K.Punithans Poems (Vilakkai Amaithipaduthu, Pugaippadam Veliyilai Kuraithu Vaippaval). Book Day is Branch of Bharathi Puthakalayam.



விளக்கை அமைதிப்படுத்து

விளக்கை அமைதிப்படுத்து
அம்மா சொன்ன வார்த்தைகளை கற்று கொண்டேன்

காலையில் பூத்த பூக்களிடம்
துரிதமாக நகரும் நத்தையிடம்
அவள் செய்த பூரியிடம்

இன்னும் எத்தனை சொற்களை
தெரிந்து வைத்திருப்பாளோ
இது மாதிரி

அவள் சொன்ன வார்த்தைகள்
மறந்து போய் தூக்கம் வராமல்
புரண்டு படுக்கிறேன்



புகைப்படம் வெயிலை குறைத்து வைப்பவள்

மழையை
காஸ் அடுப்பு சிம்மில்
குறைத்தும்
அதிகரித்தும் வைத்தாள் பாப்பா

காலையில்
செடியில் பூத்த
ரோஜா இதழின் வெயிலை
அதிகரித்து வைத்தாள்
தாத்தாவின் புகைப்படம் வெயிலை
குறைத்து வைத்தாள்

தத்தகாரம் போடும்
தவளை ஒலியை
குறைத்து வைத்தாள்
சில் வண்டின் ஒலியை
அதிகரித்து வைத்தாள்

….க. புனிதன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *