க.புனிதன் கவிதைகள்
க. புனிதன் எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள்
க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள்
ஹைக்கூ கவிதைகள் – க. புனிதன்
ஜென் சினிமா கவிதை – க. புனிதன்
நாம் அடைய வேண்டிய
ஊரின் பெயர்
தேநீர் பானம்
இடையில் வரும் சிற்றூர்கள்
குக்கூ
நிலவு
மூதூர்
தென்றல்
சிற்றெறும்புகள்
கோப்பையில்
தேநீர் தயாரிக்க
ஒரு கருப்பு நகைச்சுவை
பாலில் கலந்து
சர்க்கரை தூவும்போது
வெட்டுக் கிளியின் சப்தம்
ஏற்ற இறக்கமான
கோப்பை
அதில் வண்ணத்து பூச்சி போல்
பிடிக்கும் கை பிடி
இரண்டு கரைகள்
பருகும் கடல்
தவறி சிந்திய
தேநீர்த் துளிகள்
கோள்கள்
கோப்பையில்
தன் பிம்பம் தெரியும்
நுரைகள்
ஜென் சினிமா
புத்தனுக்கு மறுபெயர் மாமா கவிதை – க. புனிதன்
பாப்பா பார்த்தவுடன்
மாமா என்றது
புத்தனுக்கு மறு பெயர்
மாமா
நாய்க் குட்டி
மழைத்துளி
டெடி பொம்மை
மகிழ்ச்சி
ஊர் சுற்றி வந்த நாயை
தெள்ளவேரி என திட்டினாள்
அம்மா
ஏனோ புத்தனின் ஞாபகம் வந்தது
பட்டு நூல் நூற்கும்
சின் கோனா மரம்
போதி மரம் எனக்கு
புத்தன் கண் மூடி அமர்ந்திருந்தார்
பட்டுப் புழுவின்
அமைதியான நூற்பிசை கேட்டு
நூலகம் அருகே
மரக்கிளையில்
அமைதியாய் நூல் நூற்கும்
பட்டு புழு
பெண் ஞானி கவிதை – க. புனிதன்
ஆணுக்கு
வீடு வாசல்
தெரு
புளிய மரம்
தம் அடிக்கும்
நிழல் கூடம்
என்று வெவ்வேறு நிலம் இருக்கிறது
வீடு
தெருமுக்கு தேநீர் கடை
எங்கே வேண்டுமானாலும்
தேநீர் பருக முடியும்
புத்தர் உள்பட
எந்த ஆணாய் இருந்தாலும்
துறவி ஆகிறேன் என
வெளியேற முடியும்
களி மண்ணில்
சின்ன சிலை செய்து
வீட்டில் வைத்து கொண்டாடும்
பெண்ணின் துறவறம் வேறு
நறுக்கும்
வெண்டை காயில்
ஒதுக்கி வைக்கும்
காம்பை கூட
கலை பொருளாய் பார்க்கும்
அவள் அக மகிழ்வு வேறு
பறவை நோய் கவிதை – க. புனிதன்
அன்னத்தின் காயத்திற்கு
மருந்திட்ட
சித்தார்த்தன் வழியில் கோழிகள் வளர்த்தேன்
அன்னம் போலவே இருந்தது
வெக்கைக் கழிசல் நோய் வந்து
கோழிகள் செத்து போயின.
மனம் சோகையான கோழி போலவே
நீண்ட உறக்கத்திற்குப் போனது
உறக்கத்தில் இருப்பது போல்
நடித்து வலையில் இருந்து
தப்பித்த விலங்கு போல்
மனம் விழித்து கொண்டது
இயற்கையைக் கவனிக்க
ஆரம்பித்தேன்
எலுமிச்சை மரத்திற்கு
வேப்பம் புண்ணாக்கு இட்டேன்
என் உடம்பில் பூத்த
காயங்களே
ரோஜா பூக்கள் ஆயின.
மாட்டுச் சாணத்தை
மண் புழு எருவாக்கி
வயலில் விவசாயம் செய்தேன்
மனம் மகிழ்வாய் இருந்தது.








