#

சாதீய வெறியை
கதைத்துக் கொண்டது..
தண்டவாள பிணங்கள்!

#

வேலைக்கு நடுவில்
அவசர அழைப்பு விடுக்கிறது
புத்தக ஓர மடிப்பு!!

#

ஒன்றரைக் கோடி தலைகள்
அகிம்சை போராட்டம்
கோட்சே ஆட்சியில்!

#

பூமி நிர்வாணமானது
மரங்களற்ற வனம்
பசுமை வழிச் சாலை!!

#



கைகளின் நாட்டியம்
வண்ணமிகு படைப்புகள்
நெசவுத் தறி!!

#

நேரம் விழுங்கும் அரக்கன்
ஆறாம் விரலானது..
ஆன்ராய்டு கைப்பேசி!

#

ஆண் பெண் சமம்
அர்த்தநாரி வடிவம்
திருநங்கை!



#

நிலமங்கையின் நாணமோ?
மஞ்சளாடையில் தலை குனிந்தாள்
அறுவடை ஆரம்பம்!!

#

காலங்கள் கடந்த பின்னும்
காதலைச் சொன்னது
காதோர நரை!!

#

குழந்தையின் ஆசிரியர்
அம்மாவிற்கு பாடம்
இணையவழிக் கற்றல்!

கவிதா பிருத்வி
தஞ்சை.



2 thoughts on “ஹைக்கூ கவிதைகள்- கவிதா பிருத்வி”
  1. அனைத்து ஹைக்கூ கவிதைகளும் சிறப்பு தோழர். மனமார்ந்த வாழ்த்துகள்

  2. நேரம் விழுங்கும் அரிக்கன் கைபேசி சிறப்பு தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *