பங்குடி - க.மூர்த்தி - வெற்றி மொழி  |Pangudi - K. Murthy

பங்குடி நாவலின் எழுத்தாளர் க. மூர்த்தி சிரத்தை எடுத்து இந்நாவலை எழுதியுள்ளார். பங்குடி புத்தகம் வாசிக்க மிகவும் சிரமமாக இருந்தாலும் அதில் வரும் கதைகள் மிக அருமையான கதை மிக சிறந்த நாவல்.

முதலில் எனக்கு பங்குடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை வாசித்த பிறகு தான் பங்குடி என்பது அந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மிக கடுமையான வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை குறிக்கிறது என புரிந்துக் கொண்டேன்.

அவர்களின் பாஷைகள் போலவே அவர்களின் பெயர்களும் வித்தியாசமாக இருந்தது படிக்க படிக்க சூவார்ஸ்யமாக இருந்தது பேரிங்கையின் கதையை படிக்கும் போது அதுவும் பேரிங்கை பட்ட துயரங்கள் மிக அதிகம் அனைத்து இனப் பெண்களுமே ஏதோ ஒரு அடிமைத்தனத்தில் பெரிய அவமானங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிக் கொண்டு தான் உள்ளனர்.

பங்குடி இன பெண்கள் படும் துயரம் அதிகமாகவே உள்ளது. பங்குடி மக்கள் ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதிலும் விடாது அடை மழை பெய்து பஞ்சத்தை ஏற்படுத்தி விடுகிறது அவர்கள் சமைக்க விதை நெல்லை எடுக்கும் போது அதுவும் எலி தின்று வெறும் உமியை மட்டுமே வைத்திருந்தது குழந்தைகளின் பசியை போக்க முடியாத தாய் தந்தையரின் நிலை மிக வேதனைக்குரியது. அவர்களின் மனம் எவ்வளவு வேதனைக்கு உள்ள ஆகியிருக்கும் என உணர முடிந்தது.

பேரிங்கை ஏற்கெனவே திருமணம் முடிந்து கணவன் இறந்த பிறகு தன் னுடைய பால் குடிக்கும் குழந்தையை மாமியார் கிழவி பிடித்து வைத்து கொண்டு அவளை பல கொடுமைகள் செய்ததால் வயிற்றுபசியை போக்கிக் கொள்ளவும் போக இடமில்லாமல் போனதாலும் அரக்குஞ்சு கூறியதால் அவர் தம்பி பொக்காளியை இரண்டாவது திருமணம் முடித்து தனக்கு சுகம் தரமுடியாத பொக்காளியோடு அவள் படும் பாடுகள் ஏராளம் இரவை கழிக்க அவள் பாட்டு பாட்டை கூறுகிறது கதை.

காண்டீபன் என்னும் மிளகாய் வியாபாரியிடம் மாட்டிக் கொண்டு இரவை கழிப்பதும் வேறு வழி இல்லை என வேதனைப்படுவதும் தனக்கு குறைகளை வைத்துக் கொண்டு தன் மனைவி எனக் கூட பாராமல் அவளை அசிங்கப்படுத்த பஞ்சாயத்தில் பொக்காளி அவளை நிற்க வைப்பதும் பெண்களின் அடிமைத்தனம் பங்குடி மக்களின் நிலையை காட்டுகிறது.

தன்னால் முடியாது என்று தெரிந்தும் பேரிங்கையை திருமணம் முடித்து கொண்டது பொக்காளியின் தவறு அவர் செய்த தவறுக்கு பேரிங்கை வாழ்நாள் முழுவதும் துயரத்தை அனுபவிப்பது மிக கொடுமையானது. பேரிங்கை பாலூட்டும் குழந்தை யை பிரிந்து வந்து பல துன்பங்களுக்கு ஆளாகிறாள் மீண்டும் தன் மகனை சேர்கிறாளா இல்லை யா என்பது தான் கதையின் முடிவு.

குஷ்த்தி வாத்தியார் பங்குடி இன மக்களை தந்திரமாக அடிமைகளாக நடத்துவதும் பெண்களை கோவில் கருவரையிலேயே பாலியல் வன்முறை செய்வதும் அக்காலத்திலேயே கருவரையை காம களியாட்டக் கூடமாக பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது

திரும்ப திரும்ப படித்தால் புரிந்துக் கொள்ள முடிகிறது நல்ல உள்ளத்தை ஈர்க்கும் கதைகள் அனைவரும் அறிய வேண்டிய தகவல்களை இந்த புத்தகத்தில் ஆசிரியர் மிக அருமையாக எழுதியுள்ளார்.

பங்குடி சனங்களும் எல்லோரும் போல மனிதர்கள் தானே அவர்களை மட்டும் ஏன் இந்த தொழில் தான் செய்ய வேண்டும் இப்படி தான் வாழ வேண்டும் என்று ஒரு வரையறையை யார் வகுத்தது இந்த நூலை படிக்க படிக்க இந்த எண்ணம் எனக்கு தோன்றிக் கொண்டே இருந்தது.

ஆரம்பத்தில் பங்குடி புத்தகத்தை படிக்கும் ஆர்வம் என்னிடத்தில் சிறிதும் இல்லை ஆனால் வாசிக்க வாசிக்க எனக்குள் பல கேள்விகள் எழுந்தது சாக்கடை யிலேயே நெலியட்டும் என இவர்களை நசுக்கி விட்டு விட்டார்களே இவர்களின் உணர்வுகள் என்ன வாகும் உண்மையிலேயே நிறைய கேள்விகள் தோன்றியது. ஆனால் நாவலின் முடிவு அனைவரும் படித்து தெரிந்து க் கொண்டால் சிறப்பு.

மொத்தத்தில் பங்குடி புத்தகம் ஆசிரியர் எழுத்தாளர் க. மூர்த்தி அவர்கள் எழுதிய முதல் புத்தகம் இருப்பினும் முதல் புத்தகத்திலே எந்த ஆரவாரமும் இல்லாமல் புரட்சி செய்துள்ளார் இதை எழுதவில்லை என்றால் நாங்களும் இதை படிக்கவில்லை என்றால் நிச்சயம் இந்த தகவல்களை நாங்கள் அறிந்திருக்க முடியாது

இது போன்ற நிறைய புத்தகங்கள் நாவல்கள் தாங்கள் எழுத வேண்டும் என்னை போன்றவர்களுக்கு புரியும் விதத்தில் எழுத வேண்டுமென தங்களை அன்புடன் கேட்க்கொள்கிறேன் வாழட்டும் தங்கள் எழுத்துப்பணி வளர்ட்டும் தங்கள் மனிதநேயம் என கூறி எழுத்தாளர் க. மூர்த்தி அவர்களை வாழ்த்தி நன்றியை கூறிக்கொள்கிறேன்.

 

நூலின் தகவல்கள் 

புத்தகம் : பங்குடி நாவல்

ஆசிரியர் : க. மூர்த்தி

பக்கங்கள் : 320

வெளியீடு : வெற்றி மொழி 

 

புத்தக அறிமுகம் செய்தவர்

அ. ஷம்ஷாத்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *