தோழர் என். ராமகிருஷ்ணன் எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பெருமைமிகு நூற்றாண்டு முதல் பகுதி (1920-1964)சமீபத்தில் வெளிவந்துள்ளது. 86 தலைப்புகளில் 512 பக்கங்களை கொண்டுள்ள புத்தகம் இந்தியாவின் நூற்றாண்டுகால அரசியல் வரலாற்றினூடே நம்மை பயணிக்க வைக்கிறது.

இந்திய விடுதலை போராட்டதின் வரலாற்றின் ஒரு பகுதியாகவும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சுரண்டலும் இந்திய விடுதலை போராட்டத்தின் மீதான மிக கொடூரமான ஒடுக்குமுறையையும், குறிப்பாக கம்யூனிஸ்டுகள் மீது போடப்பட்ட சதி வழக்குகள் துவங்கி சிறை கொட்டடி வரை பிரிட்டிஷ் அடக்குமுறை ஒவ்வொன்றை விவரிக்கின்றது. 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 17 தேதியன்று ரஸ்யாவின் தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது தொடங்கி இந்தியாவில் தொழிற்சங்க நடவடிக்கைள் எவ்வாறு முன்னெடுக்க பட்டன.

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் ...

கட்சியை கட்டுவதற்கு லட்சிய புருஷர்கள் எத்தனை, எத்தனை தியாகங்களை புரிந்தார்கள் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் தங்களின் உயிரை இந்த இயக்கத்திற்க்காக கொடுத்தார்கள். கையூர் தியாகிகள், சின்னியம்பாளையம் தியாகிகள், நூற்றுக்கணக்கில் சுட்டு கொல்லப்பட்ட புன்னப்புரா – வயலார் தியாகிகள், தெலுங்கானா எழுச்சிப் போரில் சுட்டு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான வீர புதல்வர்கள், தேபாகா விவசாய எழுச்சியில் கொல்லப்பட்ட தீரர்கள், கோவை ஸ்டேன்ஸ் மில், விக்கிரசிங்கபுரம் ஹார்வி மில்களில் கொல்லப்பட்ட தொழிலாளர் தோழர்கள் சென்னை துறைமுகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகள் என இன்னும் எண்ணற்ற தோழர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்திறகாக உயிர் நீத்த தியாகங்களை பட்டியலிடுகிறார் தோழர் என். ராமகிருஷ்ணன்.

பூரண சுதந்திரம் என்ற கோரிக்கையை 1921ல் அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் எழுப்பியது கம்யூனிஸ்டுகளே. இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்த கம்யூனிஸ்ட் இயக்கம் உழைத்து, உழைத்து ஓடாகி கொண்டிருந்த இந்திய தொழிலாளிகளையும், விவசாயிகளையும், விவசாய தொழிலாளிகளையும் இதர உழைப்பாளிகளையும் வர்க்க உணர்வு பெற செய்த இயக்கங்கள்….

Image

தஞ்சை தரணியில் நடைபெற்ற பண்ணை அடிமை முறையையும், வார்லி ஆதிவாசி, திரிபுரா ஆதிவாசி மக்களின் உரிமை மீட்டெடுத்த வரலாற்று புகழ் மிக்க போராட்டங்களை நடத்தியது கம்யூனிஸ்ட் இயக்கமே. வங்க பஞ்சத்தில் கொத்து கொத்தாக மாண்டுபோன லட்சக்கணக்கான மக்களை மீட்டெடுக்க கம்யூனிஸ்டுகள் ஆற்றிய அளப்பரிய பங்கும் தியாகமும் ஈடு இணையற்றது. மொழிவழி மாநிலத்துக்காக கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களும் அறிவியல் பூர்வ
அணுகுமுறையும் எவ்வளவு சரியான தொலைநோக்கு பார்வை என்பதை மிக சரியாக பதிவு செய்துள்ளார்.

ரஷ்ய புரட்சி துவங்கி மக்கள் சீனம் வரை, கம்யூனிஸ்ட் அகிலத்தின் பங்கு,இரண்டாம் உலக போரில் சோவியத் பங்கு இந்திய கம்யூனிஸ்ட்களின் அணுகுமுறை சர்வதேச அளவிலும் இந்திய புரட்சிக்கான பாதையை வகுப்பதிலும் விடுதலைக்கு பின் காங்கிரஸ் அரசை மதிப்பிடுவதிலும் ஏற்பட்ட தத்துவார்த்த போராட்டம் என இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு பயண அனுபவத்தை கண் முன் நிறுத்துகிறார் தோழர் என். ராமகிருஷ்ணன்.

மாற்று: 2010-11-07

தோழர் என். ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஆய்வு செய்ய விரும்பும் எவரும் தோழர் என். ராமகிருஷ்ணனை விடுத்து ஆய்வை முழுமை படுத்த முடியாது. தோழர் என். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். எனவே அவசியம் வாசிங்க குறிப்பாக இளம் தோழர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்.

நன்றி. – ராஜ்மோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *