கவிதை: புலம்பெயர் வறுமையின் பாடல் – ப. வித்யாஸ்ரீ

புலம்பெயர் வறுமையின் பாடல்

*********************************************

ஊரடங்கின்  பரிசாக

பல நாள் பட்டினி

கண்ணீர்….  இலவச  இணைப்பு,

 

தொண்டை  வத்தி  போச்சி

உடல்  மெலிஞ்சி  எலும்பாச்சி

தேச வரைபடம் போல

தானா  வயிறு  ஒட்டி  சுருங்கிப்  போச்சு.

 

நதி  நீரக் குடிக்கலாம்னுப் பார்த்தா

மணலில் உருளும்

லாரிகளின் சக்கரம்..

 

நோய்க்  கொடுமை

பசிக் கொடுமை

உசுரே இப்ப சுமையாப் போச்சு

 

பட்டினியாம்  பட்டினி

வறுமையும்  கண்ணீரும்

சிறந்த  கூட்டணி.

 

                       —ப. வித்யாஸ்ரீ,

                          திருவள்ளூர் மாவட்டம்.

 

…………………………………………..