1. என்னைச் சவமாக்கினாலும்
உன் சவம் சுமப்பேன்
மரம்…… பெட்டியாய்.
2. மழைநீர் தரும் மரமழித்து
கானல்நீர் பயணம்
நான்கு வழிச்சாலை.
3. நாள்முழுதும் பூ விற்று வாடியவள்
வீடுதிரும்ப மறுகணம் பூத்தாள்
குழந்தையின் சிரிப்பு.
4. கைரேகை காட்டியது
மழைவரும் நாள் பார்க்கவோ
வானத்திடம் வறண்டநிலம்.
5. ஆகாய அன்னையின்
கோணல் வகிடு
மின்னல்..
6. வெப்பத்தில் பூத்த
வெள்ளிப் பனித்துளி
உழைப்பாளி வியர்வை..!
ந. கார்த்திகேயன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


“நாள்முழுதும் பூ விற்று வாடியவள்
வீடுதிரும்ப மறுகணம் பூத்தாள்
குழந்தையின் சிரிப்பு.” அருமை சகோ. வாழ்த்துக்கள்.