Mrs.Hume's Pheasant or Bar-tailed pheasant (Syrmaticus humiae) Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book day



பட்டை வால் சிங்காரக்கோழி or Mrs.ஹுயும் பெசான்ட்

இதன் பெயரிலேயே தனி சிறப்பு உள்ளது. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) அவர்களின் மனைவிக்கு (Maria Burnley) மரியாதை செலுத்தும் விதமாக பெயர் வைத்துள்ளனர்.  மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் பறவை.

பெயர் காரணம்

Gr. surma, surmatos robe with a long train (long-tailed). கிரேக்க மொழியில் அழகான நீளமான வாலை உடையது.

Humiae –   Mary Ann Grindall Hume, wife of Allan Octavian Hume (Syrmaticus).

K:\My writings\Book day\Hume.jpg

யார் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் ?

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் இந்தியா பறவியளாளரின் தந்தை. இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்தார், மேலும் 1849 முதல் 1882 வரை இந்தியாவில் உயர் நிர்வாக பதவிகளில் பணியாற்றினார்.  இந்திய தேசிய காங்கிரஸின் அஸ்திவாரத்தில் முதன்மையானவராக 1885 ஆம் ஆண்டில் இருந்தவர், 1885 முதல் 1906 வரை அதன் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.

ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும், கள ஆய்வில் கவனித்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ள Stray Feathers என்ற ஆங்கில மாத இதழை ஆரம்பித்தவர். பல பறவைகளின் மாதிரிகள், உடல் உறுப்புகளை சேகரித்து வைத்தார். லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகத்திற்க்கு சேகரித்து வைத்திருந்து பாடம் செய்யபட்ட அல்லது பதபடுத்தப்பட்ட பறவைகளை  வழங்கியுள்ளார். இதன் மூலம் பறவை ஆராய்ச்சியாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

உடல் அமைப்பு

மயில் போன்ற தோற்றத்தை உடையது. இதன் உடல் மொத்தம் 90 செமீ, வால் மட்டுமே 50 செமீ கொண்டுள்ளது. எடை – ஆண் 950 – 1,100, பெண் 650 – 850 கிராம். கழுத்து நீளம், இறக்கைகள் பழுப்பு, வால் வெள்ளை நிறம் , பழுப்பு நிற வரிகளையுடையது. கண்ணைச் சுற்றி சிகப்பு நிற வளையம் உள்ளது. இதன் அலகு மற்றும் கால்கள் வெள்ளை நிறத்தை கொண்டுள்ளது.

பரவி காணப்படும் நாடுகள்

இந்தியா, சீனா, பர்மா தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் பறவி காணப்படுகின்றன.

K:\My writings\Book day\Syrmaticus humiae (Female).jpg
Syrmaticus humiae (Female)

வாழுமிடம் 

1000 – 2500 மீட்டர் உயர மலைகளான திரந்த & வரண்ட, மித வெப்ப மண்டல பசுமை காடுகள்,  அடர்ந்த காடுகளின் ஓரப்பகுதிகளில் வாழும். முக்கியமாக oak & pine போன்ற மரங்களைக் கொண்ட ஊசி இலைக்காடுகளில் வாழக்கூடியது.

உணவு 

ஊசி இலைக்காடுகளில் இருக்கும் மரங்களின் (oak & pine) கொட்டைகள், இலைகள், வேர்கள், பூச்சிகள் மற்றும் கறையான்கள். 40 வகையான தாவர இனங்கள் அதன் வயிற்றில் கண்டறியப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இனப்பெருக்கம் 

பிறந்து 10 – 14 மாதங்களில் இணையை தேடும் பிப்ரவரி – சூலை மாதங்கள் இதன் இனப்பெருக்க காலம். இலை, மரக்கிளைகள் & இறகுகள் பயன்படுத்தி கூடு கட்டும். 3 முதல் 12 வரை  வெள்ளை நிற முட்டைகளையிடும். பெண் பறவை மட்டுமே அடை காக்கும்.

K:\My writings\Book day\Syrmaticus humiae (Male).jpg
Syrmaticus humiae (Male)

தற்போதைய எண்ணிக்கை –  6000 முதல் 15,000 வரை உள்ளன.

வாழத்தேவைப்படும் பரப்பளவு – 854,000 கிலோ மீட்டர் தேவைப்படுகின்றது.

பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனம் (International Union for Conservation of Nature – IUCN) உயிரினங்களை அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டியலிட்டு வருகிறது. தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதால் அருகத் தொடங்கும் உயிரினம் (Near Threatened) என்று அறிவித்துள்ளது.

காரணம்: இயற்கை சுரண்டல், காடுகள்  அழிப்பு, கட்டுப்பாடற்ற வருடாந்திர காட்டுத் தீ, பல ஆண்டுகளாக தொடரும் அழகு சாதனப்பொருட்கள் செய்யவும், உணவிற்க்காகவும் வேட்டையாடுதல் ஆகியவை குறைந்து வருவதற்கு காரணமாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், இதனால் சீனா, இந்தியா, தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடிகளில் வனஉயிரிண சட்டம் Schedule – I bird, according to wildlife (Protection) act, 1972 பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது.

Allan Octavian Hume : Book Day Series
Allan Octavian Hume

பறவைகளின் படங்கள்: https://birdsoftheworld.org/bow/species/humphe1/cur/introduction

தரவுகள்

N. J. Collar & R. P. Prys-Jones (2012). Pioneer Of Asian Ornithology: Allan Octavian Hume Birding ASIA Volume- 17, Pages 17–43.

http://datazone.birdlife.org/species/factsheet/mrs-humes-pheasant-syrmaticus-humiae

https://www.iucnredlist.org/search?query=Syrmaticus%20humiae&searchType=species

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

13 thoughts on “பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி”
  1. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் அவர்கள் லண்டன் அருங்காட்சியகத்துக்குக் கொடுத்த கொடைபற்றி மிகச்சுருக்கமாகப் பதிவிடப்பட்டமை வருத்தம் தருகிறது.அவரது சேகரிப்பு மிகப்பெரியது.

    இவர் எதாவாவில் வேலை செய்தபோது, சொந்த ஆர்வத்தில் பல பறவைகளின் உறுப்படிகளைத் திரட்டினார். இவற்றை 1867 கிளர்ச்சியின்போது காட்சிக்கு வைத்தார். பின்னர் இந்தியத் துணைக்கண்ட பறவைகள் பற்றிய முறையான அளக்கையை மேற்கொண்டு ஆவணப்படுத்த்த் தொடங்கினார். இதன்வழி உலக ஆசியப் பறவைகளின் பெருந்திரளான தகவலைத் தொகுத்தார். இவற்றைச் சிம்லா, யாக்கோ மலை உரோத்னே கோட்டையில் இருந்த தன் வீட்டில் அருங்காட்சியகமாகவும்
    நூலகமாகவும் தொகுத்தார்.
    இவரது பறவைத் திரட்டுகள் 47 தியோதார் மரப்பேழைகளில் பொட்டலப்படுத்தப்பட்டன. இவை உறுப்படிகளை சிதைக்காமல் இருக்க ஆணிகள் இன்றி செய்யப்பட்டன. ஒவ்வொரு பேழையும் அரை டன் எடைகொண்டிருந்தது. இவை மலையில் இருந்து கீழே கொணர்ந்து மாட்டுவண்டிகளில் ஏற்றி, முதலில் கால்காவுக்கும் பின்னர் பம்பாய் துறைமுகத்துக்கும் போக்குவரத்து செய்யப்பட்டன. பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு 1885 இல் சென்றவற்றில் 82,000 உறுப்படிகள் இருந்தன. ஆனால், அருங்காட்சியகத்தில் 75,577 உறுப்படிகளே காட்சிக்கு வைக்க முடிந்துள்ளது. திரட்டுகளின் தகவல்கள் கீழே தரப்படுகின்றன (பழைய பெயர்களே தரப்பட்டுள்ளன).இவர் ஏற்கெனவே 20,000 உறுப்படிகளை வண்டுகள் துளைத்து சிதைதமையால் அழித்துவிட்டார்.

    2830 கொன்றுண்ணிகள்(Accipitriformes)… 8 வகைகள்
    1155 ஆந்தைகள் (Strigiformes)…9 வகைகள்
    2819 காக்கைகள், வான்கோழிகள், காஞ்சனப்புள்கள் etc.…5 வகைகள்
    4493 குயில்வகை இன்னிசைப் பறவைகளும் ஈப்பிடிப்பான்களும்… 21 வகைகள்
    4670 பூங்குருவிகளும் கதிர்க்குருவிகளும்…28 வகைகள்
    3100 கொண்டைக்குருவிகளும் wrens, dippers, etc.…16 வகைகள்
    7304 timaliine birds…30 வகைகள்
    2119 சிட்டுகளும் கீச்சaன்களும்…9 வகைகள்
    1789 தேன்சிட்டுகளும் (Nectarinidae) வெண்கண் குருவிகளும் (Zosteropidae)…8 வகைகள்
    3724 தூக்கணாங்குருவிகளும் (Hirundiniidae), வாலாட்டிகளும் நெட்டைக்காலிகளும் (Motacillidae)…8 வகைகள்
    2375 finches (Fringillidae)…8 வகைகள்
    3766 சூரைக்குருவிகளும் (Sturnidae), weaver-birds (Ploceidae), வானம்பாடிகளும் (Alaudidae)…22 வகைகள்
    807 எரும்பு பூங்குருவிகளும்(Pittidae), அகல் அலகிகளும் (Eurylaimidae)…4 வகைகள்
    1110 கொண்டலாத்திகளும் (Upupae), உழவாரன் குருவிகளும் (Cypseli), காட்டுப் பக்கிகளும் (Caprimulgidae) frogmouths (Podargidae)…8 வகைகள்
    2277 Picidae, இருவாயன்களும் (Bucerotes), பஞ்சுருட்டான்களும் (Meropes), மீன்கொத்திகளும் (Halcyones), பனங்கடைகளும்(Coracidae), தீக்காக்கைகளும் (trogones)…11 வகைகள்
    2339 மரங்கொத்திகள் (Pici)…3 வகைகள்
    2417 honey-guides (Indicatores), குக்குறுவான்களும் (Capiformes), குயில்களும் (Coccyges)…8 t வகைகள்
    813 கிளிகள் (Psittaciformes)…3 வகைகள்
    1615 புறாக்கள் (Columbiformes)…5 வகைகள்
    2120 கவுதாரிகள் (Pterocletes), game-birds and megapodes(Galliformes)…8 வகைகள்
    882 காணான்கோழிகள் (Ralliformes), ஓந்திகளும் (Gruiformes), வரகுக் கோழிகளும் (Otides)…6 வகைகள்
    1089அரிவாள்மூக்கன்களும் (Ibididae), நாரைகளும் (Ardeidae), கூழைக்கடாக்களும் நீர்க்காகங்களும் (Steganopodes), முக்குளிப்பான்களும் (Podicipediformes)…7 வகைகள்
    761 வாத்துவகைகள் (Anseriformes)…2 வகைகள்
    15965 முட்டைகள் என
    இவரது திரட்டுகள் 256 வகைமை உறுப்படிகளைக் கொண்டிருந்தன. மேலும்,இவரது திரட்டுகளில் இவற்றோடு புதிய சிறப்பினமாகிய ஆத்ரோமிசு இயூம் உட்பட, 400 பாலூட்டி உறுப்படிகளும் இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *