு பெற்ற பேராசிரியர்
கட்டுரை – தி இந்து நாளிதழ் 06.04.20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *