கவிதை : நானும் ஒரு நாய் - ச.சக்தி  kavithai : naanum oor naai - s.sakthi
கவிதை : நானும் ஒரு நாய் - ச.சக்தி  kavithai : naanum oor naai - s.sakthi

கவிதை : நானும் ஒரு நாய் – ச.சக்தி 

நானும் ஒரு நாய் 
பக்கத்தில்
அமர்ந்தவாறு
தன் கையை
நாவால் நக்கி குழைந்துக்  கொண்டிருந்த
நாய்க்குட்டிக்கு‌ ஓர் முத்தம் கொடுக்கிறேன் ‌
பதிலுக்கு
அந்த நாய்க்குட்டியும்
எனக்கொரு முத்தம் கொடுக்கிறது தூரத்திலிருந்து
எனக்கும்
ஒரு முத்தவேன்டுமென்றவாறு
இன்னொரு
நாய்க்குட்டியொன்று
ஓடி வர
இரண்டு நாய்களோடு
சேர்ந்து நானும்
மூன்றாவது
ஓர் நாயாகத்தான்
குழைந்து குழைந்து
நின்றுகொண்டிருக்கிறேன்
எல்லாரும் சமமென்று
அவ்வப்போது உச்சரிக்கும் முதலாளியின்
வீட்டு வாசலுக்கு வெளியே ,
கவிஞர் ச. சக்தி 
பண்ருட்டி 
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *