அன்பு என்னும் கலை - எரிக் ஃபிராம் | Anbu Ennum Kalai Book Review

எரிக் ஃபிராமின் “அன்பு என்னும் கலை” – நூல் விமர்சனம்

 

அன்பு என்னும் கலையா புது தலைப்பாக இருக்கு என்று வாசிக்க துவங்கினேன். புலம் பெயர்ந்த யூத எழுத்தாளர். தன்னை சோசலிஸ்ட் எழுத்தாளர் என்பதால் வாசிக்க துவங்கினேன். புதிய புரிதலும் அன்பு குறித்தான மறுமதிப்பிடை உருவாக்கும்…

…கலை பற்றிய கற்றறிதல் என்பது, ஒரு உச்சமான அக்கறையாக இருப்பதே அதன் நிபந்தனை…

…அன்பெனும் கலையைப் பொறுத்தமட்டில், இக்கலையில் புலமையாளனாக வர ஒருவன் விரும்புகிறபோது, ஒழுங்கு, ஒருமுகப்படுத்துதல், பொறுமை ஆகிய பண்புகளைத் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் காப்பாற்றும்…

…குழந்தையிடம் தாய் கொண்ட பொறுப் புணர்வைச் சொல்லலாம். அவள், குழந்தை மீது மிகுந்த கவனமாக இருக்கிறாள்; அதன் உடலில் ஏற்படுகிற மாற்றங்களை மிக உன்னிப் பாகப் பார்க்கிறாள்; அவை வெளிப்படையாகத் தெரிவதற்கு முன்பே கவனிக்கின்றாள்; தன் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் விழித் தெழுகிறாள்; இந்த அழுகுரலை விடவும் பலமான ஓசை அவளை எழுப்பியிருக்காது. இதற்கெல்லாம் அர்த்தம், குழந்தையின் உயிர் ஓட்டத்தின் புலப்பாடுகள் மீது தாய்க்குக் கவன உணர்ச்சி அதிகம் . அவள் பதட்டமடைவதோ அல்லது கவலைப்படுவதோ இல்லை; எப்போதும் விழிப்பான சமனிலையில் இருக்கிறாள்…

…புறவயமாக நோக்கவும், பகுத்தறிவோடு பார்க்கவும் ஆற்றலைப் பெறுவது என்றாலே, அன்பின் கலையை எட்டுவதற்குரிய பாதி தொலைவினைக் கடந்துவிட்டதாகப் பொருள்படும்…

…எவ்வாறு ஒவ்வொரு நம்பிக்கை துரோகமும் ஒருவரைப் பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு பெறுகிற பலவீனம் புதிய துரோகத்திற்கு இட்டுச் செல்லுகிறது. நம்பிக்கை துரோகம் ஒரு மோசமான வளையமாகும்…

இந்தியபடிநிலை பண்பாட்டின், அன்பு எவ்வாறு வினையாற்றுகிறது இந்திய, தமிழக சூழலுக்கு உகந்த எடுத்துக்காட்டுகளுடன் மொழிபெயர்ப்பாளர் அழகுற ஆங்கில கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார். அன்பு குறித்தான புதிய புரிதலும், சமூகம் சார்ந்தது என்கின்ற நிறுவுதலை சொல்லக்கூடிய கட்டுரை. எழுத்தாளர் யூத இன அழிப்பின் காரணமாக அமெரிக்காவில் சென்று குடியேறி பல நூல்களை எழுதியுள்ளார்.  அதில் அன்பு என்னும் கலை சிறப்பான ஒன்று.

 

நூலின் தகவல் 

நூல்: அன்பு என்னும் கலை

வகை : சமூகவியல் கட்டுரை

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஆசிரியர்: எரிக் ஃபிராம்

மொழிபெயர்ப்பு:‌ ராஜ் கௌதமன்

பக்கம்: 147

விலை : ₹.135

 

எழுதியவர் 

பாலச்சந்திரன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *